Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பங்குனி எட்டு வருகிறதாம்
#2
shanthy Wrote:பங்குனி 8.

பங்குனி எட்டு வருகிறதாம்
பாரில் பெண்கள் எழுகினமாம்.
வருசம் ஒருநாள் கொண்டாட்டம்
வாய்க்கு நல்ல சொல்லுணவு.
இன்னும் பெண்கள் விடியவில்லை
இனியும் து}க்கம் ஏன் தோழி ?


வானலையெங்கும் விழாக்கோலம்
வார்த்தைகள் உன்னை அழைக்கிறது.
ஏனடி பெண்ணே உன்னுறக்கம்
இன்னும் கலையாக் கண்ணுறக்கம்.
எழுந்திடு எழுந்திடு பெண்ணுலகே
உனக்காயொரு நாள் வருடத்தில்
உண்டு என்பதை மறந்தாயோ ?


பங்குனி எட்டின் வரவையெங்கள்
பார்வைகள் எல்லாம் பார்க்கிறது.
இங்கினி ஊர்வலம் , ஆர்ப்பாட்டம் ,
இதர இலக்கிய போராட்டம்.
பங்குனி எட்டில் படைத்திடணும்
பாரில் எம்மை உணர்த்திடணும்.


கொள்கை , லட்சியம் , கொடிபிடித்தல்
எல்லாம் அன்று உரைத்திடணும்.
பங்குனி ஒன்பது விடியும் முன்னம்
புரட்சிகளெல்லாம் முடித்திடணும்.
இனியொரு பங்குனி விடியுமட்டும்
பழையதையெல்லாம் அடுக்கி வைத்து
பணிகள் யாவும் முடித்திடுவோம்.

27.01.04
உந்தத் தினத்துக்கு தவறாமல் உணர்ச்சி ததும்ப விடுதலை கானம் பாடின நமது இளைஞன் தம்பிகூட மக்சிக்கன்.. மக்நகற்ஸ் ருசி பிடிச்சிட்டானாம்.. நீங்களும் அதுக்குள்ளை..
<!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&Big Grin--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail
Reply


Messages In This Thread
Re: பங்குனி எட்டு வருகிற - by Mathivathanan - 01-30-2004, 12:52 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)