02-10-2006, 01:47 AM
<b>o ஸ்ராலின் அண்ணா</b>
Quote:ஒரு உருவாக்கம் செய்வதற்க்கு ஊக்குவிப்பதற்க்கு இணையம் மிகவும் பயனுடையதாக இருக்கிறது.அதை புல இளைஞன் கடைப்பிடித்து நன்மை அடைகிறான்...ஒரு ஓவியன் ஒரு கவிஞன் ஒரு இசை அமைப்பாளன் தனது துறையோடு சேர்பவர்களை கண்டு பிடித்து அவர்களது ஆலோசனைகளையும் பெற்று தனது நிலையை வலுபடுத்த ஏது வாயிருக்கிறது.உருவாக்கம் செய்யிறதுக்கு பயனுடையதா இருக்குிறது சரி. என்னத்த பெருசா உருவாக்கி தமிழாக்களுக்கு முன்னால வச்சிட்டீங்க? ஏதோ ஒண்டிரண்டு காய்ஞ்சு போன உருவாக்கங்கள வச்சுக்கொண்டு பெருமையடிக்காதேங்கோ. இத்தனை பேர் பாவிக்கிற இணையத்தில ஒண்டு இரண்ட கணக்குக்காட்டி இணையம் நன்மையளிக்குது எண்டா என்னத்த சொல்ல.
Quote:இலமறை காயாக இருக்கும் திறமைகளை கூட யாருடைய கெஞ்சுதலுமின்றி சுதந்திரமாக வெளி கொணரமுடிகிறது .முன்னரென்றால் சின்னபயலே உனக்கு புரியாதாடா என்று உந்த அரை குறை விற்ப்பனர்கள் அவனது கனவுகளை இலைமறைகாயான திறமைகளை முளையிலையே நசுக்கிவிடுவார்கள்..திரும்பவும் அதான். எத்தனையோ இலட்சம் புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்கள் பாவிக்கிற இணையத்தில நன்மையடைஞ்சவையெண்டு ஒரு 10 பேரத்தான் உங்களால காட்ட முடியும். ஆனா சீரழிஞ்சவை எண்டு ஆயிரக்கணக்கில எங்களால காட்ட முடியும். ஒருத்தரில்ல சமூகம் ஒட்டுமொத்தமும் தான் சமூகம். ஒரு நன்மையடைஞ்சாள வச்சுக்கொண்டு ஒட்டுமொத்த இளைஞர் சமூகமும் நன்மையடையினம் எண்டுறத விளையாட்டுக்கு நீங்க சொன்னதாத்தான் எடுக்கலாம்.
அண்மையில் சினிமா சம்பந்தமான கொசுறு செய்தி வாசித்தேன்.காதல் கடிதம் புலம் பெயர் இளைஞர்களால் தாயரிக்கப்படும் படம்...அப்படத்தின் கவிஞன் இசையைப்பாளர் உதயாவை இணையத்தில் சந்தித்து தனது ஆற்றலை காட்டி வாய்பை பெற்றார் கூறப்படுகிறது...பலரது உண்மையான திறமைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த உதவுகிறது கோடம் பாக்கத்தின் கதவுகளை மீறி உட்புகுவதற்க்கு கஸ்டப்படுவேளையில் புல இளைஞனுக்கு தனது ஆக்க சக்தியை வெளியிட கை கொடுக்கிறது .இதே போன்றே லண்டன் ஈழ தமிழ் ஆகாஸ் என்ற நடிகரும் சுகாசினியிடம் இணயம் போல தொடர்பு கொண்டு வாய்ப்பு பெற்றாரென்று கூறப்படுகிறது.
Quote:தாயகத்தில் சிறுவயதிலிருந்து கபொத உயர்தரம் வரை வெறும் ஒப்பிப்பிப்பதையூடாகவும் மீள் நினைவு செய்யுமுறையையூடாகவும் பாடவிதானத்துக்குட்பட்ட தூடாகவும் தான் கல்வியாக தந்து கொண்டிருந்தார்கள்...ஆனால் பல்கலை செல்லும் போது தான் அங்கே புதிய கல்வி முறை காத்திருக்கிறது அங்கே பேராசிரியர் சிறியவழி நடத்தலையே தருகிறார் மிகுதி அவனே தரவுகளே தேடி தொடரபாடல்கள் மூலமும் தானே கற்று கொள்ள வேண்டியவனாகிறான் .இந்த தீடிரென்ற ஏற்படும் புதியமுறைக்கு சிரமத்துக்குள்ளாகிறாகிறார்கள்.கபொத உய்ர்தரத்தில் திறமை சித்தி பெற்றவர் கூட பல்கலை கழகத்தில் ஒளிர்விட முடியாததைக்கண்டிருக்கிறோம்........இது கல்வியமைப்பின்ர கோளாறு. இதுக்கும் இணையத்தின்ர நன்மைக்கும் என்ன சம்பந்தமெண்டு கடைசியா வாற உங்கட அணித்தலைவராவது விளக்கஞ்சொல்லட்டும்.
Quote:புலஇளஞன் இணையத்தில் உலகதரவுகளை பெற்று தான்கல்வி பெறுவதன் மட்டுமன்றி தான் சார்ந்த தாயக சமுதாயத்துடனும் பகிர்ந்து கொள்கிறான்..விமான தொழில்நுட்ப அறிவு,பலகாலகட்டத்து யுத்த சம்பந்தமான அறிவு புலனாய்வுசம்பந்தபட்ட அறிவுகளை புல சூழலில் இருக்கு சாதகமான் அம்சங்களோடு பெற்று தாயக உறவுகளோடு பகிர்ந்து கொள் வதன் மூலம் தமிழ் தேசியத்துக்கூட வலுவூட்டிக்கொள்கிறான்இதுக்கு உங்களால என்ன ஆதாரத்த தரமுடியும்? வெறும் கற்பனையளால கதையளக்காதேங்கோ. இண்டைக்கு இணைய இணைப்பு ஊரில சாத்தியம். அவை அங்க இருந்துகொண்டே தங்களுக்கு தேவையானதுகள் இருந்தா பெற்றுக்கொள்ளுவினம். இங்க இருக்கிறவை இணையத்தில எடுத்து அங்க கொண்டுபோய்க் கொடுக்கோணுமெண்டில்ல. சும்மா இன்ரர்நெட்டில வாசிச்சு மொழிபெயர்க்கிறதெல்லாம் தேசியத்த ஒண்டும் வெண்டதரப்போறேல்ல. அனுபவத்தில படிக்கிறது தான் தேசியத்துக்கு கூடுதலா உதவும். அனுபவப் பாடத்துக்கு இணையத்தால உதவமுடியாது.
Quote:நடுவர அவர்களே இப்படி இணையம் மூலம் பல நன்மைகளை பெறும் இளைஞனை எதிரர் அணியினர் எல்லோரும் திரும்ப திரும்ப இதைத்தான் கூறுகிறார்கள்... ஆபாச படம் பார்த்தல் டேறறிங் சாற்றிங் செய்தல் ...கெட்டு போதல்... கெட்டு போதல்என்று கூக்கிரலிடுகிறார்கள்இவையால தான் கூட சீரழிஞ்சு போகினம் எண்டா அதுகள தானே திரும்பத் திரும்ப சொல்ல முடியும்.
Quote:புலத்து நான் காணும் இளைஞன் தெளிவாய் இருக்கிறான்.....அத்துடன் உங்களைப்போல ஏமாளியாக இல்லாமல் பாலவினை நோய் பற்றியும் கர்ப்ப தடை பற்றியும் வடிவாக தெரிந்து வைத்திருக்கிறான் .....கர்ப்பத்தடை பற்றி தெரிஞ்சு வச்சிருக்கிறதால இணையத்தால சீரழியேல எண்டு எப்பிடி சொல்றீங்க. ஒண்டுக்கொண்டு சம்பந்தமில்லாம கதைக்கிறீங்க? கர்ப்பத்தடை பற்றி தெரிஞ்சு வச்சிருக்கிறதால ஒழுகத்த மீறலாமெண்டு சொல்ல வாறியளா? புலத்து இளைஞனின்ர மனக்கட்டுப்பாடின்மைதான் அவை சீரழியிறதுக்கு காரணமெண்டு உங்கட அணில மற்றாக்கள் சொல்லிச்சினம். இப்ப நீங்க என்னடா எண்டா புலத்து இளைஞன் தெளிவா இருக்கிறானெண்டுறியள். மொத்தத்தில அணிக்குள்ளய ஒரு ஒத்த கருத்தில்ல.

