02-10-2006, 01:45 AM
<b>o வர்ணன் அண்ணா</b>
நன்மைகளை மட்டுமே அடுக்கிக்கொண்டு போனாக் காணுமா? நன்மையடைகிறார்களா எண்டுறத் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம். சரி பறவால்ல. என்ன செய்யிறது சொல்றதுக்கு இருந்தாத்தானே சொல்லலாம். இல்லாட்டி நீங்க என்ன செய்வீங்கள் பாவம்.
நாங்க சொன்ன தீமையள் நீங்க சொன்னமாதிரி இணையத்தின்ர மொத்தப்பகுதில ஒரு சிறிய பங்காக இருக்கலாம். ஆனா அதனால ஏற்பட்டிருக்கிற சீரழிவு இல்லாட்டி அதால சீரழிஞ்சு போனவையின்ர எண்ணிக்க நன்மையடைஞ்சவையின்ர எண்ணிக்கையவிட பலமடங்கு பெருசாக்கும். புரிஞ்சுதா அண்ணா?
காகம் கறுப்பு எல்லாம் இருக்கட்டும். நானொண்டு சொல்லுறன் கவனியுங்கோ.
பால் வெள்ளையானது-ஆகவே
வெள்ளையானவை எல்லாம் பால்!!
என்பதுபோல் உள்ளது உங்கள் கதை! கள்ளும் வெள்ளை எண்டுற அரும்பெரும் உண்மை வர்ணன் அண்ணாக்கு நான் சொல்லவேண்டிக்கிடக்கு எண்டுறத நினைச்சா கவலையாக் கிடக்கு.
இப்ப உங்களுக்கு நானொரு உதாரணத்த சொல்லுறன். ஒரு கார் இருக்கு அத ஒராள் ஓடினா ஒழுங்கா இருக்கும். ஆனா பத்துப்பேர் அத மாறி மாறி ஓட்டினா என்ன நடக்கும்? ஒவ்வொராளும் தங்கட தங்கட விருப்பத்துக்கு ஓட்டுவினம். ஒராள் வேகமா ஓட்டும். ஒராள் அடிக்கடி பிரேக் அடிக்கும். கடைசில காரும் பழுதாப் போய் அந்த கார ஓட்டுற உங்கட நிலமையுமு் பரிதாபமாப் போகும். இதான் இணையத்திலயும் நடக்குது. கட்டுப்பாடில்லாம பலர் ஆக்கிரமிச்சு இருக்கிறதால அதின்ர சீரழிவுகளின்ர அளவு பெருசா இருக்கு.
நன்மைகளை மட்டுமே அடுக்கிக்கொண்டு போனாக் காணுமா? நன்மையடைகிறார்களா எண்டுறத் பற்றியும் கொஞ்சம் சொல்லியிருக்கலாம். சரி பறவால்ல. என்ன செய்யிறது சொல்றதுக்கு இருந்தாத்தானே சொல்லலாம். இல்லாட்டி நீங்க என்ன செய்வீங்கள் பாவம்.
Quote:சாட்டிங்கும் அதன் பிறகு டேற்றின்கும் என்று வாதாடுறீங்கள்.என்ன இப்பிடிக் கேட்டுப்போட்டியள் அண்ணா. 24 மணிநேரமென்ன ஒருநாளில 48 மணித்தியாலம் இருந்தாலும் எங்கட இளைஞர்கள் அவ்வளவு நேரமும் அரட்டையடிப்பினம் இணையத்தில. அட சாப்பாடு தண்ணி எதுவுமில்லாமலும் அதில இருப்பினம் தெரியுமோ? பொழுதுபோக்கெண்டுறது சரி. ஆனா பொழுதே -அரட்டையில- போக்குறதுக்கு தான் எண்டு நினைச்சுகொண்டெல்லோ எங்கட இளமாக்கள் இருக்கினம்.
சாட் பண்ண இணையம் வழி செய்யுதுதான்.. அதற்காக
24 மணி நேரமும் சாட் பண்ண முடியுமா?
அது ஒரு வகை பொழுதுபோக்கு... '
இயந்திரமயமான புலம் பெயர்வு வாழ்க்கை அதுக்கு இடம் கொடுக்குமா?
Quote:* இணயதளங்கள் என்பது இளையோரை சென்றடையும் முன் காதல் என்ற ஒன்று இருந்ததில்லையா?இணையத்தளங்கள் வாறதுக்கு முதலும் காதல் இருந்திச்சுத்தான். ஆரும் எங்கட அணில இல்லையெண்டு சொன்னியளா? இல்லத்தானே. எங்கட அணிலயே வித்தியாசமான புதுமையான புரட்சியான -பறக்கிற- -மலருற- காதல்கள் இருக்கு. அதால நாங்க ஒண்டும் காதல பற்றி தப்பா சொல்லமாட்டம். ஆனா இணையத்தால காதலெண்டுற சொல்லின்ர அர்த்தமே கெட்டுப்போச்சு எண்டுதான் சொல்லுறம். ஒரு பக்கத்தில அக்காவோட அரட்டையடிச்சு கடலைபோட்டு கவுத்து காதலிக்கிறதெண்டுறது. மற்றப்பக்கத்தில தங்கச்சியோட கடலை போட்டு காதலிக்கிறதெண்டுறது. பிறகு அக்காவும் தங்கச்சியுமா ஒருத்தருக்கொருத்தர் தெரியாம ஒராளையே காதலிக்கிற கொடுமைய என்னவெண்டுறது. உதாவது பறவால்ல. ஒரு வீட்டில வேற வேற கணினியில இருந்துகொண்டு அண்ணனும் தங்கச்சியுமே -அண்ணன் தங்கச்சி எண்டு தெரியாம- கடலைபோட்டு காதலிச்ச கொடுமையளும் நடந்திச்சு. கேள்விப்படலயா அண்ணாமாரே அக்காமாரே. எதுக்கும் உங்கட வீட்டில கவனமா இருங்கோ.
Quote:*இணையதளங்கள் என்ற ஒன்று வரும்முன் மனசில் உள்ள வக்கிரங்களை இறக்கி வைக்க வேறு எந்த மார்க்கங்களும் இருந்ததில்லையா?மொத்தத்தில திரும்ப திரும்ப ஒத்துக்கொள்ளுறியள் இணையத்தளத்திலயும் வக்கிரங்கள இறக்கி வைக்கினமெண்டுறத. அப்ப அதின்ர அர்த்தமென்ன? இணையத்தளங்களாலயும் சீரழிஞ்சு போகினம் எண்டுறதுதானே?
Quote:*கண்காணிப்பாளர்களற்ற ???????? சாட்ரூம் என்ற ஒன்று வந்தபின்தான் இளையோர் வாழ்வு குப்பையாய் போச்சா?சரி ஏற்கனவே இளைஞர்கள் குப்பையா இருந்தவை எண்டுறியளா? அப்பிடியே வைச்சுக்கொள்ளுவம். அப்ப குப்பையள அழுகி நாறவைச்சது இணையம் எண்டு நாங்கள் சொல்லுறம். இப்ப சரியா? ஓ ஏற்கனவே அழுகி நாறிக்கொண்டு இருந்தவை எண்டு சொல்லுறியளா? அப்ப அந்த நாத்தத்தில நஞ்சைக் கலந்துவிட்டிருக்கு இணையம் எண்டு நாங்க சொல்லுறம். இப்ப இது சரியா இருக்கா?
*இந்த சாட்ரூம்கள் வருமுன் எத்தனையோ கண்காணிப்பர்கள் .. பெற்றோர் ..உறவுகள்..தெரிந்தமுகம்கள் இருந்தத காலகட்டத்திலும் இவை எல்லாம் தாண்டி அந்த குப்பைகள் நாற்றம் வீசியதில்லையா?
நீங்கள் இணையதளங்களில் உள்ள பாதிப்பு என்று சொல்லவந்தது ...
அதன் மொத்த பகுதியின் சிறு அம்சம்! ஆகவே ஒன்றை வைத்து பலதை தீர்மானிப்பது எப்படி இருக்கிறதென்றால்...
காகங்கள் கறுப்பானவை-ஆகவே
கறுப்பானவை எல்லாம் காகங்கள்!!
என்பது போல் உள்ளது!
நாங்க சொன்ன தீமையள் நீங்க சொன்னமாதிரி இணையத்தின்ர மொத்தப்பகுதில ஒரு சிறிய பங்காக இருக்கலாம். ஆனா அதனால ஏற்பட்டிருக்கிற சீரழிவு இல்லாட்டி அதால சீரழிஞ்சு போனவையின்ர எண்ணிக்க நன்மையடைஞ்சவையின்ர எண்ணிக்கையவிட பலமடங்கு பெருசாக்கும். புரிஞ்சுதா அண்ணா?
காகம் கறுப்பு எல்லாம் இருக்கட்டும். நானொண்டு சொல்லுறன் கவனியுங்கோ.
பால் வெள்ளையானது-ஆகவே
வெள்ளையானவை எல்லாம் பால்!!
என்பதுபோல் உள்ளது உங்கள் கதை! கள்ளும் வெள்ளை எண்டுற அரும்பெரும் உண்மை வர்ணன் அண்ணாக்கு நான் சொல்லவேண்டிக்கிடக்கு எண்டுறத நினைச்சா கவலையாக் கிடக்கு.
Quote:அதுவும் பிறந்து வளர்ந்த தேசத்தில் அவர்களின் பெற்றோர்கள் ..மிக நீண்டகாலமாக அங்கு வாழ்ந்தும் எட்டி பிடிக்க முடியாத உயரங்களை.. புலம்பெயர்ந்த்து வந்த இளையோர் மிக சொற்ப காலத்தில் சாதித்தார்களே எதனால் ? இணைய தளங்களினால் ஏற்பட்ட தீங்கினாலா?அல்லது நவீன உலகின் அசுர வேகத்தின் இடையே சகல துறைகளிலும் நீங்கள் விரும்பினாலோ.. விரும்பாவிட்டாலோ நடுவீட்டு நாட்டாமையாக வந்து உட்கார்ந்துவிட்ட இணையதளங்களின் நன்மையினாலா?அதுவும் பிறந்து வளர்ந்த தேசத்தில அவர்களின் பெற்றொர்கள் ..மிக நீண்டகாலமாக அங்கு வாழ்ந்தும் தடக்கி விழ முடியாத பள்ளங்களை.. புலம்பெயர்ந்து வந்த இளையோர் மிக சொற்ப காலத்தில் சீரழிந்து அடைந்தார்களே எதனால்? இணையத் தளங்களினால் ஏற்பட்ட நன்மையினாலா? அல்லது நவீன உலகின் அசுர வேகத்தின் இடையே சகல துறைகளிலும் நீங்கள் விரும்பினாலோ விரும்பாவிட்டாலோ நடுவீட்டு நாட்டாமையாக(நடுவர்களே கவனியுங்கோ) வந்து உட்கார்ந்துவிட்ட இணையத்தளங்களின் தீமையினாலா?
Quote:அவர்கள் அர்த்தப்படுத்துவதுதான் என்ன? சீரழிந்து போகிறார்கள்தான்! மிக சொற்ப சிலர்! அதே நேரம் இலட்சக்கணக்கானவர்கள் பயனடைகிறார்களே - அதை ஏன் இவர்கள் கருத்தில் கொள்ளவில்லை? ஒரு விமானம் சிதறி விழுகிறதென்றால்- விமானமே அபாயம் என்று சொல்கிறீர்களா? பயணம் இடைவழியில் நிற்கும்! - அதை தவிர உங்கள் விவாதத்தில் பயன் ஒன்றும் இல்லை!!அட இவ்வளவு விடயங்களை அள்ளி உங்களுக்கு முன்னால வைச்ச பிறகும் இனியும் மிகச் சொற்ப சிலர்தான் சீரழியினம் எண்டு சொல்றது சரியில்ல. சீரழியிறவையின்ர எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருது. அதனால திக்கிமுக்காடிப்போயிருக்கிற அரசாங்கங்களும் -சைபர் பாதுகாப்பு படையை- உருவாக்கியிருக்கிறது நீங்க அறியல போல. அண்ணாக்கு தான் ஒரு நல்லா உதாரணத்த சொல்லிட்டன் எண்டற மகிழ்ச்சில இருக்கிறார். அண்ணா விமானம் அபாயமானது தான். விமானத்தால அபாயம் உருவாக்கப்படுது. ஆனா அதின்ர அபாயத்தின்ர அளவு எப்படியானது எணடு நாங்க பார்க்கோணும். விமானம் ஒண்டும் இணையத்த போல சுதந்திரமானது இல்ல. ஒராளின்ரயோ ஒரு குழுவின்ரயோ கட்டுப்பாட்டுக்குள்ள இருக்கு. ஆனா இணையம் அப்பிடியில்ல. உங்கட அணிதானே சொல்லிச்சு அது ஒரு சுதந்திரமான ஊடகமெண்டு. அதால ஒராளின்ர கட்டுப்பாட்ட விட்டு கனபேரின்ர கைபடுது.
இப்ப உங்களுக்கு நானொரு உதாரணத்த சொல்லுறன். ஒரு கார் இருக்கு அத ஒராள் ஓடினா ஒழுங்கா இருக்கும். ஆனா பத்துப்பேர் அத மாறி மாறி ஓட்டினா என்ன நடக்கும்? ஒவ்வொராளும் தங்கட தங்கட விருப்பத்துக்கு ஓட்டுவினம். ஒராள் வேகமா ஓட்டும். ஒராள் அடிக்கடி பிரேக் அடிக்கும். கடைசில காரும் பழுதாப் போய் அந்த கார ஓட்டுற உங்கட நிலமையுமு் பரிதாபமாப் போகும். இதான் இணையத்திலயும் நடக்குது. கட்டுப்பாடில்லாம பலர் ஆக்கிரமிச்சு இருக்கிறதால அதின்ர சீரழிவுகளின்ர அளவு பெருசா இருக்கு.
Quote:இன்றைய இளையோர்க்குஅம்மாடியோவ் மூச்சுவிட்டிட்டுவாறன் பொறுங்கோ. இவ்வளவு இருக்கா? இவளத்திலயும் எத்தினைய எத்தினபேர் பாவிக்கினம்? இவ்வளவும் இருக்கெண்டுறது வேற பிரச்சினை. இவ்வளவாலயும் புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்கள் நன்மையடையினமா எண்டுறது தான் கேள்வி. இப்ப பாருங்கோவன். யாழில அறிவியல் களம் எண்டு ஒண்டு இருக்கு அதுக்குள்ள உதாரணத்துக்கு விஞ்ஞானம் தொழில்நுட்பம் எண்டுற பகுதிய எடுப்பமன். அதமாதிரி இளைப்பாறுறதுக்கெண்டு ஒரு பகுதியிருக்கு அதுக்குள்ள சினிமா எண்டுற பக்கத்த எடுப்பமன். இப்ப முதலாவதா இரண்டுக்குள்ளயும் இருக்கிற ஆக்கங்களின்ர எண்ணிக்கைய ஒப்பிட்டுப்பார்ப்பம். இரண்டாவதா அங்க இருக்கிற தலைப்புகளில பதில் எழுதின ஆக்களின்ர எண்ணிக்கைய பார்ப்பம். மூண்டாவதா அதுகள பார்வையிட்டாக்களின்ர எண்ணிக்கைய ஒப்பிட்டுப் பார்ப்பம். செய்து பார்த்திட்டீங்களா? என்ன சொல்லுது?
பொருளாதாரம் - மருத்துவம் - இலக்கியம் - பன்னாட்டுத்தொடர்பு - கலை - தொழில்நுட்பம் - பத்திரிகைத்துறை - அரசியல் - ஆன்மீகம் - புவியியல் - உயிரியல் - தாவரவியல் - விண்ணியல் விநோதங்கள் - இசை - கற்கைநெறி - கற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் - திரைத்துறை -வரலாறு - இயற்கை பற்றிய ஆய்வு - ... இப்பிடி சொல்லிக்கொண்டே போகலாம்- இத்தனை விடயங்களையும் மேற் சொன்ன ஒரு சில விடயங்களை வைத்து உதாசீன படுத்தலாமா?
Quote:அப்பிடியான செயல்களை செய்து வெற்றி கொண்டு - பழமைவாத கருத்துக்களை முன்வைத்து ஒரு இனத்தின் முனேற்றத்தையே இருளில் தள்ளி பாழடித்துவிட்ட தலிபான்கள் போல் எம் இளையோரும் வாழ்வதில் எதிர் தரப்பினர்க்கு சம்மதமா?எதண்ணா பழமைவாதம்? அதுசரி புரட்சி புதுமையெண்டுற ஆக்களுக்கு எத பாத்தாலும் பழமையாத்தானே இருக்கும். பழமையில இருந்து தான் புதுமை வருதெண்டுறது உங்களுக்கு எங்க தெரியப்போகுது. சீரழியினம் எண்டு சொன்னா அது பழமைவாதம். சீரழியினம் எண்டு தெரிஞ்சும் நன்மையடையினம் எண்டு சொன்னா அது புதுமை புரட்சி. ம் என்னத்த சொல்ல. சரி அத விடுவம் இப்ப. இணையத்தால் இளைஞர்கள் முன்னேறவில்லை சீரழிகிறார்கள் என்று அவர்களுக்கு எச்சரிக்கை மணியடிச்சு தலிபான்களாக இல்லாம தமிழீழ மக்களப்போல விழிச்சுக்கொள்ளச் செய்யிறது தான் எங்கட நோக்கம்.

