02-11-2006, 11:14 AM
காதல் பற்றிய கதை
ட்ராமாவைப் பற்றிக் கதைப்பம் எண்டு வாணி கத்தினபோதும் யாரும் அதைக் கணக்கெடுத்ததாத் தெரியேல்லை. பிரியன் மட்டும் "உனக்கு இப்ப இங்கை என்ன அலுவல்" எண்டு மட்டும் கேட்டுவிட்டு ஒதுங்கிவிட்டான். வாணி இதுகள் திருந்தாதுகள் எண்டது மாதிரி ஒரு பார்வை எல்லாரையும் பாத்தாள்.
"ட்ராமா பற்றி பிறகு கதைப்பம். முதலில பட்டிமன்றம் இருக்கோ இல்லையோ" எண்டு ஆரோ தங்கடை சந்தேகத்தினை தூக்கிப் போட்டினம். வசந்தனுக்கு பட்டிமன்றம் பிடிக்காது. அதை கண்ணிலையும் காட்டக் கூடாது. 'கற்பில் சிறந்தவள் கண்ணகியா மாதவியா எண்ட மருத்துவப் பரிசோதனை நடக்கிற இடம் அது எண்டு அவன் ஆக்களுக்கு சொல்லுவான். எண்டாலும் ஒரு தலைவரா அவன் சிந்திச்சுப் பார்த்தான். வாற சனத்துக்கு ஒரு Entertainment இருக்க வேணும் எண்டதுக்காக பட்டிமன்றத்துக்கு அவனும் ஒத்துக் கொண்டான். ஆரும் கேட்டால் மக்கள் விரும்பிறதைத்தானே குடுக்க வேணும் எண்டோ இல்லாட்டி உலகமயமாக்கலில இதெல்லாம் சகஜம் எண்டோ சொல்லுவம் எண்டும் மனசுக்குள்ளை குறிச்சு வைச்சுக் கொண்டான்.
"உண்மையான காதல் என்பது கல்யாணத்துக்கு முதலிலா இல்லாட்டி பிறகா வருகுது எண்டதை தலைப்பா வைப்பம்" எண்டான் ஒருத்தன்.
வசந்தனுக்கு உண்மையான காதல் எண்டால் என்ன பொய்யான காதல் எண்டால் என்ன எண்டு ஒண்டும் விளங்கேல்லை. மனசும் மனசும் மட்டும் நேசிக்கின்ற, ஆத்மார்த்தமான எண்ட மாதரியான விழல் விளக்கங்களை அவன் நம்பிறதேயில்லை. காதல் ஆரம்பிக்கிறதே வெறும் உடல் ஈர்ப்பாலைதான் எண்டது அவன்ரை நம்பிக்கை. அதுக்குப் பிறகு போகப் போக, பழகப் பழக ரண்டு பேருக்கும் உணர்வு ரீதியான ஒரு ஈர்ப்பும் புரிந்துணர்வும் வருகுது எண்டதை அவன் புரிஞ்சு கொண்டிருந்தாலும் அது சாதாரணமாக அதிக காலம் எவரோடு பழகினாலும் வாற புரிந்துணர்வு தான் எண்டதையும் விசேஷமாக குறித்து சொல்ல அதில எதுவும் இல்லையெண்டதையும் வசந்தன் விளங்கி வைச்சிருந்தான்.
"எடியே நான் ஒண்டு சொல்லட்டே?" எண்டு கேட்டு விட்டு பதிலுக்கு காத்திராமல் சொல்லத் தொடங்கினாள் வாசுகி!
"பதினெட்டு வயசு வரைக்கும் நாங்கள் விரும்பின பொடியளோடை சுத்தவேணும். பதினெட்டில இருந்து இருபத்தினாலு வயசு வரைக்கும் படிப்பில கவனம் செலுத்தி வேலைக்கு போய் காசு சேக்க வேணும். இருபத்தினாலு வயசில வீட்டில அம்மா பாக்கிற மாப்பிளையை கலியாணம் கட்டி சந்தோசமா இருக்க வேணும்" அவள் சொல்லி முடிக்கவும் எல்லா பெட்டையளும் ஓ எண்டு கத்தி அவளுக்கு தார்மீக ஆதரவு குடுத்தாளவை.
"கவனமடி.. உதை வெளியில சொல்லிப்போடாதை.. எல்லாக் கோட்டிலையும் கேஸ் போட்டுவிடுவாங்கள்" எண்டு ஒருத்தன் சொல்லி தனக்கும் உலக நடப்புக்கள் தெரியும் எண்டதை உறுதிப்படுத்திக் கொண்டான்.
வசந்தன் காதலைப்பற்றி கொஞ்சம் யோசிக்கத் தொடங்கினான். காதல் எண்ட பேரில பெடியள் பெட்டையள் பார்க் சினிமா எண்டு சுத்திறதிலை அவனுக்கு எந்தக் கருத்தும் இல்லை. அது சம்மந்தப்பட்ட ரண்டு பேரோடை பிரச்சனை எண்ட அளவில யோசிச்சாலும் காதலில சிலர் செய்யிற திருகுதாளங்கள் அவனுக்கு சிரிப்பைக் கொண்டு வரும்.
நிறையப் பேர் தங்கடை இயல்பை மறைச்சுக் காதலிக்கிறது ஏன் எண்டு அவனுக்கு விளங்கேல்லை. உண்மையான காதல் புனிதமான காதல் எண்டு கதை சொல்லுற சிலரும் தாங்கள் அனுப்பின sms க்கு அடுத்த நிமிசத்தில் பதில் வராட்டி தங்கடை காதல் முறிஞ்சு போச்சுதோ எண்டு பயந்து போகினம். வரச்சொன்ன நேரத்துக்கு அவள் வராட்டி தங்கடை காதல் முறிஞ்சு போச்சுதோ எண்டு பயப்பிடுகினம். போன் பண்ணி வேறேதோ காரணங்களினால் அவள் அதை எடுக்காட்டில் தங்கடை காதல் முறிஞ்சு போச்சுதோ எணடு பயப்பிடுகினம். பயந்து பயந்து சாகிறது எண்டு சொல்லுவினமே அப்படி செத்து செத்து காதலிக்கிற அவையை நினைச்சால் பாவமாயிருக்கும் அவனுக்கு.
என்ரை எல்லாப் பலவீனங்களும் தெரிஞ்சு, என்ரை கோப தாபங்களை உணர்ந்து, நான் சண்டைபிடிக்க அனுமதித்து, என்னோடு எந்தச் சஞ்சலமுமில்லாமல் சண்டைபிடிச்சு காதலிப்பது எத்தனை வித்தியாசமானது என வசந்தன் நினைச்சுக் கொண்டான்.
என்ரை பலவீனங்கள் தெரிஞ்சாலும் இந்தக் காதல் முறிஞ்சு போகாது எண்ட நம்பிக்கை, என்ரை கோபதாபங்களை எப்பிடிக் காட்டினாலும் என்ர காதல் முறிஞ்சு போகாது எண்ட நம்பிக்கை, நான் என்ன சண்டை பிடிச்சாலும் இந்தக் காதல் முறிஞ்சு போகாது எண்ட நம்பிக்கை இருக்கும் ஒரு ஆணும் அதே நம்பிக்கை இருக்கும் ஒரு பெண்ணும் காதலித்தல் எல்லோருக்கும் கிடைக்காத வித்தியாசமான அனுபவம் தான்.
சண்டையின் உச்சக்கட்டத்தில் இனி உனக்கும் எனக்கும் கதை இல்லையெண்டு சொல்லி தொலைபேசிகளை அடித்து வைக்கும் அந்தக் கணத்திலும் அவளை நான் காதலிக்கிறேன் என்றும் அவனை நான் காதலிக்கிறேன் என்றும் அவனும் அவளும் நினைக்கின்ற காதல் எத்தனை பேருக்கு கிடைத்திருக்கும்?
என் இயல்பு எதுவென்று தெரியாத நிலையில் காதலிக்கப்படுவதிலும் பார்க்க என்னை முழுதாய் தெரிந்து இவன் இவ்வளவும் தான் இதை தவிர இவனிடமிருந்து எதையும் எதிர்பார்க்க முடியாது என இயல்பு தெரிந்து காதலிக்கப்படுவதே இன்பம் எண்டு முடிவெடுத்தான் வசந்தன். அதையே அங்கை இருந்த எல்லாருக்கும் சொன்னான்.
"போடா மக்கு! நான் என்ரை கோபத்தில அவனோடை எரிஞ்சு விழுந்தன் எண்டால் போடி எண்டுபோட்டு போயிடுவான்.." எண்டாள் வாசுகி
"போகட்டும் விடு" எண்டான் வசந்தன்.
நன்றி - சாரல் / சயந்தன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>