![]() |
|
தமிழ்நாட்டை நோக்கி மீண்டும் `படகு அகதிகள்' - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: தமிழ்நாட்டை நோக்கி மீண்டும் `படகு அகதிகள்' (/showthread.php?tid=1360) |
தமிழ்நாட்டை நோக்கி மீண்டும் `படகு அகதிகள்' - sanjee05 - 01-15-2006 இலங்கையிலிருந்து நேற்று சனிக்கிழமை மேலும் 5 அகதிகள் படகுகள் மூலம் தமிழ்நாட்டிற்கு சென்றுள்ளதையடுத்து அச்சம் காரணமாக இதுவரை இராமேஸ்வரம் பகுதிக்குச் சென்றுள்ள தமிழ் மக்களின் தொகை 38 ஆக அதிகரித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையிலான சமாதான முயற்சிகள் முறிவடைந்து மீண்டும் போர் மூளலாம் என்ற அச்சம் காரணமாக உண்டாகியுள்ள நெருக்கடி தமிழ்நாட்டின் இராமேஸ்வரம் பகுதியில் உணரப்படுகின்றது. மூன்று வருட கால இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் இலங்கையிலிருந்தது நாளாந்தம் தமிழ் மக்கள் படகுகள் மூலம் இராமேஸ்வரம் கடற்கரைப் பகுதிக்குச் சென்ற வண்ணமுள்ளனர். மன்னாரிலிருந்து 10,000 ரூபா செலுத்தி மீன்பிடிப் படகுகள் மூலம் பலர் இராமேஸ்வரம் சென்றுள்ளனர். 1980 களில் தமிழ் நாட்டிற்குப் பெருளவு இலங்கைத் தமிழர்கள் தஞ்சம் கோரி செல்வதற்கு காரணமாகவிருந்த யுத்தத்தைப் போன்று மீண்டுமொரு யுத்தம் மூளலாம் என அவர்கள் அச்சம் வெளியிட்டனர். இலங்கையில் எமது உயிருக்கு கடும் அச்சுறுத்தல் நிலவுகின்றது. நாங்கள் கடும் அச்சம் கொண்டுள்ளோம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கையில் இராணுவம் எங்களை சுடுகின்றது. குழந்தைகளைக் கூட கொல்கின்றது. பெண்களுக்கு எதிராக குற்றங்களில் ஈடுபடுகின்றது என இலங்கை தமிழ் அகதிகள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, இந்திய- இலங்கை கடற்பரப்பில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது இந்திய மீனவர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை கடற்படையினரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் தமிழ்நாட்டு மீனவர் ஒருவர் காயமடைந்தார். இந்திய கடற்படையும் கரையோர காவற்படையும் சர்வதேச கடற்பரப்பில் தமது பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன. தமிழ்நாடு அரசாங்கம் கச்சதீவில் மீன் பிடிப்பதற்கான உரிமையை மீளப் பெற வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அதேவேளை, தமிழ்நாடு பொலிஸார் மிகுந்த எச்சரிக்கையுடனுள்ளனர். இலங்கையில் மீண்டும் யுத்தம் மூண்டால் பெருமளவு அகதிகள் இராமேஸ்வரத்திற்கு செல்லும் சாத்தியக்கூறுகள் அதிகமாகவுள்ளன. இதேவேளை, தமிழ்நாட்டில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளதால் மத்திய, மாநில அரசுகளுக்கு இது கடும் பாதுகாப்புப் பிரச்சினையாக மாறலாம். http://www.thinakkural.com/New%20web%20sit...y/15/news-4.htm - மேகநாதன் - 02-11-2006 <b>ஈழத் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை 456ஆக அதிகரிப்பு! </b> இலங்கையிலிருந்து தனுஸ்கோடி அரிச்சல்முனை கடற்கரைப் பகுதிக்கு வெள்ளிக்கிழமை மேலும் 25 தமிழர்கள் அகதிகளாக வந்தனர். யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார் ஆகிய பகுதிகளில் இருந்து 13 குடும்பங்களைச் சேர்ந்த ஆண்கள்௧4, பெண்கள்- 06, ஆண் குழந்தை- 01, பெண் குழந்தைகள்- 04 ஆகிய 25 பேர் பேசாலை கடற்கரையில் இருந்து வியாழக்கிழமை இரவு 8 மணிக்குப் புறப்பட்டு வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு தனுஸ்கோடி அரிச்சல்முனை கடற்கரைப் பகுதிக்கு வந்து சேர்ந்தனர். பின்னர், அங்கிருந்து வான் மூலம் முகுந்தராயர்சத்திரம் காவல்துறை சோதனை சாவடிக்கு வந்த அகதிகளிடம் கடற்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இதனையடுத்து, அகதிகள் 25 பேரையும் தனுஸ்கோடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பைபர் கிளாஸ் படகு வாடகையாக தலா ரூ. 5 ஆயிரம் கொடுத்து வந்ததாக விசாரணையின்போது அவர்கள் கூறினர். இதனைத் தொடர்ந்து அனைவரையும் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமுக்கு அனுப்பி வைத்தனர். வெள்ளிக்கிழமை வரை தமிழகம் வந்த அகதிகளின் எண்ணிக்கை 456 ஆக உயர்ந்துள்ளது. வவுனியாவில் இருந்து வந்த சமாலா (23) கூறியதாவது: சிறிலங்கா இராணுவத்தினரின் நடவடிக்கையால் பெண்கள் வீதிகளில் நடமாட முடியவில்லை. எந்தநேரத்தில் இராணுவத்தினர் வந்து பெண்களை எங்கு தூக்கிச் செல்கின்றனர் என்பது தெரியவில்லை. எனக்குத் தெரிந்தே இரு பெண்களை இராணுவத்தினர் தூக்கி சென்றனர். ஆனால், அவர்களின் நிலைமை பற்றி தெரியவில்லை என்றார். <i><b>தகவல் மூலம்- புதினம்.கொம்</b></i> - Sukumaran - 02-11-2006 முன்னம் மன்னாருலருந்து அகதிண்ணு வந்ததா செய்தி போட்டாங்க.. இப்ப வவுனியாலருந்து அகதியா வந்ததா செய்தி பொடுறாங்க.. இவங்கெல்லாம் அகதியா தெரியல்லயே.. எல்லாம் பப்பிளிசிட்டி கம்பெய்ன் மாதிரில்லாருக்கு? |