02-10-2006, 01:46 AM
<b>o குறுக்காலபோவான் அண்ணா</b>
Quote:இலத்திரனியல் தகவல் களஞ்சியங்களை இணைக்கும் பாலமாக, சுயகருத்துக்களை குழுமங்களில் குடில்களில் பலரோடு பகிர்ந்து விமர்சனம் பெற்று முன்னேறவும், கல்வித்துறையில் ஆசிரியரோடு சக மாணவர்களோடு, பொழுதுபோக்கும் துறையிலும் சமூகச்சேவையிலும் சகாக்களுடன் வினைத்திறன் மிக்க தொடர்பாடல் முறையாகவும் எமது புலம் பெயர்ந்த இளையவர்கள் பயன்படுத்தி தம்மையும் வளம்படுத்தி எமது தேசியத்திற்கு வலுச்சேர்க்கிறார்கள். இவற்றை எனக்கு முன் வந்த எனது அணியினர் விபரமாக உதாரணத்தோடு தந்திருந்தார்கள்.குறுக்காலபோவான் அண்ணா எங்க உப்பிடி நடக்கெண்டு சொல்லுங்கோவன். நாங்களும் போய் கதைச்சு எங்கட தேசியத்துக்கு வலுச்சேர்ப்பம். சும்மா அபஇபிடி நடக்கு இப்பிடி நடகஇகெண்டா கர்ணுமா? எங்க எப்ப எப்பிடி நடக்கெண்டு சொன்னாத்தானே அதின்ர தன்மையள நாங்க புரிஞ்சுகொள்ளமுடியும்.
Quote:இன்னுமொரு 5...10 வருடங்களில் கைத் தொலைபேசியில் இணையத்திற்கு செல்லக்கூடியது என்பது சர்வசாதாரணமாகப் போகிறது. அது மாத்திரமல்ல தொலைக்காட்சி உரையாடல் (video conference) கூடச் செய்யலாம். தனியே பேச்சு எழுத்துக்கள் மாத்திரம் அல்ல பங்குபற்றுபவர்களின் அசையும் படங்கள் உடனுக்குடன் பரிமாறப்படும். இங்கே ஒருவரின் வக்கிர எண்ணங்கள் இன்னெருவரினால் அறைக்குள் மாத்திரம் ஒளிந்திருந்து பகிரப்படப்போவதில்லை அணிந்திருக்கும் ஆடைகளுக்குள் ஒளித்துவைக்கும் கைத்தொலைபேசியால் எங்கும் என்னேரமும் நிறைவேற்றலாம்.அப்பாடியோ. கடைசில ஒத்துக்கொண்டிட்டீங்களே. அதுபோதும். ஒண்டு அறைக்குள்ள இருந்து வக்கிரங்கள் பகிர்ந்துகொள்ளப்படுது. இரண்டு இனி இதவிட கனக்க சீரழிவுகள் இணையத்தாலயும் அதஒட்டி இருக்கிற மற்றத் தொழில்நுட்பங்களாலயும் நடக்கப் போகுது.

