Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் - புலம் பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும்
#82
புூனைக்குட்டி! புூனைக்குட்டி!! புூனைக்குட்டி!!!

வணக்கம்

இதுவரை நடைபெற்ற வாதங்களும், தொகுப்புரைகளும் 179 பக்கங்களை எட்டிவிட்டன. அதிலே புூனைக்குட்டி வைத்த வாதம் மட்டும் 52 பக்கங்கள்! ஆரம்பம் - தொடக்கம் தொடங்கி, முடிவு வரை அனைவரது வாதங்களையும் அலசி ஆராய்ந்து தனது வாதத்தை மிகவும் விபரமாக எழுதிவைத்துள்ளார்.

தலையங்கமே தமக்கு வலுச்சேர்க்கின்றது என்று ஆரம்பித்தார். சீரழிவுகள் உடலியல், உளவியல், ஒழுக்கவியல், சமூகவியல், பொருளாதாரவியல் என்பனபோல் பிரித்து அலசுகின்றார். எதிரணியினரின் வாதங்களுக்கு நல்ல சாட்டையடியும் கொடுத்துள்ளார்.

உளவியல் மாணவியான இவரால் இணையத்தால் ஏற்படும் உளவியல், உடலியல் தாக்கங்களை நன்றாக அறிய முடியும் என்பது உண்மை. மலிவாகப்பெறப்படும் கணனிகளால் பார்வை பழுதாகின்றது, உடல் வெப்பநிலை பாதிக்கப்படுகின்றது, உடல்நிலை பாதிப்புக்கள் என்பன ஏற்படுகின்றன என்றார். இணையத்தால் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களைப்போல் ஆக்கப்படுகின்றார்கள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்கிறார். அப்படியா? இவர் கூறுவதை நம்பலாமா? எதிரணியின் என்ன கூறப்போகின்றீர்கள்?

முகமூடி நபர்களால் களத்தில் மனக்கசப்புக்கள், ஏமாற்றங்கள், பகையுணர்வுகள் ஏற்படுகின்றன. ஆபாச வார்த்தைகள் பகிரங்கமாகவே பலருடனும் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன. கட்டுப்பாடற்ற அநாமதேயர்களின் ஆதிக்கம் அதிகரிப்பதால் இளைஞர்களின் மனதை பாலியல் வக்கிரம் நிறைந்ததாக மாற்றுகின்றது. இவர்களுடன் பரிமாறும் நிழற்படங்கள் துர்ப்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றன. இவர்களுக்கிடையே ஏற்படும் இணையக்காதலுக்கும், பின்னர் பாலியல் உறவுக்கும் இது இலகுவாக வழிவகுக்கின்றது. இதனால் ஏற்படும் விபரீதங்கள் பலவாகி இறுதியில் தற்கொலைக்கும் வழிவகுக்கின்றது என்கிறார். அவற்றிற்கு உண்மையில் நடந்த உதாரணங்களும் சில தந்தார். அருகிருக்கும் சமூகத்திலிருந்து விலகுவதற்கும், பணவிரயம் செய்வதற்கும், தாய்மொழிப்பயிற்சியைக் கறைப்பதற்கும் இணையம் துணை போகின்றது என்று அடுக்கிக்கொண்டே போகிறார்.

பெண்கள் கருத்தியல் வன்முறைகள் எல்லா இடங்களிலும் நடக்கின்றன என்றார். எதிரணித்தலைவர் இளைஞனின் கருத்திற்கு, முகமூடி உறவுகள் ஆணா பெண்ணா? இளைஞரா முதியவரா? யார் யார் என்று அறியமுடியாமல் இருக்கிறதென்றார். சரி, எனக்கொரு சந்தேகம். இளைஞனை "அண்ணா" என்று அப்படி அவ்வளவு நம்பிக்கையோடு அழைக்கிறார்? அவர் ஓர் "அண்ணி" யாக இருந்தால்? (சும்மா பேச்சக்குத்தான் கேட்டேன்)

சாதி, சமைய பாகுபாட்டை வெளிப்படையாகக் காட்டுகின்றவைகளையும், யாழ் களத்திலேயே மதவெறியைக் காட்டி நிற்கும் கருத்துக்களையும் நான் காட்டத்தயார் நீங்கள் தயாரா? என்கிறார். புத்தகங்களில் இருப்பவைபோல் இணையத்தில் இருப்பவை உண்மையில்லை, தேடியெடுப்பதும் கடினம் என்கிறார் உண்மையா?

முன்னர் சினிமா நடிக, நடிகைகளின் படங்களை புத்தகங்களுள்ளும், அறைச்சுவர்களிலும் ஒட்டி வைத்திருந்தார்கள். விஞ்ஞானத்தின் முன்னேற்றத்தினால் இப்போது கணனித்திரையிலே போட்டு வைக்கிறார்கள். அம்மா அப்பாவினுடைய படங்களை எத்தனைபேர் போட்டு வைத்திருக்கின்றார்கள் என்றும் கேட்கிறார். பதில் சொல்லுங்கள்.

எதிரணியினர் குறிப்பிட்ட TYO அமைப்புக்களில் இணையத்தளங்களைப் பார்க்குமாறு கூறியதற்கு அங்கே ஆக்கபுூர்வமான எதுவுமில்லை என்றார். அப்படித்தானா?

விரிவுரைக்குப் போகாத மாணவர்களை பிறகு பிறகு என்று சொல்லிச்சொல்லி சோம்பேறி ஆக்கும் என்கிறார். தமக்காகவும், சொந்தங்களுக்காகவும், நாட்டுக்காகவும் ஓடியோடி உழைக்கும் புலம்பெயர் பெற்றோருக்கு மேலும் ஒரு வேலையை அதாவது அவர்களின் பிள்ளைகளைக் கட்டுப்படுத்தும் கஸ்டத்தையும் கொடுக்கலாமா? என்;பதுபோல் கேட்கிறார்.

இணையத்தருட்டு, இணைய எழுத்துச்சுதந்திரம் பற்றிச் சாவல் விடுகிறார். எதிரணியினரே அவர் கேட்பதுபோல் எழுதமுடியுமா? சினிமாச் சீரழிவுகள் வேறு, இணைய சீரழிவுகள் வேறு என்றும் சுட்டிக்காட்டுகின்றார்.

மரணப்படுப்கையில் இருந்த தமிழ் இன்று சுடுகாட்டை நோக்கிப் போகின்றதா? அவசரத்தில் எழுதினாலும் தமிழைக்கொலை செய்யக்கூடாது என்று எண்ணினால் அதனை யாராலும் செய்யமுடியும் என்றே நான் எண்ணுகிறேன்.

கவனிப்பாரில்லையா? இப்படியே போனால் தமிழ் புதைகுழிக்குள்ளே போகும் அல்லது சாம்பலாகிப்போய்விடும் என்கிறார். சுடுகாட்டிற்குப் போனால் இப்படியான ஒன்றில்தானே முடியும் பிறகென்ன சந்தேகம்?

தமிழை தவறாக எழுதக்கூடாது என்கின்ற புூனைக்குட்டியின் இந்தக் கருத்தையும் நான் முழுதாக வரவேற்கின்றேன். எழுத்துப்பிழை ஏற்பட்டால் பொருட்பிழையும் கூடவே வரும்தானே! இதற்கு உதாரணமாக உங்கள் வசனத்தையே எடுத்துக்காட்டுகிறேன்.

2. உளவியல் தாக்கங்கள்
இதிலே இரண்டாவது பந்தியில்:- நேரடியாக இணையத்தை போதைப்பொருளோடு உப்பிட முடியாத போதும்... என்று வருகின்றது. இங்கே ஒப்பிட முடியாத போதும் என்று வந்திருக்க வேண்டும். ஒ வை, உ என்று எழுதியதால் பொருளே வேறுபட்டு நிற்கின்றது. (இதனை நான் முன்னர் கவனித்தபோதும் குறிப்பிட விரும்பவில்லை ஆனால் இதுபற்றி என்னையே கேள்வி கேட்டதால்தான் எடுத்துக் காட்டினேன்)

நல்ல நண்பர்கள் கிடைக்காத நச்சுப் பாலமான இணையத்தில் இளைஞர்கள் தேடுவது முதலாவது காதல்தான் என்று கூறி, எதிரணி அஜீவனின் வயதையே சந்தேகக்கண்ணோடு பார்ப்பதுபோல் தெரிகின்றது. அதுமட்டுமில்லாமல் களத்தில் முகமூடி உறுப்பினர்கள் பலர் மனித உணர்வுகளையே மதிப்பதில்லை என்கிறார் உண்மையா? அடுத்த அறையிலேயே இருந்துகொண்டு அண்ணனும் தங்கையும் இணையத்திலே கடலைபோட்டுக் காதலித்த கொடுமையை கேள்விப்படவில்லையா? எதுக்கும் எல்லோரும் எச்சரிக்கையாக இருங்கள் என்கிறார் குட்டிப்புூனை.

பகட்டானவைகளைப் பார்த்து மயங்குபவர்கள் தாங்களல்ல என்கிறார். நிகழ்காலத்தை விடுத்து எதிர்காலத்தைப் பற்றிக் கனவு காணபவர்களும் தாங்களல்ல என்கிறார். தமிழ் நெட்டும், புதினமும்தான் நம்பிக்கையான தளங்களா? நடுவீட்டு நாட்டாமையாக வந்து உட்கார்ந்துவிட்ட இணையத்தளங்களின் தீமைகளால் சீரழிந்துபோனவர்களின் எண்ணிக்கை நன்மையடைந்தவர்களைவிட பன்மடங்காகும் என்று கூறி "வெளுத்ததெல்லாம் பால்" என்று நம்பவேண்டாம் என்றும் எச்சரிக்கிறார். பழமை - புதுமை, தலிபான் - தமிழீழம் இரண்டிற்குமுள்ள வேறுபாடுகளையும் குறிப்பிட்டார்.

நன்மை அணியினர் நன்மையடைகின்றார்கள் என்று சொல்வதற்கு எதுவுமேயில்லை, சும்மா வார்த்தைகளால் கோலம் போடாது வாதங்களை முன்வையுங்கள் என்று நினைவுூட்டவும் சொல்கிறார்.
இணையத்தைப் பாவிக்கும் புலம்பெயர்ந்த தமிழ் இளையோரின் எண்ணிக்கையை இரண்டு இடங்களில் இரண்டுவிதமாகக் குறிப்பிட்டிந்தாலும் அதனால் சீரழிந்தவர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் என்கிறார்.

நாரதருக்கு நன்றியும் சொல்கிறார். இல்லாத கடவுளில் பாவத்தைக்கொட்டுவது முட்டாள்தனம். இருக்கும் இணையத்தை ஆதாரமாகக் காட்டுவது அப்படியல்ல என்கிறார். எதற்குமே உதவாத ஆலய ஆதிமுலத்தில் இருக்கும் கல்லை (கடவுளை) இணையத்திற்கு ஒப்பிடுவது மொக்குத்தனம் என்கிறார். (இதனால் எத்தனைபேர் வரிந்து கட்டிக்கொண்டு வரப்போகிறார்களோ தெரியாது).

ஆடினால் மனுசர், ஆட்டப்பட்டால் பொம்மை, கண்ணுக்கு முன்னால் விரியும் திரையில் கெட்டவைகள் எல்லாம் கூட்டாளிகளோடு வந்து பாய் விரித்துப்படுத்திருக்கின்றன தெரியவில்லையா? என்கிறார். இணையத்தைக் கட்டுப்படுத்துவது சுூரியனை தங்கள் போர்வையால் மூடுவதுபோல்தான் என்கிறார். வீட்டிலே பெற்றோர் காவல் என்றால் பிள்ளைகள் அதனை வீதியில் இருக்கும் internet cafe இல் தமது ஆவலைத் தீர்த்துக்கொள்கிறார்கள் என்றும் கூறுகின்றர்.

பாதையிலே உள்ள கல்லில் கால் மோதினாலும், கல் வந்து காலில் மோதினாலும் காயம் எங்களுக்குத்தான். போதையிலே இருக்கும் எதிரணியினர் எது சொன்னாலும் கேட்கமாட்டார்கள். ஒரு தத்துவத்தைச் சொன்னாலும் அதை நகைச்சுவை என்கிறார்கள். இணையம் இருக்கிறதென்ன துணிவில் மாணவர்கள் எல்லாம் வீட்டுவேலைகளை ஏனோதானோ என்றுதான் செய்கிறார்கள் முன்னர்போல் எதுவுமில்லை என்கிறார்.

இணையம் பல நாடுகளிலிருக்கும் உறவுகளோடு புரிந்துணர்வை வளர்க்கவில்லை. மாறாக தனிநபர் தாக்குதல்களுக்கும், து}ய்மையற்ற காதல் களியாட்டங்களுக்கும், கண்ட கண்ட தேவைகளுக்குமே இந்த புறச்சுூழலில் இருக்கும் கவர்ச்சி காட்டும் இணையம் பயன்படுகின்றது என்கிறார்.

மேடைப் பட்டிமன்றங்களிலே அடிதடி சண்டைகளா நடக்கின்றன? கற்பனையில் கண்டுகொண்டிருக்கும் கள உறவுகளைக் கண்டால் கற்பனைகள் உடைந்து சிதறியும்விடும். வாய் வீரரெல்லாம் மௌனவிரதம் இருப்பார்கள் என்று தீர்க்கதரிசனமாகக் கூறுகின்றாரா?

தமிழ் வலைப்பதிவினை வாசிப்பவர்கள் எத்தனைபேர்? இவர் கூறுவதை எதிரணியினர் ஏற்றுக்கொள்வார்களா? பெரியாரின் வரிகளை சீரழிவுகளுடன் ஒப்பிடுகிறார். இதனை ஏற்றுக்கொள்ளலாமா? மனக்கட்டுப்பாட்டை உடைக்கின்றது, தன்னை நம்பி மட்டும் வாழவைக்கின்ற ஒரு சீரழிவுச்செயலை இணையம் செய்கின்றது என்கிறார்.
புூனைக்குட்டி ஒவ்வொருவருடைய வாதத்திற்கும் எதிராக தன் வாதத்தை வைத்திருக்கிறார். ஒவ்வொன்றையும் வரிக்குவரி நன்றாகப் படித்து நன்மைகளைவிட தீமைகளே அதிகம் அதிகம் என்கிறார். இனி எதிரணியினர்தான் வந்து பதில் கூறவேண்டும்.

மேடையில் நடக்கும் பட்டிமன்றங்களிலே என்றால் ஒவ்வொருவருக்கும் சமமான நேரம் கொடுக்கப்படும். நேரமாகிவிட்டால் நடுவர் மணி அடிப்பார், அல்லது எழுந்து சென்று மெதுவாக நேரமாகிவிட்டது என்று கூறுவார் அல்லது சிறு காகிதத்தில் எழுதிக்கொடுப்பார் அல்லது வேறு ஏதோ எல்லாம் செய்வார். ஆனால் இங்கே என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறோம். அனுபவம் தானே வரவேண்டும் என்று கூறுவார்கள். இனிமேல் வரும் கள பட்டிமன்றங்களில் விதிமுறைகள் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இதனையும் ஓர் எடுத்துக்காட்டாக எடுத்துக்கொள்ளலாம் என்று எண்ணுகிறேன். நேரம் பொன்னானது என்பது எல்லோர்க்கும் பொருந்தும் அல்லவா?
நன்றி

Reply


Messages In This Thread
[No subject] - by Selvamuthu - 12-28-2005, 09:53 PM
[No subject] - by இளைஞன் - 12-29-2005, 06:54 PM
[No subject] - by sOliyAn - 12-29-2005, 09:49 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:32 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:48 PM
[No subject] - by sOliyAn - 12-30-2005, 12:05 AM
[No subject] - by tamilini - 12-30-2005, 12:42 AM
[No subject] - by Selvamuthu - 12-30-2005, 01:52 AM
[No subject] - by அனிதா - 12-30-2005, 06:34 PM
[No subject] - by tamilini - 12-30-2005, 08:22 PM
[No subject] - by ப்ரியசகி - 12-31-2005, 05:50 PM
[No subject] - by tamilini - 12-31-2005, 09:03 PM
[No subject] - by Vishnu - 01-01-2006, 02:57 PM
[No subject] - by tamilini - 01-01-2006, 11:10 PM
[No subject] - by MUGATHTHAR - 01-02-2006, 10:32 AM
[No subject] - by tamilini - 01-02-2006, 05:09 PM
[No subject] - by Snegethy - 01-02-2006, 09:37 PM
[No subject] - by tamilini - 01-03-2006, 01:07 AM
[No subject] - by வியாசன் - 01-05-2006, 08:49 PM
[No subject] - by வியாசன் - 01-06-2006, 08:42 PM
[No subject] - by tamilini - 01-06-2006, 10:51 PM
[No subject] - by AJeevan - 01-07-2006, 12:56 AM
[No subject] - by tamilini - 01-07-2006, 05:03 PM
[No subject] - by அருவி - 01-10-2006, 11:42 AM
[No subject] - by tamilini - 01-10-2006, 01:30 PM
[No subject] - by Selvamuthu - 01-14-2006, 02:19 AM
[No subject] - by Mathan - 01-16-2006, 11:49 PM
[No subject] - by Selvamuthu - 01-17-2006, 04:20 AM
[No subject] - by pulukarponnaiah - 01-17-2006, 10:02 PM
[No subject] - by tamilini - 01-18-2006, 09:24 PM
[No subject] - by வர்ணன் - 01-19-2006, 03:55 AM
[No subject] - by Selvamuthu - 01-19-2006, 11:30 PM
[No subject] - by வன்னியன் - 01-20-2006, 05:34 PM
[No subject] - by Selvamuthu - 01-21-2006, 01:43 PM
[No subject] - by kurukaalapoovan - 01-23-2006, 03:11 AM
[No subject] - by Selvamuthu - 01-24-2006, 03:51 PM
[No subject] - by Eswar - 01-25-2006, 01:52 AM
[No subject] - by tamilini - 01-25-2006, 02:33 PM
[No subject] - by Mathuran - 01-26-2006, 12:09 AM
[No subject] - by tamilini - 01-26-2006, 11:16 PM
[No subject] - by Thala - 01-27-2006, 12:29 AM
[No subject] - by tamilini - 01-27-2006, 01:04 PM
[No subject] - by மேகநாதன் - 01-27-2006, 07:03 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 12:25 PM
[No subject] - by Nitharsan - 01-28-2006, 07:13 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 11:58 PM
[No subject] - by stalin - 01-30-2006, 12:00 PM
[No subject] - by RaMa - 01-31-2006, 10:10 AM
[No subject] - by Selvamuthu - 02-01-2006, 02:48 AM
[No subject] - by narathar - 02-01-2006, 10:14 PM
[No subject] - by Selvamuthu - 02-03-2006, 02:31 AM
[No subject] - by தூயவன் - 02-04-2006, 04:08 AM
[No subject] - by Selvamuthu - 02-06-2006, 12:32 AM
[No subject] - by Rasikai - 02-07-2006, 10:35 PM
[No subject] - by Selvamuthu - 02-09-2006, 12:04 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:19 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:22 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:24 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:25 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:26 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:31 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:32 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:33 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:35 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:37 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:39 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:41 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:42 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:43 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:44 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:45 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:46 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:52 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:56 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:58 AM
[No subject] - by Selvamuthu - 02-11-2006, 10:18 PM
[No subject] - by Vasampu - 02-13-2006, 05:22 PM
[No subject] - by Selvamuthu - 02-15-2006, 12:22 PM
[No subject] - by kuruvikal - 02-15-2006, 09:38 PM
[No subject] - by Selvamuthu - 02-16-2006, 01:11 PM
[No subject] - by sOliyAn - 02-22-2006, 05:53 PM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:55 AM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:59 AM
[No subject] - by Selvamuthu - 03-09-2006, 09:50 PM

Forum Jump:


Users browsing this thread: 2 Guest(s)