![]() |
|
பங்குனி எட்டு வருகிறதாம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: பங்குனி எட்டு வருகிறதாம் (/showthread.php?tid=7545) |
பங்குனி எட்டு வருகிறத - shanthy - 01-29-2004 பங்குனி 8. பங்குனி எட்டு வருகிறதாம் பாரில் பெண்கள் எழுகினமாம். வருசம் ஒருநாள் கொண்டாட்டம் வாய்க்கு நல்ல சொல்லுணவு. இன்னும் பெண்கள் விடியவில்லை இனியும் து}க்கம் ஏன் தோழி ? வானலையெங்கும் விழாக்கோலம் வார்த்தைகள் உன்னை அழைக்கிறது. ஏனடி பெண்ணே உன்னுறக்கம் இன்னும் கலையாக் கண்ணுறக்கம். எழுந்திடு எழுந்திடு பெண்ணுலகே உனக்காயொரு நாள் வருடத்தில் உண்டு என்பதை மறந்தாயோ ? பங்குனி எட்டின் வரவையெங்கள் பார்வைகள் எல்லாம் பார்க்கிறது. இங்கினி ஊர்வலம் , ஆர்ப்பாட்டம் , இதர இலக்கிய போராட்டம். பங்குனி எட்டில் படைத்திடணும் பாரில் எம்மை உணர்த்திடணும். கொள்கை , லட்சியம் , கொடிபிடித்தல் எல்லாம் அன்று உரைத்திடணும். பங்குனி ஒன்பது விடியும் முன்னம் புரட்சிகளெல்லாம் முடித்திடணும். இனியொரு பங்குனி விடியுமட்டும் பழையதையெல்லாம் அடுக்கி வைத்து பணிகள் யாவும் முடித்திடுவோம். 27.01.04 Re: பங்குனி எட்டு வருகிற - Mathivathanan - 01-30-2004 shanthy Wrote:பங்குனி 8.உந்தத் தினத்துக்கு தவறாமல் உணர்ச்சி ததும்ப விடுதலை கானம் பாடின நமது இளைஞன் தம்பிகூட மக்சிக்கன்.. மக்நகற்ஸ் ருசி பிடிச்சிட்டானாம்.. நீங்களும் அதுக்குள்ளை.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
|