Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வெட்கம் வருமா?- வேதனை வருமா-?
#1
மணி இரவு 11 ஐ- தாண்டுகிறது- அவரவர்க்கு இருந்த ஆயிரம் கடமைகள் முடித்துவந்து-படுக்கையின் மீது மெதுவாய் சாய்கிறோம்-

வெப்பமேற்றியின் சீரான தொழிற்பாட்டில் - அறை முழுக்க இதமான சூடு- காதுவரை போர்வையால் மூடிக்கொண்டு கண்களை மெதுவாய் மூடுகிறோம்- கனவு-!

20 வருஷம் ஓடிட்டுது - அதே கனவில்-
இப்போ மனசுகள் கனவு மரத்தின் கிளைகளில் -!
- பேசுகின்றன-!

"யாழ்களம் என்னு ஒன்னு இருந்திச்சே- ஒரு காலம்- எவ்ளோ சந்தோசமான -காலம்!-
அது ஒரு அழகிய நிலாகாலம்-!"

"சகோதரா- அப்போலாம் - நீ பேசுறது சரிதான் என்று தெரிந்தும்- எப்பிடியாவது உன்னை வெல்லணும்- உன் கருத்தை என் கருத்து வென்றது என்று யாரும் சொல்லணும் என்றதுக்காகதான் போரிட்டேன் - வாதிட்டேன் -
இப்போ அதற்காய் -நான் வெக்க படவா? வேதனை படவா?" - ஒரு மனசு!

"நண்பா- புரியாமல் நான் வாதிடுகிறேன் என்றதை நீ எத்தனை முறை சுட்டிக்காட்டியும்- அதனை புரிந்துகொண்டும்- புரியாத மாதிரி -இணையதளத்துக்குள்ளேயே- ஒரு எல்லை சண்டை தொடர்ந்தோமே- இப்போ அதுக்காய்- வெட்கப்படவா-? இல்லை...................??" இன்னொரு மனசு!

"பாதி வழியில் நின்று கொண்டு எந்த வழி- என் வழி என்று எனக்கு தெரியாது - என்ற பொழுதிலும்- ஜாதிக- கெல -உறுமய -செய்வதுதான் சரி என்று "மாற்றுக்கருத்து வைத்தேனே" வெட்கப்படவா? வேதனை------??"மற்றும் ஒரு மனசு!

"நியாயமாய் நடப்பவன் நானென்று- பிறர் அறிந்து-பொறுப்பொன்று கொண்டேன் - என் - சக்தியெலாம் காட்ட போய்- களங்கமில்லாமல் கதைத்தவர் கருத்தையெல்லாம்-

"நிற்பதுவே- நடப்பதுவே-பறப்பதுவே" என்று ஹரிஸ் ராகவேந்திரா குரலில் பாடுறேன் என்ற நினைப்பில் களத்திலிருந்து அப்புறப்படுத்தினேனே-
வெட்க....? ----------- வேதனை...........?"-மனச்சாட்சியை தானே கேக்கும் மனசு!

"மாவீரர் நாளதிலும்- காதல் பத்தி கவிதை பகுதியில் எழுதி தொலைச்சேனே-!
அழுகிறது - இன்னொரு மனசு-!"

டொக்கென்று தலையில் யாரோ குட்டியது போல உணர்வு- கனவு கலைந்தது- அட எல்லாமே சும்மா-சும்மா- என்றபடி மனசு மறுபடியும் முருங்கை மரத்தில்-! 8) :roll:
-!
!
Reply


Messages In This Thread
வெட்கம் வருமா?- வேதனை வருமா-? - by வர்ணன் - 02-11-2006, 05:18 AM
[No subject] - by RaMa - 02-11-2006, 06:27 AM
[No subject] - by வர்ணன் - 02-11-2006, 06:29 AM
[No subject] - by MUGATHTHAR - 02-11-2006, 06:36 AM
[No subject] - by RaMa - 02-11-2006, 06:38 AM
[No subject] - by Mathan - 02-11-2006, 09:57 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)