Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் - புலம் பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும்
#78
<b>o இரசிகை அக்கா</b>

Quote:இணையத்தால் மட்டுமே புலம்பெயர்ந்த இளைஞர்கள் உயர்கிறார்கள் என்றோ உயர்ந்தார்கள் என்றோ நாம் சொல்லவில்லை. <b>இணையம் என்பது இளைஞர்களின் சிந்தனைக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது என்றே சொல்கிறோம். அவர்களின் உழைப்புக்கு பக்கதுணையாக இருக்கிறது (பக்கதுணையாக இருக்கிற ஏனைய காரணிகளோடு) என்றே சொல்கிறோம்.</b> தல அவர்கள் எழுதிய மேற்கண்ட கருத்தின் மூலம் ஒரு உண்மையை தெளிவாக ஒத்துக்கொள்கிறார். சொந்த உழைப்பால் அதாவது சொந்தச் செயற்பாட்டால் தான் ஒருவர் போற்றப்படுகிறார். அப்படியாயின் அதிலிருந்து இன்னொன்றையும் நாம் விடையாகப் பெறலாம். அது யாதெனின், ஒருவர் தனது சொந்த செயற்பாட்டால் தான் தீமையடைகிறார் அல்லது சீரழிந்து போகிறார் என்பதே அது ஆகும். இது இப்படியிருக்க இணையத்தின்மீது உங்கள் பாவங்களை சுமத்துவது எந்தவகை நியாயம் என்று சொல்லுங்கள். எதிரணியினரின் வாதங்கள் எப்படியிருக்கிறதென்றால் எல்லாக் குற்றங்களையும் தாம் செய்துவிட்டு கடவுளின் மேல் பழியைப் போடுவதைப் போல் உள்ளது. தமது பிழைகளால் தாம் அனுபவிக்கிற துன்பத்துக்கெல்லாம் "எல்லாம் அவன் செயல்" என்று அடி முட்டாள்தனமாக சொல்லிவிட்டு தம்மை பொம்மைகளாகக் காட்டிக்கொள்ளும் எதிரணியனரை என்னவென்பது?
என்னக்கா இப்பிடிச் சொல்லிப்போட்டியள். இப்ப பாருங்கோ உங்கட தலையில நீங்களே மண்ணை அள்ளிப் போட்டிட்டியள். எப்பிடியெண்டு கேக்குறியளா? இளைஞர்களின் உழைப்புக்கு பகு்கதுணையாக இளைஞர்கள் இருக்கெண்டு சொல்லுறியள். அதமாதிரித் தான் இளைஞர்களின் சீரழிவுகளுக்கும் இணையம் பக்கதுணையாக இருக்கெண்டு நாங்கள் சொல்லுறம். வளர்ச்சிக்கு பக்கதுணையாக இருக்கிறத விட சீரழிவுக்கு பக்கதுணையாக இருக்கிறது தான் அதிகமோ அதிகம். குற்றஞ்செய்யிறவைக்கு உதவி செய்யிறவையும் குற்றவாளியெல்லோ. -இத முதலும் ஆருக்கோ சொல்லிட்டன் எண்டு நினைக்கிறன்- சரி அதுக்கென்ன நீங்களும் திரும்பத் திரும்ப ஒண்டத்தானே சொல்லுறியள். பறவால்ல.
இல்லாத கடவுளில எங்கட பாவத்த கொட்டுறது நீங்க சொல்ற மாதிரி அடிமுட்டாள்தனமா இருக்கும். ஆனா இருக்கிற இணையத்தில நடக்கிற குற்றங்களுக்கு அத காரணமாக் காட்டுறதில ஒண்டும் அடிமுட்டாள்தனமிருக்கிற மாதிரி எனக்கெண்டாத் தெரியல. நீங்கள ஆடுறவரைக்குந்தான் நீங்க மனுசர். நீங்க எப்ப இன்னொண்டால ஆட்டுவிக்கபடுறீங்களோ அண்டைக்கே நீங்க பொம்மை ஆகிடுவீங்க. மதுபானம் குடிக்கிறவை குடிச்சிட்டு தெளியினம். மதுபானத்தில குளிக்கிறவை? அதான் இணையத்தில பெரும்பாலான ஆக்களுக்கு நடக்குது.

Quote:தல அவர்கள் தனது வாதத்தின் மூலம் தெட்டத் தெளிவாக பல வாக்குமூலங்களை அளித்துள்ளார். இணையம் ஒன்றையும் புதிதாக செய்துவிடவில்லை என்று அவர் குறிப்பிடுவதன் மூலம் ஏற்கனவே சீரழிந்து போய் இருக்கிறவர்களை மேலும் சீரழிக்கவில்லையென்று அல்லது தீமைகளை செய்யவில்லை என்று சொல்கிறார்.
தல அண்ணா சொன்னதையே ஒழுங்கா வாசிச்சு விளங்கிக்கொள்ள முடியல. இதுக்குள்ள நன்மை நன்மையெண்டு துள்ளிக்குதிக்கினம். -இணையம் ஒன்றையும்(ஒரு நன்மையையும்)புதிதாக செய்துவிடவில்லை- எண்டுதான் சொன்னவர்.

Quote:வானொலிகளும், தொலைக்காட்சிகளும், பத்திரிகைகளும், நூல்நிலையங்களும் ஒன்றாய் உங்கள் கண்முன் திரையில் விரிவது நன்மையில்லையா? - உங்கள் மூளைக் கலன்களின் மீது சத்தியம் செய்யுங்கள்!!! பணம் செலவழித்து எத்தனை பத்திரிகைகளைத்தான் வாங்குவது? அதிலும் எமக்கு அவசியமற்ற தகவல்களையும் சேர்த்து வாங்குகிறோம். ஆனால் இணையத்தில் வேகமாக பத்திரிகைச் செய்திகளைப் பெற்றுக்கொள்கிறோம் - பல்வேறு தரப்பு நியாயங்களையும் அறிந்துகொள்கிறோம் - எமக்கு தேவையானதை மட்டும் தெரிவுசெய்து படிக்கிறோம் - பணச்செலவு மிச்சம் - உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்கிறோம்.
நீங்கள் சொன்னதுமட்டுமா உங்கட கண்ணுக்கு முன்னால திரையில விரியுது? நீங்க சொன்னதுகளில இருந்த கெட்டவையெல்லாம் பலமடங்கு பல்கிப் பெருகி தன்னோட இன்னும் கனக்க கூட்டாளிகளையும் கூட்டிக்கொண்டு வந்து உங்கட திரையில பாய் விரிச்சு படுத்துக் கிடக்கிறது உங்களுக்கு விளங்கேலயா? மற்றது உதுகளெல்லாம் விரிஞ்சா போல உதுகள எல்லாம் நன்மைக்குத்தான் பயன்படுத்துகினம் எண்டு யார் சொன்னது. வேகமாப் படியுங்கோ அதோட வேகமா போடோணுமெண்டு செய்தியள பிழை பிழையா போடுறதையும் படியுங்கோ.

Quote:சோம்பேறித்தனத்தை இணையம் தான் இவர்களுக்கு அறிமுகப்படுத்தியது போல சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. தொலைக்காட்சிப்பெட்டிகளின் முன்னிருந்து பெறாத சோம்பேறித்தனமா? ஐயா சோம்பேறித்தனமென்பது உங்கள் உங்கள் மனம், உடல் சார்ந்தது. அதை வழிநடத்தவேண்டிய பொறுப்பு உங்களிடம் இருக்கிறது - இணையத்திடமில்லை. எங்கள் அணியில் நாரதர் தெளிவாக ஒரு கருத்தை முன்வைத்தார். செய்வதெல்லாம் செய்திட்டு "அவனன்றி ஓரணுவும் அசையாது" என்று கல்லை நோக்கி கைகாட்டுவீர்கள் - ஏனென்றால் கல் திருப்பிக் கதைக்காது என்கிற நம்பிக்கையில்.
சரிங்கோ அக்கா சோம்பேறித்தனத்த இணையம் அறிமுகப்படுத்தேல. ஆனா சோம்பேறித்தனத்த மேலும் வளர்த்துவிட்டிருக்கெண்டு சொல்லுறம். சரிங்கோ சோம்பேறித்தனம் மனமும் உடலும் சார்ந்தது எண்டு வைச்சுக்கொள்ளுவம். மனத்திலயும் உடலிலயும் நடக்கிற மாற்றங்களுக்கு எது காரணம்? சூழல்தானே? சூழலெண்டேக்க அதுக்குள்ள இணையத்தின்ர சூழலும் வருது தானே? அதால மனுசரின்ர மனசக் கெடுத்து சோம்பேறித்தனத்த கொடுக்கிற சூழல இணையம் உருவாக்கியிருக்கு எண்டு சொல்லுறம். கல்லு கடவுள் உதாரணங்களெல்லாம் மொக்குத்தனமான உதாரணம். கல்லையும் இணையத்தையும் ஒப்பிடுறியள். பல ஆயிரக்கணக்கா செயற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிற இணையத்தை கோயில் மூலக்குள்ள எதுக்குமே உதவாம வைச்சிருக்கிற கல்லோட ஒப்பிட்டு இணையத்தாலயும் இளைஞர்களுக்கு நன்மையில்லையெண்டுறத திரையில வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறியள்.

Quote:அது தவறானது.... மற்றய ஊடகங்கள் போலவே இணையமும் கட்டுப்படுத்தப்படுகின்றன... உதாரணமாக அரபு நாடுகளில் பாலியல் சம்பந்தமான தளங்களுக்கு தடை இருக்கிறது. ஏன் தமிழ் நாட்டிலும் பாலியல் தளங்களை தடை செய்ய நடவெடிக்கை எடுக்கவுள்ளார்கள் ( ஆதாரமில்லாத செய்தி என்று சொல்ல வேண்டாம். அண்மையில் ஜெயா கூறியது தான் ) மிக அண்மையில் GOOGLE க்கும் சீனா நாட்டுக்கும் ஒரு கருத்து வேறு பாடு பற்றி அனேகமானோர் கேள்விபட்டு இருக்கலாம். இதை விட அனேகமான நாடுகளில்.. ஒருவரின் இணைய நடவடிக்கைகள்.. அந்த நாட்டு பொலீசாரினால் சேகரிக்கப்பட்டு.. கோப்பாக பேணப்படுகின்றன. எப்போது அவர் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறாரோ... அப்போது அவரை பிடிப்பதற்கு அவை வழிவகுக்கும். ஆகவே தூயவன் சொல்வது போல மற்றய ஊடகங்கள் கட்டுப்படுத்த படுகின்றன.. இணையம் கட்டுபடுத்த படுவதில்லை என்பது தவறானது.
ஹா ஹா! ஹி ஹி! ho ho! he he! நல்லாச் சிரிச்சிட்டன் அக்கா. வயிறு நோகுது அக்கா நீங்க சொன்ன நகைச்சுவையைக் கேட்டு. அரபு நாடுகளில இருந்து பல பாலியல் தளங்கள் வெளில வருகுதே. அந்தத் தடையெல்லாம் தாண்டித்தானே? இருக்கிற தடையளையும் தாண்டி அரபு நாடுகளில இருக்கிற ஆக்கள் வெளில இருந்து பொற பாலியல் தளங்களயும் பாக்கினமே? அதெப்படியெண்டு சொல்லுங்கோவன். அதெல்லாம் விடுங்கோ. ஐரோப்பாவில தடை இருக்கா? அமெரிக்காவில தடை இருக்கா? ஒஸ்ரேலியால தடை இருக்கா? இங்க எல்லாம் தடையள் இல்லத்தானே. அப்ப அதால சீரழிஞ்சு போவினந்தானே. சட்டவிரோதத்த செய்யிறது மட்டும் சீரழிவில்ல. சட்டவிரோத செயல்களால அழியுறதும் சீரழிவுதானக்கா. இணையம் கட்டுப்படுத்தப்படுதெண்டே வச்சுக்கொள்ளுவம். ஆனா மற்றைய ஊடகங்கள மாதிரி கட்டுப்படுத்தக்கூடிய நிலமை இணையத்தில இல்லையக்கா. சூரியனை நீங்க போர்க்கிற போர்வையால மூடி மறைக்கிற மாதிரித்தான் உந்தக் கட்டுப்பாடுகள்.

Quote:அப்படி சொல்ல முடியாது. ஒரு தளத்தை ஒரு நாட்டில் தடை செய்தால். அது அந்த நாட்டில் வேலை செய்யாது. அப்படி செய்ய முடியும். ஒரு நாட்டில் உள்ள கருத்துக்கு எதிரான தகவல்களை தேடி பெற முடியாது செய்யவேண்டும் என்று அரசு விரும்பினால். Google போன்ற தேடல் தளங்களுடன் பேசி அதை செய்து கொள்ளலாம். அயிரக்கணக்கான மடல்களை பிரித்துபடிப்பது கடினம் தான். ஆனால் ஒரு வேலை தளத்தில் தனி மடல் பார்த்தால்.. அல்லது அனுப்பினால்.. அதை மேலதிகாரிகள் பார்வையிடலாம். உங்களது இணைய புரொவீடர்களால் உங்கள் தனிமடல்கள் பார்வையிடப்படலாம். எல்லா தனிமடல்களையும் பார்ப்பது நேரவிரயம் தான். தெரிவு செய்யபட்ட மடல்களை மட்டுமே. அவ்வாறு மடல்களை தெரிவு செய்வதற்கும் சில முறைகளை கையாளுகிறார்கள்.
சரி ஒரு தளத்த தடை செய்தா அதே விசயத்த இன்னொரு பக்கத்தில போட்டு அந்த நாட்டுக்குள்ள கொண்டரலாந்தானே? ஏன் வேற நாட்டில இருக்கிற ஆள் கூகிளில தேடியெடுத்து தடைசெய்த நாட்டுக்குள்ள தடைசெய்யப்பட்ட விசயங்கள அனுப்பலாந்தானே மின்னஞ்சலில? இதெல்லாம் இணையத்தால சீரழிஞ்சுபோற இளைஞர்களுக்கு தெரியாதா என்ன? அதுசரி நீங்க சொல்றதெல்லாத்தையும் தாண்டி இங்க பலவிசயங்கள் எப்பிடி பரிமாறப்படுது? அக்கா இப்ப ஒராள் மதுபானம் குடிக்கிறார். வீட்டில குடிக்கவேண்டாமெண்டுகினம். ஆள் வெளில போய்க் குடிக்கிறார். ஆளிட்ட காசு இல்ல. கடையில காசு இல்லாம தரமாட்டினம். ஆள் கேக்குறார். அவை குடுக்கல. அவர் கடையில களவெடுக்கிறார். முதல்தரம் தப்பிட்டார். பிறகு அடுத்தமுறையும் காசில்லாம கடையில களவெடுக்கலாம் எண்டுற துணிவு வருது. திரும்ப போறார் திரும்ப களவெடுக்கிறார். இந்தமுறை போத்தலோட சேர்த்து சிப்ஸ் பக்கற்றையும் எடுக்குறார். இந்தமுறையும் தப்பிட்டார். அடுத்தமுறை பெரிய திட்டம்போட்டு போறார். ஆனா எடுத்துக்கொண்டு வரேக்க பிடிபட்டிட்டார். காவல்துறை கைதுசெய்யுது. போய் இருந்திட்டு வெளில வாறார். இப்ப காசு குடுத்துத்தான் வாங்கணும். ஆனா காசு இல்ல. வீட்டுக்கு போறார். வீட்டில இருக்கிற சாமான்கள திருடி விக்கிறார். அதில வாற காசில வாங்கிக் குடிக்கிறார். இப்பிடிக் கொஞ்சநாள் செய்தார். வீட்டில மனுசி பிள்ளையள் சொல்லிப் பார்த்தும் கேக்கல. ஆள வெளில விட்டாச்சு. இப்ப வெளில வந்திட்டார். தனிய இருக்கிறார். வெளில போற வாற ஆக்களிட்ட பிச்சை எடுக்கிறார். கடையில வாங்கிக் குடிக்கிறார். இப்பிடி ரண்டு மூண்டுதடவை பிச்சை எடுக்கிறது நடந்திச்சு. ஆனா போகப்போக பிச்சை போட ஒருத்தரும் வரல. இவர் குடிக்கிறதுக்குத்தான் வாங்குறார் எண்டு தெரிஞ்சிட்டு. ஒருத்தரும் குடுக்கல. அதால ரோட்டுல போறாக்களிட்ட திருட வெளிக்கிடுறார். அதுகும் இரண்டு மூண்டு தடவை உதவிச்சு. பிறகு ஆக்களிட்ட கேக்குறார். குடுக்கேல எண்டோடன கத்தியெடுத்து ஒராள குத்துறார். காவல்துறை வருது. பிடிக்குது. சிறைக்கு போறார். <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->

இந்தக்கதையில இருந்து உங்களுக்கு என்ன விளங்குது?

Quote:தயவு செய்து கருத்துக்களை வடிவாக வாசியுங்கள். எம் எஸ் என் சாட் தளம் வேறு, எம் எஸ் என் மஸெஞ்சர் வேறு. சாட் தளத்தை பாலியல் பரிமாற்றங்கள் காரணமாக மூடிய மைக்ரோ சொப்ற்... ஏன் மஸெஞ்சர்களை மூடாமல் புதிய புதிய வேர்சனை அறிமுகம் செய்கிறது. இதுதான் விஸ்ணு கூறியது. தூயவனுக்கு இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். மசெஞ்சர்கள் மூலம் பாலியல் துஸ்பிரயோகம் நடைபெறவில்லையா?? உண்மையில் பார்த்தால் மெஸெஞ்சர்ளில் தான் இதற்கான வாய்ப்புகள் அதிகம் ( வீடியோ வசதியை இங்கே சொல்லாம் )
பாத்திங்களா. நல்ல அக்கா. மெசெஞ்சர்மூலம் பாலியல் துஸ்பிரயோகம் நடக்குதெண்டு நீங்களே சொல்லுறியள். பிறகு சீரழிக்கேல எண்டும் சொல்லுறியள். அப்ப பாலியல் துஸ்பிரயோகம் சீரழிவில்லையெண்டுறியளா? மெசெஞ்சர்களில வாய்ப்புகள் அதிகம் எண்டுறியள். பிறகென்ன எப்படா வாய்ப்பு வரும் பாவிக்கலாம் எண்டு பாத்துக்கொண்டிருக்கிற இளைஞர்களுக்கு கொண்டாட்டம் தானே.

Quote:அது போலத்தான்.... தூயவன் இணையம் இல்லாத காலங்களில் தேசியம் வளரவில்லை என்று யார் சொன்னது?? இப்போது இணையப்பயன்பாடு தேசியத்தின் வளர்ச்சியில் இன்னும் ஒரு தோள் குடுத்து இருக்கிறது... என்று தான் நாம் கூறுகிறோம்...
வணக்கம்! தலைப்புச்செய்திகள். வாசிப்பது பூனைக்குட்டி. யாழ்களத்தில் இப்போது நடக்கின்ற பட்டிமன்றத்தின் தலைப்பு -இணைய ஊடகத்தால் <b>புலம்பெயர்ந்து வாழும் இளையோர்கள் </b>நன்மையடைகிறார்களா? அல்லது சீரழிகிறார்களா? என்பதாகும்- நன்றி. விரிவான செய்திகள் விரைவில் தொடரும்.
நாங்க கதைச்சுக்கொண்டிருக்கிறது தமிழீழத்த பற்றியில்ல. புலம்பெயர்ந்து வாழுற இளைஞர்கள பற்றி. சரி ஏதோ கதைச்சிட்டியள். நானும் பதில் சொல்லிட்டு போறன். தேசியத்தின்ர வளர்ச்சிக்கு தோள் மட்டுந்தான் குடுக்குது. ஆனா இளைஞர்களின்ர சீரழிவுக்கு முழுசா அள்ளிக்குடுக்குது.

Quote:யாழ் வீதியில் வெறு வேலையாக அவசரமாக போகும் போது எதிரே இருக்கும் கல்லில் நாம் கவனிக்காமல் தான் மோதுகிறோம் தூயவன். இதில் நான் சொல்ல வருவது 2 விடயம்... வேறு வெலையாக போகும் போது தான் நமக்கு குறுக்கே கல் இருக்கிறது. நாம் கவனிக்காமல் தான் கல்லில் மோதுகிறோம். யாரும் காலையில் எழுந்து யாழ் வீதில கல் இருக்காம் தூயவன் சொன்னவர்.. அதில மோதுவம் என்று போவதில்லை. வேறு வேலையாக செல்லும் போது குறுக்கே வருவது அது.
ஆனால்.... இணையத்தில் ஆபாசத்தளங்கள் கணணியை இயக்கி இணையத்துக்குள் பாடசாலை ஒப்படை செய்ய போகும் போது தானாக வருவதில்லை. இளையோர்கள் தாமாகவே அங்கே போகிறார்கள். அப்படி இல்லை தாமாகவே விளம்பரங்கள் தோன்றுகின்றன என்று யாரோ சொன்ன நினைவு. நீங்கள் முதலில் அப்படியான தளங்களுக்கு போய் இருந்தால் தான் அப்படியான விளம்பரங்கள் தோன்றும். அல்லது ஆபாச தளங்களின் உறவு தளங்களுக்கு போனால் தான் அப்படியான கற்கள் உங்களுக்கு தோன்றும். அதை விட ஆபாசங்களை தடை செய்ய கணணிகளில் முடியும் . அப்படியான விடயங்களை மேற்கொண்டு அப்படியான கற்களை நீங்கள் அப்புறப்படுத்தலாம். ஆகவே தூயவன் நாரதர் சொல்ல நினைத்தது..... இணையத்தில் கல் தானாக எமது முன் தோன்றுவதில்லை... யாழ் வீதி மாதிரி. நாமாக தான் தேடி போகிறோம். இணையத்தில் சடப்பொருட்கள் இல்லாத நாம் தான் ஆபாசங்களை.... சீர்கேடுகளை தேடிப்போகிறோம். இப்போது நாரதர் கூறியதை பாருங்கள் உங்களுக்கு சரியாக தோன்றும்.
இருக்கிற படியாத்தானே தேடி போகினம் அக்கா? இல்லாட்டி ஏன் போகினம்? இங்க அதுகள தடைசெய்யிறது பிரச்சனையில்ல. ஆனா எத்தனை இளைஞர்களுக்கு அதுகள தடை செய்ய விருப்பம் வருமெண்டு சொல்லுங்கோ. அதுகள தேடித் திரியிற பருவத்தில எல்லாத்தையும் வீட்டு அறைக்குள்ள நீங்க சொன்னமாதிரி திரையில கொண்டு வந்து நிப்பாட்டி வச்சா அவையேன் அதுகள தடை செய்யினம். அக்கா மதுபானக் கடையுக்குள்ள போய் குடிக்காம நிக்கிறவை ஒரு சில ஆக்கள் தான் இருப்பினம். எல்லாரும் அப்பிடி இருக்கிறேல. அதால வாய்ப்புகள் கொடுத்த குற்றங்கள் செய்யிறதுக்கும் சீரழிஞ்சுபோறதுக்கும் அநேகமான ஆக்கள் தயாராத்தான் இருக்கினம். நீங்க தேடிப் போறீங்களோ அது தானா வருதோ மொத்தத்தில அது அங்க இருக்கு அதுவும் எல்லாரும் காணுற இடமா திறந்துகிடக்கு. அதான் பிரச்சனை. அக்கா கல்லு எங்களில வந்து மோதினா என்ன கல்லில நாங்கபோய் மோதினா என்ன காயம் வரப்போறது எங்களுக்குத்தானே. அப்ப நாங்க என்ன சொல்லுவோம் கல்லால காயம்பட்டிட்டு எண்டுதானே சொல்லுவம். இப்ப நாங்க சொல்லுறது உங்களுக்கு விளங்குதோ?

Quote:இங்கே எய்தவன்.. தானாக சீர்கேடுகளை தேடும் இளையவன். ஆகவே இணையம் சீரழிக்கவில்லை. கெடுகிறேன் பந்தயம்பிடி என்று திரியும் இளையவர்கள் தான் தாமாகவே கெட்டு போகிறார்கள். இணையத்தில் அறிவு பசியை போக்குபவர்கள் பயன் பெற்று மேலே சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்.
என்னத்த சொன்னாலும் கேக்கமாட்டியள். என்ன செய்யிறது போதையில இருக்கிறியள். நாங்க சொல்லுறது ஏறவா போகுது. ஏதோ கடமையெண்டு ஒண்டு இருக்கெல்லோ.
ஒரு மரம் பட்டுப்போகோணுமெண்டாலும் அதுக்கு நீங்க சொன்ன புறக்காரணியள் வேணும். நீங்க அழுறீங்க கண்ணீர் வருதெண்டா தானாவா வருது? ஏதோ ஒண்டு நடந்திருக்கோணுமெல்லோ. தூசு விழுந்திருக்கணும். மனசு கவலைப்பட்டிருக்கணும். நீங்க உணர்ச்சிவசப்பட்டிருக்கணும். இப்பிடி ஏதாவது காரணமிருக்கணும். தூசு விழுறது புறக்காரணி ஆனா மனசு கவலைப்படுறது சொந்தக்காரணமெண்டு சொல்லவாறியள்தானே? மனசு எதுக்கு கவலைப்படுது யாராவது பேசியிருப்பினம். ஏதாவது ஒண்டு வெளில நடந்திருக்கும். இதுகள் புறக்காரணியள் தானே. இதமாதிரித்தான் ஒராள் கொலை செய்யுதெண்டா சும்மா தன்ரபாட்டுக்குபோய் செய்யுறாரா? அவர் அத செய்யிறதுக்கு ஏதோ ஒரு காரணமிருக்குந்தானே? ஏதோ ஒண்டு அவருக்கு தூண்டுகோலா இருக்குந்தானே? சும்மா காரணமில்லாம சிலபேர் செய்யுறவையெண்டு நீங்க சொல்லலாம். அவைக்கு மனநோய். அப்ப தாங்களா கெட்டுப்போற இளைஞர்களுக்கு மனநோயெண்டுறியளா? சரி அப்படி மனநோயால சீரழிஞ்சு போகினம் எண்டு சொன்னா அந்த மனநோய்க்கு என்ன காரணமெண்டு பார்ப்பமன்? மனநோய் எதால வந்திச்சு? அதத்தான் அது இணையத்தால வந்திச்சு எண்டு நாங்க சொல்லுறம். இண்டைக்கு புலம்பெயர்ந்த நாடுகளில -இளைஞர்கள் சீரழிஞ்சுபோறதுக்கு- புறக்காரணிகளில முக்கியமான ஒரு இடத்தில இந்த இணையமும் இருக்கெண்டுறது வேதனையான உண்மையெண்டுறம்.

Quote:இந்த ஆண்டுக்குரிய மிகப்பெரிய நகைச்சுவை (சிறந்த நகைச்சுவை 2006). அதென்ன முதிர்ந்த வியாபாரி? முதிர்ந்த வியாபாரி இளைஞராக இருக்க முடியாதா? - தொழில் உதவியாளர்களும், பணியாளர்களும், பொறியியலாளர்களும் இளைஞர்களாக இருக்க முடியாதா? -இவர்களின் தொழில்ரீதியான செயற்பாடுகளுக்கு இணையம் தன்னாலான பங்களிப்பை செய்யவில்லையா?
எந்தளவு பெரிய தத்துவத்த தல அண்ணா சொல்லியிருக்கிறார். அத ஆழமா பாத்து புரிஞ்சுகொள்ளாம நகைச்சுவையெண்டு போட்டியள். பறவால்ல உங்கட அரைவேக்காட்டுத்தனத்துக்காக நாங்க கவலைப்படுறம்.
முதிர்ந்த எண்டு தல அண்ணா சொன்னது வயசுபோன ஆக்கள எண்டு நீங்களா ஏன் எடுத்துக்கொள்ளுறியள். அறிவில முதிர்ந்தவையா இருக்கலாம். அனுபவத்தால முதிர்ந்தவையா இருக்கலாம். ஆளுமையில முதிர்ந்தவையா இருக்கலாம். இப்பிடியானவைக்கு இணையம் பிரச்சனையா இருக்காம இருக்கலாம். ஆனா இப்பிடி முதிர்ந்தவை எங்கட இளமாக்களில எத்தினை பேர் இருக்கினமெண்டு கணக்குப்பார்த்து சொல்லுங்கோவன்.
Reply


Messages In This Thread
[No subject] - by Selvamuthu - 12-28-2005, 09:53 PM
[No subject] - by இளைஞன் - 12-29-2005, 06:54 PM
[No subject] - by sOliyAn - 12-29-2005, 09:49 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:32 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:48 PM
[No subject] - by sOliyAn - 12-30-2005, 12:05 AM
[No subject] - by tamilini - 12-30-2005, 12:42 AM
[No subject] - by Selvamuthu - 12-30-2005, 01:52 AM
[No subject] - by அனிதா - 12-30-2005, 06:34 PM
[No subject] - by tamilini - 12-30-2005, 08:22 PM
[No subject] - by ப்ரியசகி - 12-31-2005, 05:50 PM
[No subject] - by tamilini - 12-31-2005, 09:03 PM
[No subject] - by Vishnu - 01-01-2006, 02:57 PM
[No subject] - by tamilini - 01-01-2006, 11:10 PM
[No subject] - by MUGATHTHAR - 01-02-2006, 10:32 AM
[No subject] - by tamilini - 01-02-2006, 05:09 PM
[No subject] - by Snegethy - 01-02-2006, 09:37 PM
[No subject] - by tamilini - 01-03-2006, 01:07 AM
[No subject] - by வியாசன் - 01-05-2006, 08:49 PM
[No subject] - by வியாசன் - 01-06-2006, 08:42 PM
[No subject] - by tamilini - 01-06-2006, 10:51 PM
[No subject] - by AJeevan - 01-07-2006, 12:56 AM
[No subject] - by tamilini - 01-07-2006, 05:03 PM
[No subject] - by அருவி - 01-10-2006, 11:42 AM
[No subject] - by tamilini - 01-10-2006, 01:30 PM
[No subject] - by Selvamuthu - 01-14-2006, 02:19 AM
[No subject] - by Mathan - 01-16-2006, 11:49 PM
[No subject] - by Selvamuthu - 01-17-2006, 04:20 AM
[No subject] - by pulukarponnaiah - 01-17-2006, 10:02 PM
[No subject] - by tamilini - 01-18-2006, 09:24 PM
[No subject] - by வர்ணன் - 01-19-2006, 03:55 AM
[No subject] - by Selvamuthu - 01-19-2006, 11:30 PM
[No subject] - by வன்னியன் - 01-20-2006, 05:34 PM
[No subject] - by Selvamuthu - 01-21-2006, 01:43 PM
[No subject] - by kurukaalapoovan - 01-23-2006, 03:11 AM
[No subject] - by Selvamuthu - 01-24-2006, 03:51 PM
[No subject] - by Eswar - 01-25-2006, 01:52 AM
[No subject] - by tamilini - 01-25-2006, 02:33 PM
[No subject] - by Mathuran - 01-26-2006, 12:09 AM
[No subject] - by tamilini - 01-26-2006, 11:16 PM
[No subject] - by Thala - 01-27-2006, 12:29 AM
[No subject] - by tamilini - 01-27-2006, 01:04 PM
[No subject] - by மேகநாதன் - 01-27-2006, 07:03 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 12:25 PM
[No subject] - by Nitharsan - 01-28-2006, 07:13 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 11:58 PM
[No subject] - by stalin - 01-30-2006, 12:00 PM
[No subject] - by RaMa - 01-31-2006, 10:10 AM
[No subject] - by Selvamuthu - 02-01-2006, 02:48 AM
[No subject] - by narathar - 02-01-2006, 10:14 PM
[No subject] - by Selvamuthu - 02-03-2006, 02:31 AM
[No subject] - by தூயவன் - 02-04-2006, 04:08 AM
[No subject] - by Selvamuthu - 02-06-2006, 12:32 AM
[No subject] - by Rasikai - 02-07-2006, 10:35 PM
[No subject] - by Selvamuthu - 02-09-2006, 12:04 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:19 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:22 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:24 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:25 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:26 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:31 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:32 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:33 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:35 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:37 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:39 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:41 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:42 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:43 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:44 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:45 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:46 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:52 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:56 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:58 AM
[No subject] - by Selvamuthu - 02-11-2006, 10:18 PM
[No subject] - by Vasampu - 02-13-2006, 05:22 PM
[No subject] - by Selvamuthu - 02-15-2006, 12:22 PM
[No subject] - by kuruvikal - 02-15-2006, 09:38 PM
[No subject] - by Selvamuthu - 02-16-2006, 01:11 PM
[No subject] - by sOliyAn - 02-22-2006, 05:53 PM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:55 AM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:59 AM
[No subject] - by Selvamuthu - 03-09-2006, 09:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)