Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ்நாட்டை நோக்கி மீண்டும் `படகு அகதிகள்'
#2
<b>ஈழத் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை 456ஆக அதிகரிப்பு! </b>

இலங்கையிலிருந்து தனுஸ்கோடி அரிச்சல்முனை கடற்கரைப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை மேலும் 25 தமிழர்கள் அகதிகளாக வந்தனர்.


யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளில் இருந்து 13 குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள்௧4, பெண்கள்- 06, ஆண் குழந்தை- 01, பெண் குழந்தைகள்- 04 ஆகிய 25 பேர் பேசாலை கடற்கரையில் இருந்து வியாழக்கிழமை இரவு 8 மணிக்குப் புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு தனுஸ்கோடி அரிச்சல்முனை கடற்கரைப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

பின்னர், அங்கிருந்து வான் மூலம் முகுந்தராயர்சத்திரம் காவல்துறை சோதனை சாவடிக்கு வந்த அகதிகளிடம் கடற்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

இதனையடுத்து, அகதிகள் 25 பேரையும் தனுஸ்கோடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பைபர் கிளாஸ் படகு வாடகையாக தலா ரூ. 5 ஆயிரம் கொடுத்து வந்ததாக விசாரணையின்போது அவர்கள் கூறினர்.

இதனைத் தொடர்ந்து அனைவரையும் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

வெள்ளிக்கிழமை வரை தமிழகம் வந்த அகதிகளின் எண்ணிக்கை 456 ஆக உயர்ந்துள்ளது.

வவுனியாவில் இருந்து வந்த சமாலா (23) கூறியதாவது:

சிறிலங்கா இராணுவத்தினரின் நடவடிக்கையால் பெண்கள் வீதிகளில் நடமாட முடியவில்லை.

எந்தநேரத்தில் இராணுவத்தினர் வந்து பெண்களை எங்கு தூக்கிச் செல்கின்றனர் என்பது தெரியவில்லை.

எனக்குத் தெரிந்தே இரு பெண்களை இராணுவத்தினர் தூக்கி சென்றனர். ஆனால், அவர்களின் நிலைமை பற்றி தெரியவில்லை என்றார்.

<i><b>தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i>
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 02-11-2006, 06:06 AM
[No subject] - by Sukumaran - 02-11-2006, 02:54 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)