02-10-2006, 11:42 AM
RaMa Wrote:வேறு ஒன்னுமில்லைங்க.ரமாக்கா... பெண்ணுங்க கண்ணுக்கு மை அடிச்சுக்கிட்டு வாய்க்கு லிப்சிடிக் அடிச்சுகிட்டுண்ணு....குறைஞ்சைத கூட்டி காட்டி இல்லாததை இருக்கிறதாய் காட்ட றை பண்ணிக்கிட்டு பசங்களை கவர் பண்ணிக்க பார்க்கிறாங்களில்லயா...அது மாதிரி தானும பசங்களும் விதம் விதமாக வேசம் போடறது பொண்ணுக்காக தானுங்க..narathar Wrote:RaMa Wrote:narathar Wrote:ம் அடுத்த பட்டி மன்றத்துக்கு தேவயான தலைப்பு மாதிரி இருக்கு.எனக்கு ஆனா ஒரு விசயம் விளங்கேல்ல?இப்ப பெண்களை கவர அவை அப்படி உடுகினமெண்டால் ,உங்கள அது கவராட்டி ,யாருக்காக அவை அப்படி உடுக்கினம்?அவர்களால் கவரப் பட்ட பெண்கள் உண்டா? அல்லது உங்களுக்கு வயசாயிட்டுதா? ம்...........
நராயணா நராயணா நராயணா
நராதர் வந்திட்டார். இனி கலகம் தான்.
நராதரே யாருக்கு வயசாயிட்டுது யாருக்கு வயசாகவில்லை என்பது இங்கு முக்கியம் இல்லை. உப்படி உடுப்பு போட்டுக்கொண்டு திரிகிறவையை நாம் மனிசராகவே நினைப்பதில்லை. நல்ல தமிழ் பெண்ணுக்கு அவர்கள் எவ்வளவு விலைக்கு வெள்ளி சங்கிலி வாங்கி போட்டாலும் அது நம்ம பார்வைக்கு நாய் சங்கிலி தான். அவர்கள் பிஎம்டபிள்யு என்று இல்லை என்ன போட்ஸ் கார் கொண்டு வந்தாலும் அது நமக்கு ஒன்றும் செய்யாது. இதுகளை எல்லாம் போடுவது ஒழுங்கான தமிழ் பெண்களை கவர்வதற்கு இல்லை. ஒழுக்கமின்றி பெற்றோர்களின் பேச்சை கேட்கமால் நம்ம காலச்சாரத்துக்கு கெட்ட பெயர் வாங்கி கொண்டு திரியினம் கொஞ்ச பேர் அவர்களுக்கு தான் இவர்களின் இந்த நாகரிகம் பிடிக்கும்.
அத்துடன் இத்தனையா பெண்களை தேடி தான் அவர்களும் போவார்கள் என்னென்றால் அப்படியென்றால் தானே 1 மாதத்தில் விட்டு விட்டு மற்ற பெண்ணிடம் போகலாம்.
ம் அது எப்படி அவர்கள் போட்டிருக்கும் உடுப்பைப் பார்த்து அவர்கள் அப்படி எண்டு சொல்லலாம்?
இப்ப நீங்க என்ன உடுப்புக்கள் போடுறனியள்?சீலையா அல்லது அரைப் பாவடையா?தமிழரின் உடுப்புக்கள் இப்ப கொஞ்சக் காலத்திற்கு முன்னம் அது தானே?அதுக்க முன்னம் மேலாடை இல்லாம சீலை அதுக்கு முன்னர் தலைபாகையும் ,முண்டாசும், அதுக்கு முன்னம் கோவணம்.
இப்ப நீங்க இங்க போடுற உடுப்புக்களோட ஊருக்குப் போனால் அல்லது நீங்க இங்க போடிருக்கிறதை அங்க இருகிறவை போட்ட சனம் உங்களைப் பாத்தும் அப்படித் தானே சொல்லும்?இதுகள் இங்க வசதியா இருக்கு எண்டு சொல்லுவியள்,அப்ப பொடியளும் காத்தோட்டமா இருக்கட்டும் எண்டு அப்படி லூசாப் போடலாம் தானே? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நீங்கள் போடுங்கோ. அது நடக்கும் போது விழ விழ தூக்கி கொண்டு ஒடுங்கோ. யாரு வேண்டாம் என்று சொன்னது? ஆனால் அவைகளை கண்டு தான் தமிழ் பெண்கள் மயங்கினம் என்றும் அந்த நாகரிகத்தை தான் ரசிக்கின்றார்கள் என்று சொல்லவேண்டாம். அத்துடன் பெண்களுக்காக தான் நாங்கள் அப்படி போடுகின்றொம் என்று கதை வேண்டாம்.

