02-11-2006, 05:51 PM
மலையகத்தைச் சேர்ந்த படித்த இளைஞர் ஒருவர் தனக்கு ஏற்பட்ட சோக அனுபவத்தை உருக்கமான முறையில் எழுதியிருக்கிறார்.
இவர், விளம்பரமொன்றைப் பார்த்து பதவி வெற்றிடங்களில் ஒன்றுக்கு விண்ணப்பித்திருந்தார். இரண்டு மாதங்களுக்குப் பின், நேர்முகப் பரீட்சைக்கு அழைப்பு வந்தது.
ஆவலுடன் சென்ற இவருடன் மற்றும் 24 பேருக்கு நேர்முகப் பரீட்சை மிக நுணுக்கமாக நடந்தது. இவர்களில் 18 பேர் தெரிவு செய்யப்பட்டு இரண்டாவது நேர்முகப் பரீட்சைக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
அந்த நேர்முகப் பரீட்சையிலும் இந்த இளைஞர் வெற்றி பெற்றார். இவருடன் மற்றும் இரண்டு இளைஞர்களும் மூன்று யுவதிகளும் தெரிவு செய்யப்பட்டனர்.
இத்துடன் விட்டுவிடுவதாயில்லை. மற்றொரு நேர்முகப் பரீட்சை நடத்தப்பட்டு அதில் மேற்படி ஆறு பேரின் நியமனம் உறுதி செய்யப்பட்டது.
இரண்டு வாரங்கள் சென்ற பின் நியமனக் கடிதத்தை வந்து பெற்றுக் கொள்ளும்படி அழைப்பு வந்தது. இந்த இளைஞருக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே கிடையாது. தான் செய்து வந்த வேலையிலிருந்து விலகி விட்டு தனது புதிய பதவிபற்றி உறவினர்கள், நண்பர்களிடமெல்லாம் பெருமையாகத் தெரிவித்தார்.
நியமனக் கடிதத்தைப் பெறச் சென்றபோது அங்கு இன்னொரு அதிகாரி, தானும் நேர்முகப் பரீட்சை நடத்தப் போவதாக தெரிவித்து, சம்பந்தமில்லாத கேள்வியைக் கேட்டார். பின்னர், "ஐ ஆம் ஸொரி, இந்த வேலைக்குரிய திட்டத்தை ஆரம்பிக்கக் குறைந்தது ஒரு வருடமாவது செல்லும், அப்போது அறிவிக்கிறோம்" என்றார்.
இருந்த வேலையையும் விட்டுவிட்டேன். ஊர் திரும்பி அவர்களுக்கு என்ன பதில் சொல்ல போகிறேன்? என்று நினைக்க தனக்குத் தலை சுற்றத் தொடங்கிவிட்டதாம்.
இது எவ்வளவு பெரிய அநியாயம்! இப்படி கடைசி நேரத்தில் காலை வாரி விடுவோர் இருக்கும்போது, ஒரு காலை நன்றாக ஊன்றும் வரை மறுகாலை எடுக்கவே கூடாது தம்பி!
http://www.thinakural.com/New%20web%20site...ry/11/index.htm

[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
</span>