02-10-2006, 01:52 AM
Quote:புலம்பெயர்ந்ததால் புலம்பெயர்ந்த நாடுகளில் வாசிக்கும் பெற்றோர்களுக்கு அறிவில்லையா? நல்ல கண்டுபிடிப்பு. ஐயா நடுவர் அவர்களே, சிற்றுந்து ஓட்டத் தெரியாத பெற்றோர்கள் நிறைய பேர் புலம்பெயர்ந்த நாடுகளில் இருக்கிறார்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள். அவர்களுக்கு புலம்பெயர் சிற்றுந்து ஓட்டுனருக்கான விதிமுறைகள் தெரியாது தான். ஆனாலும் சிற்றுந்தில் பயணிக்கும் போது "கவனமா ஓட்டு தம்பி", "பார்த்துப் போ ராசா", "சிவப்பு விழுந்திட்டு", "வேகத்த கொஞ்சம் குறை" போன்ற பல அறிவுரைகளைக் கேட்கலாம். ஆக ஆபத்துகள் இருக்குமிடத்து அறிவுரைகளையும் கண்காணிப்புகளையும் பெற்றோர்கள் செய்யட்டும், செய்யத் தவறின் அது இணையத்தின் தவறல்ல. கடவுள் சிலையில் தலையைக் கொண்டு போய் முட்டினாலும் ஆபத்துத்தான்.இதுதானுங்கோ இந்த நூற்றாண்டின்ர பென்னாம் பெரிய நகைச்சுவை. எந்தநேரமும் அம்மாவும் அப்பாவும் பிள்ளை போற இடத்துக்கெல்லாம் காரில போய்த் திரியினம் தானே. ஆர் கண்டது பக்கத்தில அம்மா அப்பா இருக்கேக்கயும் வேகமா ஓட்டுற ஆக்கள் இருக்கினந்தானே. அப்பிடி ஒட்டிக்கொண்டு போக கடைசில பிள்ளையோட சேர்ந்து அம்மா அப்பாவும் பரலோகம் போகவேண்டிய நிலைமை வருதோ யார் கண்டிச்சினம். புலம்பெயர்ந்த நாடுகளில எந்தநேரமும் பிள்ளைக்கு பக்கத்தில நிண்டு அறிவுரை சொல்லுற அளவில தாய்தகப்பன்ர நிலமை இல்ல. கண்டிச்சு அடிச்சு திருத்துறதுக்கும் புகலிடச் சூழலில இடமில்ல. இப்பிடியான நிலைமையில இணையம் மோசமா இளைஞர்கள பாதிக்குது. சரி வீட்டில பிள்ளை நாள்முழுக்க இணையத்தில என்ன செய்யுது எண்டுற சநஇதேகத்தில தாய்தகப்பனும் இணையத்தை நிப்பாட்டி வைக்கினம் எண்டு வைச்சுக்கொள்ளுவம். internet cafe எண்டு இப்ப வீதிக்கு வீதி பல இடங்களில இருக்குத்தானே. இதுகளில சீரழிவு விசயங்கள செய்யிறதுக்கு தடையில்லாம வாய்ப்புகள் நிறைய கொடுக்கப்படுதுதானே.
Quote:புத்தகத்தில வெட்டி ஒட்டினால் கண்டுபிடிப்பது கடினம். இணையத்தில் வெட்டி ஒட்டினால் கண்டுபிடிப்பது மிக இலகு. வேகமாகவும், நேரம் செலவளிக்காமலும் தகவல்களையும் பயனுள்ள விடயங்களையும் பெற்றுக்கொள்வது தவறு என்கிறீர்களா? படித்தபாடம் மனதில் நிற்பதற்கு அது எவ்வளவு வேகமாக கிடைக்கிறது என்பது முக்கியமில்லை. பாடம் பிடித்ததாக இருக்குவேண்டும். படிக்கவேண்டும் என்கிற எண்ணம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்குவேண்டும். அப்பதான் பாடம் மனதில் நிற்கும். இலகுவாகக் கிடைப்பது உங்களுக்கு பொறுக்கவில்லையா? அப்படியென்றால் எதையும் சிக்கலானதாகவும், சிரமப்பட்டதாகவும் செய்யத்தான் நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? தன்நம்பிக்கையை இணையம் வளர்க்கவில்லை என்று சும்மா மேலோட்டமாக சொன்னால் எப்படி? பக்கத்தில் இருந்து பரீட்சை எழுதும் நண்பனின் திறமையில் நம்பிக்கை வைத்து பரீட்சை எழுதுகிற இளைஞர்கள் போன்றவர்கள் எப்பொழுதும் அப்படித்தான் இருப்பார்கள். இணையம் தன்நம்பிக்கையை வளர்க்கவில்லை என்றுதானே சொன்னீர்கள். தன்நம்பிக்கையை இல்லாமல் செய்கிறது என்று சொல்லாதவரையில் சீரழிந்துபோகவில்லை என்பதாக உறுதிப்படுத்திக்கொள்ளமுடியும்.வேகமாவும் நேரம் செலவளிக்காமலும் தகவல்கள பெறுறத தவறெண்டு நாங்க ஒண்டும் சொல்லலயே. பெறுற தகவல்கள ஆராயம அதில இருக்கிற உண்மையள விளங்கிக்கொள்ளாம பொய்யான தகவல்களையும் சேர்த்து பெறுகினம் எண்டு தான் சொல்லுறம். பாடம் பிடிச்சிருந்தாத் தான் படிக்கலாம் எண்டுற உங்கட தத்துவத்த என்ன சொல்லுறது. அப்பிடிப் பார்த்தா பள்ளிக்கூடத்தில முக்காவாசிப்பேர் படிக்காமலே இருக்கவேண்டியதுதான். படிக்கவேண்டும் எண்டுற எண்ணத்த மெல்ல மெல்லமா இணையம் இல்லாமச் செய்திருக்கு பலபேருக்கு. அதுக்கு இணையத்தில இருக்கிற மோகமும் இணையத்தில விடிய விடிய இருந்து அடிக்கிற அரட்டையுந்தான் காரணம். தன்னம்பிக்கை இல்லாதவைய தன்னம்பிக்கை இல்லாதவையாவே வைச்சிருக்கிறதும் சீரழிவுதான். இதுகூட விளங்காம அரைவேக்காட்டுத்தனமா இனியும் கதைச்சா எனக்கு கோவம் வரும் சொல்லிட்டன்.
Quote:சித்தர் தல அவர்களே நேரங்களை செலவளிக்காமல் கல்வித்தகவல்களை வேகமாக மாணவர்களால் பெற்றுக்கொள்ள முடிகிறது என்கிற உண்மையை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி. மிகுதி இருக்கிற நேரங்களில் குறிக்கோளில்லாத பயணங்களைத் தொடர்கிறார்கள் என்றால் அது அவர்களின் இயல்பான குணாம்சமே. அப்படியென்றால் வேகமாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்வது தவறு என்கிறீர்களா?எப்பிடிக்கா? இதெல்லாம் எப்பிடி வருது? அது தானா வருது எண்டு சொல்லப்போறியளோ. -அடச்சே- மிச்சம் இருக்கிற நேரத்தில குறிக்கோளில்லாத பயணத்த செய்யிறதுக்கு வாய்ப்ப எது கொடுக்குது? இணையம் தானே கொடுக்குது. அதான் அதால இளைஞர்கள் சீரழியினம் எண்டு சொல்லுறம். அக்கா வேகமா கல்விதகவல்கள பெற்றுக்கொண்டு பள்ளிக்கூட வேலையள நேரத்தோட செய்துமுடிக்க முடிஞ்சுதெண்டுறதெல்லாம் மலையேறிப் போச்சு. இப்ப இணையத்தில அரட்டையடிக்கோணும் இணையத்தில விளையாடோணும் எண்டுறதுக்காகவே அவசர அவசரமா இணையத்தில இருக்கிற தகவல்கள உண்மை பொய் ஆராயம எடுத்து பள்ளிக்கூட வேலைய ஏனோ தானோ எண்டு செய்துபோட்டு போற காலம் இணையத்தால ஏற்பட்டிருக்கு.
Quote:கண்ணியவான தல அவர்களே, முகம் தெரியாத நீங்கள் கண்ணியமில்லாமலா இருக்கிறீர்கள்? எத்தனை தடவை தான் நாம் சொல்வது வக்கிரங்கள் இணையத்தால் தோன்றவில்லை, உங்கள் மனதிலிருந்து தோன்றுகின்றன என்று? கனடாவில், யேர்மனியில், இலண்டனில், பிரான்சில் என்று பல்வேறு நாடுகளில் இருக்கும் இளைஞர்களோடு புரிந்துணர்வை வளர்த்துக்கொள்ள இணையம் எப்படித் துணைபுரிகின்றது என்பதை யாழ்களமூடாக உங்களால் அறிந்துகொள்ளமுடியவில்லையா? நட்புணர்வை வளர்த்துக்கொள்வதில் எம்எஸ்என் துரிததூதர் போன்றவை எப்படியான பங்கை ஆற்றுகின்றன என்பதை நான் சொல்லித் தான் நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய நிலையில் இல்லை என்று நினைக்கிறேன். வெளி உலகத்தில நடப்பவை எல்லாவற்றையும் இணையமும் செய்யவேண்டும் என்று எதற்கு எதிர்பார்க்கிறீர்கள்? தமது பள்ளி மற்றும் தொழில் சார் தேவைகளுக்கும் பொழுதுபோக்கு விடயங்களுக்கும் இணையத்தை பயன்படுத்துகிறார்கள். அதனால் நன்மையும் அடைகிறார்கள். அவர்கள் ஒன்றும் நாள்முழுக்க இணையத்துக்குள் குடும்பம் நடத்தவில்லை.வக்கிரமென்ன தன்ரபாட்டுக்கா மனசில இருந்து வருது. வெளில இருந்து தூண்டுற படியாத்தர்னே வக்கிரம் வருது. அந்த தூண்டுற வேலையைத்தான் இணையம் செய்யுது. யாழ்களத்தில புரிந்துணர்வு மட்டுமா வளருது. கனடால இருக்கிறவை சுவிசில இருக்கிறவையோட கொழுவுகினம். பிரித்தானியாவில இருக்கிறவை யேர்மனில இருக்கிறவையோட கொழுவுகினம். ஒல்லாந்தில இருக்கிறவை இந்தியாவில இருக்கிறவையோட கொழுவுகினம். யாழில நடக்கிற தனிநபர் தாக்குதல்கள் எல்லாம் புரிந்துணர்வால வாறதுதானோ? எம்எஸ்என்னில காதல் பண்ணி சீரழிஞ்சுபோனவையின்ர வரலாற்ற எடுத்து வைக்கவா? பள்ளிசார் தொழில்சார் விசயங்களுக்கு பாவிக்கிறவையெல்லாம் குறைவு. சும்மா கண்ட கண்ட தேவையளுக்கு பாவிக்கிறவை தான் கூட. இணையத்தில குடும்பம் நடத்துறத நீங்க பாக்கலயா? விடிய விடிய இருந்து இணையத்துக்குள்ள அரட்டையடிக்கிறவையின்ர சோக வரலாற்ற நாங்க கண்டிருக்கிறம். குறைஞ்சது ஒருநாளைக்கு 6 மணித்தியாலமாவது இணையத்தில இருக்கிற இளைஞர்களின்ர எண்ணிக்கை அதிகம். 6 மணித்தியாலத்தையும் பள்ளித் தேவைக்கும் தொழில் தேவைக்கும் பயன்படுத்திற இளைஞர்களின் எண்ணிக்கை அதில மிக மிக சொற்பமக்கா.
Quote:சமூகச் சிந்தனையாளர் தல அவர்களே உங்கள் அதிசயமான சமூக ஆய்வுக்கு நன்றி. எதை நாம் அதிகம் நேசிக்கிறோமோ அதற்கு நாம் அடிமைப்பட்டுப்போகிறோம். "அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சே". இணையம் இளைஞருக்கு போதைப் பொருள் ஆகிவிட்டது என்று சொல்கிறீர்கள். எதனால் இணையம் போதைப்பொருள் ஆகிறது? அதிகமாக அதில் அவனை ஈர்க்கிற ஒரு சக்தி இருக்கிறது. இதன் பொருள் என்ன? அவன் இயல்பாய் இருப்பதற்கு தேவையான ஒரு சக்தி வெளியுலகத்தில் அவனுக்கு குறைந்து போயுள்ளது என்பது தானே? வெளியுலகில் அவன் இயல்பாய் இருப்பதற்கான சூழல் இருந்திருக்குமானால் இணையத்துக்குள் மூழ்கிப் போவதற்கு அவனுக்கு என்ன தேவையிருக்கிறது? ஆக தவறுகள் புறச்சூழலால் நிகழ்கிறதே ஒழிய இணையத்தால் அல்ல.ஓமக்கா இளைய சமூகம் சீரழிஞ்சு போகக்கூடாதெண்ட நினைக்கிற தல அண்ணா சமூக சிந்தனையாளர் தான். புதுமை புரட்சி எண்டுற பேரில சீரழிவுகள மறைச்சு இளம் சமூகத்த கெடுக்க நினைக்கிற நீங்கள்?
புறச்சூழல் எண்டுறதுக்குள்ள இணையமும் இருக்குத்தானே? இணையம் என்ன அகச்சூழலா? ஆக மொத்தத்தில இணையத்துக்குள்ள மூழ்கிப் போகினம் எண்டுறத ஒத்துக்கொள்ளுறீங்க தானே. வெளி உலகத்தில இளைஞர்கள் இயல்பா இருக்கிறதுக்கான சூழலில இருந்து திசைதிருப்பி கவர்ச்சிகாட்டி கவிழ்த்தி வைச்சிருக்கு இணையம். ஏற்கனவே நாங்க சொல்லிட்டம் இண்டைக்கு புகலிடத்தின்ர புறச்சூழலில இணையமும் ஒரு அங்கமா இருக்கெண்டு. அதால புறச்சூழலில இருந்து இணையத்த தனிய பிரிச்சு பார்த்து கருத்த வைச்சீங்க எண்டா அதில அர்த்தமிருக்காது.
Quote:தல(வெறும்) அவர்களே இராவணன் வெட்டிய வெட்டுக்களில் தெரிவது இணையத்தின் சீரழிவுகள் அல்ல - ஒவ்வொரு களஉறுப்பினர்களின் தனப்பட்ட பண்பு. இணையமில்லாமல் ஒரு கருத்தாடலை ஒரு அறையில் வைத்து நடத்தினால் இதைவிட மோசமான விளைவுகளை (வன்முறைகள், ஆயுதங்களுடனான சண்டைகள்) சந்திக்க நேரிடும் என்பதை உணர்க. அப்படியான பாதிப்புகளிலிருந்து காத்து எதுவித இரத்தமும், காயமும் இன்றி ஒரு கருத்தாடலை நடத்த துணைபுரிகிறது என்பதை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.சரிங்கோ அக்கா. அப்ப உங்க நடக்கிற பட்டிமன்றங்களில எல்லாம் அடிதடி தானே நடக்குது. நல்ல கற்பனை. முகம் மறைச்சுக்கொண்டிருக்கிறதால தான் ஒவ்வொராக்கள பற்றியும் ஒவ்வொராக்களுக்கும் ஒவ்வொரு கற்பனையள். நேரில பாத்தா அதெல்லாம் உடைஞ்சு போயிடும். இங்க இணையத்தில எழுத்தில வீரங் காட்டுறவையெல்லாம் நேரில வாய மூடிக்கொண்டிருப்பினம். சந்திச்சுப் பார்க்கப் போறியளோ? சரி அந்தக் கதையெல்லாம் எதுக்கு. நேரில சந்திச்சு கதைக்கிறதால வாற புரிந்துணர்வு இணையத்தில வரப்போறதில்ல. சரி இரத்தமும் காயமும் இல்லாமல் இணையத்தில பட்டிமன்றம் நடத்தலாமெண்டுறீங்க. இதுகள விட பெரிய பாதிப்பான மனக்காயங்கள இணையமூடா செய்யலாம் எண்டுறது தெரியாதோ?
Quote:மீண்டும் மீண்டும் வாக்குமூலங்களை அளித்து எமது அணியின் நியாயத்தை வலுப்படுத்த உதவிபுரிந்த எதிரணி நண்பர் தல அவர்களுக்கு எமது மனப்பூர்வமான நன்றிகள். அவரே ஒத்துக்கொள்கிறார்: எந்த ஒரு விடயமாக இருந்தாலும் சீரழியாமல் கட்டுப்படுத்துவதற்கும் அதனூடாக நன்மையடைவதற்கும் சில சட்டதிட்டங்கள், வரையறைகள் தேவைப்படுகிறது. ஒரு நாட்டை எடுத்துக்கொள்வோம். அந்த நாட்டில் வன்முறை, களவு, பாலியல் தொல்லைகள் என்று பல குற்றச்செயல்கள் இருக்கின்றன. அதற்காக அந்த நாடே சரியில்லை, அந்த நாட்டால் நன்மையில்லை என்று சொல்வது எவ்வளவு பெரிய அபத்தம். குற்றங்களுக்கு பின்னாலிருப்பது நாடு (மக்களில்லாமல் நாடு இல்லை) அல்ல நாட்டுமக்கள். அதேபோலத்தான் இணையத்தில் நீங்கள் குறிப்பிடும் ஒருசில சீரழிவுகளுக்கு பின்னாலிருப்பது இணையமில்லை, மாறாக அந்த இணையத்தின் பயனர்கள் தான் என்பதை புரிந்துகொள்க. நாட்டில் சில விடயங்களை பயன்படுத்த சில சட்டவரைமுறைகள் இருப்பதுபோல, வீட்டிலும் இணையப்பாவனைக்கான கட்டுப்பாடுகளைக் கடைப்பிடியுங்கள்.நாங்க புதுசா ஏதோ ஒத்துக்கொண்டமாதிரி கதைக்கிறீங்க. நாங்க தொடக்கத்திலயே சொல்லிட்டம் தானே. இணையத்தில நல்லவிசயங்களும் இருக்கு. ஆனா எங்கட இளைஞர்கள் நல்லதெல்லாத்தையும் பாவிச்சு நன்மையடையிறேல. கெட்டதுகளில தான் குறியா இருக்கினம். அப்பிடியிருக்கிற இளைஞர்களுக்கு இணையம் வாய்ப்புகள் வழங்குது சீரழிஞ்சுபோறதுக்கு. அதால இளைஞர்கள் சீரழியாம இருக்கோணுமெண்டா அதுக்கு கட்டுப்பாடுகள் தேவை என்று ஏற்கனவே சொல்லிட்டம் தானே. எங்கதான் உங்கட உதாரணங்கள தேடியெடுக்கிறியளோ தெரியா. ஒண்டோட ஒண்டு பொருத்தமில்லாம சொல்லுறது. நாங்க ஒண்டும் இணையத்தால நன்மையில்லையெண்டு சொல்லேல. இணையத்தால சீரழிஞ்சுபோகினம் எண்டுதான் சொல்லுறம். நாட்டில குற்றச்செயல்கள மக்கள் செய்தா அந்த நாடு சீரழிஞ்சு போகுதெண்டுதானே அர்த்தம். நாட்டில சட்ட நடைமுறைகள் ஒழுங்கா இல்லாட்டி நாட்டு மக்கள் ஒழுக்கமா நடந்துகொள்ளாட்டி நாட்டின்ர நிர்வாகம் சரியில்ல எண்டுதானே அர்த்தம். நிர்வாகம் சரியில்லாட்டி நாட்டின்ர சூழல் மக்களுக்கு குற்றங்கள செய்ய வாய்ப்பளிக்குதெண்டுதானே அர்த்தம்.

