Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் - புலம் பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும்
#72
<b>o மதன் அண்ணா</b>

Quote:ஆக தப்பு இணையத்தில் இல்லை பார்வையில் தான்.
அப்ப உங்களுக்கெல்லாம் என்ன பார்வைக்கோளாறா? சரி விடுங்க விடுங்க. ஒரு கதை சொல்றன் கேளுங்க. ஒரு பெரிய பெட்டிக்குள்ள குப்பையள் இருக்கு. அழுக்காவும் கெட்ட மணத்தோடயும் அழுகிப்போனதாவும் நிறைய இருக்கு. பெட்டிய சுத்தி பரிசு குடுக்கிற சாமான்களுக்கு சுத்துற பேப்பரால வடிவா சுத்தி அலங்காரமெல்லாம் செய்திருக்கு. வாசனைக்காக சுத்தி சுத்தி சென்ற் எல்லாம் அடிச்சிருக்கு. இப்ப அத கொண்டு வந்து பட்டிமன்றம் நடக்கிற இடத்தில ஒரு அறைக்குள்ள வைச்சாச்சு. அத எங்கட அணித் தலைவரும் எதிரணித் தலைவரும் ஒருக்கா போய் பார்த்திட்டு வரலாம். அப்ப எதிரணித் தலைவர் போறார் உள்ளுக்க. உள்ளுக்க போய் அவர் எல்லாத்தையும் பாத்திட்டு அதின்ர வெளித்தோற்றத்திலயும் வாசனையிலயும் மயங்கி இவ்வளவு வடிவா இருக்கே. எங்கட ஆக்களுக்கு இதுக்குள்ள நிறைய விசயங்கள் பயன்படுற விசயங்கள் இருக்குதே எண்டு யோசிச்சார். அவர் அப்பிடியே கற்பனை உலகத்துக்குள்ள போட்டார். அப்பிடியே வெளில வந்து -அம்மாடியோ இது என்ன அதிசயமா கிடக்கு. இதப்போல புதுமையான ஒரு விசயத்த இதுவரைக்கும் பாக்கலயே. இது எங்கட ஆக்களுக்கு நிறையத் தரப்போது. இதால பெரிய புரட்சியே நடக்கப்போகுது- எண்டு கதையளக்கிறார். அடுத்ததா எங்கட அணித்தலைவர் உள்ளுக்க போறார். அவருக்கு வெளித் தோற்றத்த பார்த்தோடன ஒரு சின்ன சந்தேகம் வந்திட்டு. வடிவா இருந்தாலே ஆபத்தாச்சே. என்ன விசயமிருக்கும் எண்டு அலசிப் பாக்கிறார். பெட்டில சாதுவா ஓட்டை போட்டு பாத்தா உள்ளுக்குள்ள இருந்து அழுகின மணம் வரத்தொடங்கிட்டு. எங்கட அணித்தலைவருக்கு விளங்கிட்டு. ஓட்டைக்குள்ளால தன்ர பேனாவ விட்டு கிளறிப்பாக்கிறார். புழு ஒண்டு வெளில விழுந்திச்சு. எங்கட அணித்தலைவர் அவசர அவசரமா வெளில வந்தார். -அந்தப் பெட்டிக்குள்ள நிறைய கெட்ட சாமான்கள் எல்லாம் கிடக்கு. அழிகிப்போன மணமெல்லாம் வருது. இது எங்கட ஆக்களுக்கு கூடாது. சீரழிக்கிறதுக்க பேர்குது. அந்த நாத்தம் எல்லாரையும் மயக்க நிலைக்கு கொண்டு போகப் போகுது. எல்லாரும் கவனமா இருங்கோ- எண்டு எச்சரிக்கிறார். அதுக்கு எதிரணில இருக்கிற மாதவன் -சீ மன்னிக்கோணும் அவரின்ர அடையாளமே மறந்து போச்சு- மதனண்ணா பெட்டில தப்பில்லையாம் பார்வையில தான் தப்பாம். அப்ப யாரின்ர பார்வையில தப்பெண்டு நடுவர்மார்களே சொல்லுங்கோ.

Quote:எதிர்காலத்தில் இன்னொரு சக்திவாய்ந்த ஊடகம் வந்தால் அதையும் நல்ல முறையில் உபயோகித்து நன்மையடைவார்கள் நமது இளையோர்.
நல்ல நம்பிக்கை. உங்கட அணித் தலைவரின்ர புதுமையான கற்பனையள் எல்லாம் உங்களுக்குள்ளயும் வந்திட்டு போல. சும்மா சும்மா எதிர்காலத்த பற்றி கற்பனையள கதைச்சுக்கொண்டிருக்காம நிகழ்காலத்த கொஞ்சம் பாருங்கோவன். நிகழ்காலத்தில நடக்கிற சீரழிவுகள பார்த்த பிறகுமா உந்த கற்பனையள். எதிர்காலத்தில இன்னொரு சக்திவாய்ந்த ஊடகம் வந்தாலும் அதையும் தாங்கள் சீரழிவுக்காகத்தான் எங்கட இளைஞர்கள் பயன்படுத்துவினம். அதால அந்த சக்திவாய்ந்த ஊடகத்தாலயும் மேலதிகமா கெட்டுச் சீரழிஞ்சு போவினம்.

Quote:இப்போதாவது எப்படி இளையோர் இணையம் மூலம் வாழ்க்கை துணையை தேர்தெடுக்கின்றார்கள் மற்றும் வேறு வழிகளில் அறிமுகமானோரை திருமணம் செய்ய முன்பு இணையம் மூலம் புரிந்து கொண்டு நன்மையடைகின்றார்கள் என்று எதிரணி நண்பர்களுக்கு புரிந்ததா அல்லது இன்னும் புரியாதது போல் நடிக்க போகிறீர்களா?
நாங்க ஒண்டும் புரியாத மாதிரி நடிக்கல அண்ணா. ஆனா இணையத்தில புரிஞ்சுகொண்டமாதிரி நடிச்சு ஏமாத்துற வேலையள் தான் நிறைய நடக்குதுங்கோ அண்ணா. நேரில சந்திச்சே ஒண்டையும் ஒழுங்கா புரிஞ்சுகொள்ள முடியேல. 10 வருசங்களா பக்கத்தில சேர்ந்திருந்தவையே விவாகரத்து வாங்குகினம். இதுக்குள்ள இணையத்துக்குள்ளால புரிஞ்சுகொள்ளப் போகினமாம். நல்ல கதையாத்தான் இருக்கு. உங்கட அணித்தலைவர்தானே ஏதோ கணனில செய்த படங்கள் கொஞ்சத்த போட்டு எழுதியிருந்தவர்.

<b>...பல சட்டவிரோதமான வேலைகளைச் செய்வதற்கும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படும் என்பது கவலைக்குரியதே.
இன்று பொழுதுபோக்கு சஞ்சிகைகள், விளம்பர இதழ்கள், உடற்பயிற்சி சார்ந்த சஞ்சிகைகள் போன்றவற்றிற்கான படங்கள் இந்தமுறையிலேயே செய்யப்படுகின்றன. முகத்தில் ஒரு பருக்கூட இல்லாத, தோல் மென்மையாக இருக்கிற, கண்கள் ஒளிர்கிற படங்களைப் பார்த்து ஏமாருபவர்கள் பலர். நாம் அப்படி இல்லையே என்று தமக்குள் ஏங்குபவர்கள் பலர். ஆனால் உண்மையில் ஒரு பருக்கூட இல்லாத, ஒரு காயமோ, கீறலோ இல்லாத முகம் அல்லது மேனி எங்கும் இல்லை என்பதே உண்மை. digital imaging மூலம் தேவதைகளையும் மன்மதன்களையும் விளம்பர இதழ்கள் உருவாக்கிவிட்டுள்ளன.</b>

இப்பிடி படங்கள மாத்தி செய்து அனுப்பியும் ஒராள ஏமாத்தலாந்தானே. நேரில சந்திக்கேக்க தான் ஏமாந்து போனத நினைச்சு தற்கொலை செய்தவையின்ர கதையளும் இணையத்தால நடந்திருக்கிறத நீங்க தெரிஞ்சும் தெரியாத மாதிரிக் கதைக்கிறியள்.

Quote:அடுத்து மென்பொருள் திருட்டு பற்றி சொல்லியிருக்கின்றார். உரிய வகையில் வாங்கப்படும் மென்பொருட்கள் சட்டத்துக்கு புறம்பாக பிரதி செய்யப்பட்டு நடைபாதையில் வைக்கப்பட்டு விற்கப்படுகின்றன நண்பர்களிடையே மென் தகடுகளாக பரிமாறப்படுகின்றன். இணையம் இன்றியே நடக்கும் ஒரு விட்யம் இது. ஆனால் இது இணையம் வழியால் தான் நடப்பதாகவும் அதனால் இளையோர் சீரழிவதாக புது கதை சொல்கின்றார் அருவி.
இணையமில்லாமல் நடக்கிறது குறைவாத்தான் இருந்திருக்கும். இணையத்தாலதான் அது அதிகரிச்சு இருக்கு. இப்ப லண்டனில இருக்கிறவர் தனக்கு கிடைச்ச ஒரு மென்பொருள பிரான்சுக்கு அனுப்புறாரெண்டா அது இணையத்தால தானே நடக்குது. கடிதத்தால அனுப்பலாந்தர்னெ எண்டு சொல்லுவியள். ஆனா கடிதத்தால எத்தின பேருக்கு அனுப்பேலும். இணையத்துக்குள்ளால வேகமா பரவுது.

Quote:இதற்கு பதிலை நீட்டி முழக்கி எழுத போவதில்லை சுருக்கமாகவே சொல்கின்றேன். தாயக செய்திகளை அறிய புலம் பெயர் இளையோர் உபயோகிக்கும் முக்கிய தளங்கள் தமிழ் நெட் மற்றும் புதினம்.
தமிழ்நெட்டையும் புதினத்தையும் தவிர வேறொண்டும் உங்களால சொல்ல முடியாது. சொன்னாலும் அதுகளில நம்பிக்கைத்தன்மை இருக்கா எண்டா அதையும் சொல்ல முடியாது. மொத்தத்தில எத்தனையோ இளைஞர்கள் பார்க்கிற இணையத்தில இரண்டே இரண்டு தளங்கள் தான் உங்களுக்கு நம்பிக்கையா இருக்கு.

Quote:வலைப்பதிவுகள் அண்மைகாலங்களில் ஆரம்பமாகி இப்போது தான் பிரபல்யமாகி வருகின்றது. அவற்றை புலம்பெயர்ந்த இளையோர் தமது கருத்துக்களை எண்ணங்களை தங்குதடையின்றி வெளிப்படுத்த உபயோகிக்கின்றார்கள். தமிழில் தோன்றும் வலைப்பதிவுகளை எடுத்து கொண்டால் அவை தமிழ் நன்றாக தெரியாத புலம் பெயர்ந்த இளையோரினால் தமிழில் எழுத வேண்டும் என்று ஆர்வத்தில் ஆரம்பிக்கபடும் போது இலக்கண தவறுகள் ஏதும் நிகழலாம். அவை வேண்டுமென்றே செய்யப்படுவன அல்ல. இன்று இந்த வலைப்பதிவு மூலம் தமிழில் தனது புலமையை அதிகரித்து நன்மையடையும் இளையோர் நாளை அந்த இலக்கண தவறுகளையும் மற்றவர்களின் வழிகாட்டலுடன் சரி செய்வார்கள் என்பதை க்ருத்தில் கொள்ளுங்கள். இங்கு இளைன்யோரின் நோக்கம் தமிழில் எழுதுவதே அன்றி இலக்கண விதிகளை மீறுவது அல்ல.
வலைப்பதிவுகள பற்றி உங்கட அணில எத்தினை தரந்தான் திரும்பத் திரும்ப சொல்லுவியள். இலக்கணப் பிழையள நாளைக்கு திருத்துறது இருக்கட்டுமண்ணா. இண்டைக்கு யாரு திருத்திறது? இண்டைக்கு சீரழிஞ்சுகொண்டும் சீரழிச்சுக்கொண்டுமெல்லோ இருக்கினம். தாமே ராசா தாமே மந்திரி எண்ட கணக்கா வலைப்பதிவில எழுதுறாக்கள ஆரு வழிநடத்துறது? இலக்கணமில்லாட்டி தமிழில்ல எண்டுறதா யாரோ சொல்லிக் கேள்விப்பட்டன். அது உண்மையா இருந்தா -இளையோரின் நோக்கம் தமிழில் எழுதுவதுதான் ஆனா இலக்கணப் பிழையள் விடுறது ஒண்டும் பெரிய பிழையில்லையெண்டுறது- சின்னப்பிள்ளத்தனமான வாதமண்ணா. தட்டச்சுறதில பிழையள விட்டா சரி பறவால்ல தட்டச்சி பழகப் பழக அது திருத்தமா வருமெண்டு சொல்லலாம். ல ள ழ வில பிழையள விட்டா எழுதுற விசயத்தின்ர அர்த்தமே மாறிப்போகுதெண்டு செல்வமுத்து அண்ணாவே அண்டைக்கு பட்டிமன்றத்தில எழுதினது உங்கட பார்வையில விழலயோ?
Reply


Messages In This Thread
[No subject] - by Selvamuthu - 12-28-2005, 09:53 PM
[No subject] - by இளைஞன் - 12-29-2005, 06:54 PM
[No subject] - by sOliyAn - 12-29-2005, 09:49 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:32 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:48 PM
[No subject] - by sOliyAn - 12-30-2005, 12:05 AM
[No subject] - by tamilini - 12-30-2005, 12:42 AM
[No subject] - by Selvamuthu - 12-30-2005, 01:52 AM
[No subject] - by அனிதா - 12-30-2005, 06:34 PM
[No subject] - by tamilini - 12-30-2005, 08:22 PM
[No subject] - by ப்ரியசகி - 12-31-2005, 05:50 PM
[No subject] - by tamilini - 12-31-2005, 09:03 PM
[No subject] - by Vishnu - 01-01-2006, 02:57 PM
[No subject] - by tamilini - 01-01-2006, 11:10 PM
[No subject] - by MUGATHTHAR - 01-02-2006, 10:32 AM
[No subject] - by tamilini - 01-02-2006, 05:09 PM
[No subject] - by Snegethy - 01-02-2006, 09:37 PM
[No subject] - by tamilini - 01-03-2006, 01:07 AM
[No subject] - by வியாசன் - 01-05-2006, 08:49 PM
[No subject] - by வியாசன் - 01-06-2006, 08:42 PM
[No subject] - by tamilini - 01-06-2006, 10:51 PM
[No subject] - by AJeevan - 01-07-2006, 12:56 AM
[No subject] - by tamilini - 01-07-2006, 05:03 PM
[No subject] - by அருவி - 01-10-2006, 11:42 AM
[No subject] - by tamilini - 01-10-2006, 01:30 PM
[No subject] - by Selvamuthu - 01-14-2006, 02:19 AM
[No subject] - by Mathan - 01-16-2006, 11:49 PM
[No subject] - by Selvamuthu - 01-17-2006, 04:20 AM
[No subject] - by pulukarponnaiah - 01-17-2006, 10:02 PM
[No subject] - by tamilini - 01-18-2006, 09:24 PM
[No subject] - by வர்ணன் - 01-19-2006, 03:55 AM
[No subject] - by Selvamuthu - 01-19-2006, 11:30 PM
[No subject] - by வன்னியன் - 01-20-2006, 05:34 PM
[No subject] - by Selvamuthu - 01-21-2006, 01:43 PM
[No subject] - by kurukaalapoovan - 01-23-2006, 03:11 AM
[No subject] - by Selvamuthu - 01-24-2006, 03:51 PM
[No subject] - by Eswar - 01-25-2006, 01:52 AM
[No subject] - by tamilini - 01-25-2006, 02:33 PM
[No subject] - by Mathuran - 01-26-2006, 12:09 AM
[No subject] - by tamilini - 01-26-2006, 11:16 PM
[No subject] - by Thala - 01-27-2006, 12:29 AM
[No subject] - by tamilini - 01-27-2006, 01:04 PM
[No subject] - by மேகநாதன் - 01-27-2006, 07:03 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 12:25 PM
[No subject] - by Nitharsan - 01-28-2006, 07:13 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 11:58 PM
[No subject] - by stalin - 01-30-2006, 12:00 PM
[No subject] - by RaMa - 01-31-2006, 10:10 AM
[No subject] - by Selvamuthu - 02-01-2006, 02:48 AM
[No subject] - by narathar - 02-01-2006, 10:14 PM
[No subject] - by Selvamuthu - 02-03-2006, 02:31 AM
[No subject] - by தூயவன் - 02-04-2006, 04:08 AM
[No subject] - by Selvamuthu - 02-06-2006, 12:32 AM
[No subject] - by Rasikai - 02-07-2006, 10:35 PM
[No subject] - by Selvamuthu - 02-09-2006, 12:04 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:19 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:22 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:24 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:25 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:26 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:31 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:32 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:33 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:35 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:37 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:39 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:41 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:42 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:43 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:44 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:45 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:46 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:52 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:56 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:58 AM
[No subject] - by Selvamuthu - 02-11-2006, 10:18 PM
[No subject] - by Vasampu - 02-13-2006, 05:22 PM
[No subject] - by Selvamuthu - 02-15-2006, 12:22 PM
[No subject] - by kuruvikal - 02-15-2006, 09:38 PM
[No subject] - by Selvamuthu - 02-16-2006, 01:11 PM
[No subject] - by sOliyAn - 02-22-2006, 05:53 PM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:55 AM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:59 AM
[No subject] - by Selvamuthu - 03-09-2006, 09:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)