Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் - புலம் பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும்
#70
<b>o சிநேகிதி அக்கா</b>

Quote:இணையத்தால எனக்கு என்ன நனமையென்று சொல்றன்.ஒரு நாள் விரிவுரைக்குப் போக முடியவில்லை என்றால் ஒன்றில் பாடத்தளத்தில் விரிவுரைக்கான வாசிப்பன்.அல்லது பதிவு செய்யப்பட்ட ஒலிவடிய விரிவுரைய ஒரு நண்பர் மூலம் இணையத்தினூடு பெற்றுக் கேட்பேன்.ஒரு ஒப்படையைச் சமர்ப்பிக்கத்தான் அன்று கல்லூரிக்குப் போகவேண்டியிருந்தால் ஒரு ஈமெயில்ல விசயம் முடிஞ்சிடும்.முன்னர் மாதிரி பாடஅட்டவணை எடுக்கவோ புத்தகம் எடுக்கவோ நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.எக்ஸாம் முடிஞ்ச உடனே டிஸ்கஸனுக்குப் போய் யாருக்கு என்ன விடை வந்தது என்று அறியலாம்.ஒன்லைன் குயிஸ் செய்யலாம்.நூல் நிலைய புத்தகங்களை ஹோல்ட்ல போடலாம் றினியு பண்ணலாம்.யுனி தொடங்க முதலே கோர்ஸ் அவுட்லைன் பார்க்கலாம்.பேராசிரியர் அவேன்ர உதவியாளர்களோட நேரில கதைக்க சந்தர்ப்பம் கிடையாதபோது டிஸ்கஸன் போர்டுக்குப் போய்க்கதைக்கலாம். இவ்வளவு ஏன் ஒன்லைன் டிகிறீ படிச்சு எடுக்குதுகள் சனம்.வேற நாட்டில இருக்கிற உறவினரோட நண்பர்களோடு வெப்காமில சற் பண்ணலாம்.ஸ்கைப் பயன்படுத்தி உரையாடலாம்.இன்னும் நிறைய இருக்கு.
மொத்தத்தில சோம்பேறியாகுறீங்க எண்டு சொல்லுங்கோ. நோய் ஏதாவது வந்து விரிவுரைக்கு போகாட்டி அத பாடத்தளத்தில இருந்து எடுத்து வாசிக்கிற வசதி பிறகு எதுக்கு விரிவுரைக்கு போகணும் பிறகு ஆறுதலா வீட்ட இருந்தே படிக்கலாம் எண்டுற எண்ணத்த கொண்டுவரும். பிறகு பிறகு எண்டு கடைசில படிக்காமலே சோம்பேறித்தனமா விட்டிருவினம். இதான் இப்ப நடக்கிறது. நீங்க சொன்ன புத்தக விசயமெல்லாம் ரெலிபோனிலயும் வீட்டில இருந்து செய்யலாம். இதுக்கு இன்ரர்நெட் தேவையெண்டில்ல. எல்லாம் செய்யலாம் செய்யலாம் எண்டு சொல்லுறியளே ஒழியே எத்தினை தமிழ் இளைஞர்கள் உப்பிடியெல்லாம் உதால பயனடையினம் எண்டு சொல்லவேயில்லை. வெப்காமில முகத்த காட்டலாம் பிறகு அத ஸ்கிறீன்சொடு் எடுத்து வேறமாதிரி ஆபாசமா மாத்தி உலகமெல்லாம் ரசிக்க அனுப்பலாம். என்னக்கா சொல்றீங்க? ஸ்கைப் பயன்படுத்துறதில இளைஞர்களுக்கு என்ன சிறப்பா நன்மையெண்டு சொல்லுங்கோவன்?

Quote:கணனிக்கு முன்னாலயே இருந்தால் நோய் வாய்ப்பட வாய்ப்பிருக்கு எண்ணுபவர்கள் ஏர்கோனோமிக்ஸ் தளபாட வசதியைப் பயன்படுத்துங்கோ.இன்னும் பத்து வருடங்களில் வங்கி நடவடிக்கைகள் குறைக்கப்பட்டால் எல்லாரும் இணையத்தினூடுதான் காசுப்பரிமாற்றம் எல்லாம் செய்ய வேண்டி வந்தால் அப்ப என்ன செய்வம்.தொழில்நுட்ப வளர்ச்சியினால் கிடைக்கும் அனுகூலங்களை இருகரம் சேர்த்துப் பெற்றுக்கொண்ட நாங்கள் பிரதிகூலங்களையும் சமாளிக்கத்தான் வேண்டும்.
இதுக்கு ஏற்கனவே பதில் சொல்லிட்டினம். இருந்தாலும் எனக்கும் சில விசயங்கள சொல்லோணும் போல இருக்கு. அக்கா நீங்க வசதியா இருக்கிறீங்க போல. உதுகள வாங்குவீங்க. ஆனா எல்லாரும் அப்பிடி இல்லத்தானே. மற்றது இன்னொரு பக்கத்தால பொருளாதார ரீதியா உது சிக்கல கொண்டு வருதுதானே. நீங்க சொல்லுறத பார்த்தா நன்மையடையோணுமெண்டா சீரழியோணுமெண்டுற மாதிரியெல்லோ கிடக்கு.

Quote:அதே போலதான் இணையத்தில ஆபாசப்படமிருக்கு கெட்டுப்போக வழியிருக்கு என்று புலம்பாம அன்னம் மாதிரி பாலைமட்டும் குடியுங்கோ தண்ணியை விடுங்கோ.ஆபாசம் வன்முறையெல்லாம் தொலைக்காட்சியிலும் இருந்தது தானே அங்க எப்பிடி
பெற்றோர் கட்டுப்பாட்டு வசதி இருந்ததோ அத மாதிரி கணனியிலும் இருக்குப் பாவியுங்கோ.ஒரு கொஞ்சக்காசோட அந்நிய நாட்டில பிழைக்க முடியும் என்று நம்பி வந்த பெற்றோருக்கு குழந்தையின் வளர்ச்சியைக் கண்காணிக்கவும் நம்பிக்கை வேணும்
மொத்தத்தில இளைஞர்கள் இணையத்தால சீரழியினம் எண்டுறத ஒத்துக்கொள்ளுறியள். அதாலதான் அதுக்கு தீர்வு சொல்ல வெளிக்கிடுறியள். நடுவர்மாரே கவனியுங்கோ. சீரழிகிறார்கள் என்பதை சிநேகிதி அக்கா ஒத்துக்கொண்டு அதில இருந்து பாதுகாத்துக்கொள்ளுறதுக்கு வழி சொல்லுறா. பிள்ளையள கவனிக்கிறதுக்கு நேரமில்லாம ஓடி ஓடி உழைக்கிற புலம்பெயர் பெற்றோருக்கு மேலும் ஒரு வேலைய சிநேகிதி அக்கா கொடுக்க சொல்லுறா. பாவம் ஊரில இருக்கிற சொந்தங்கள கவனிக்கோணும் அதவிட நாட்டுக்கு உதவுறதுக்காக உழைக்கோணும். இப்பிடி எல்லாத்துக்கும் உழைச்சு தேய்ஞ்சு போற பெற்றோர மேல மேல கஸ்ரப்படுத்த சொல்லுறா சிநேகிதி அக்கா. இவை சீரழிஞ்சு போவினமாம் ஆனா இவையள பிறகு பாதுகாக்க வேணுமாம். நல்லா இருக்கு உங்கட தத்துவம்.


Quote:நீங்கள் சொல்ற மாதிரி இணையத்தில உள்ளதைக் கொண்டே குடுக்க அதை வாங்கி திருத்துற அளவுக்கு யாரும் முட்டாள்கள் அல்ல.எங்க எப்ப எந்தத்த தளத்தில இருந்து சுடப்பட்டிருக்கு என்று துல்லியமாகச் சொல்லும் மென்பொருள்கள் பாடசாலைகளில் பல்கலைக்கழகங்களில் எல்லாமுண்டு.சில பாடங்களுக்கு இணையத்தளங்களை தகுந்த சைற்றேசனோடு பயன்படுத்தலாம். சில பாடங்களுக்கு புத்தகங்களையும் சஞ்சிகைகளையும் மட்டுமே பாவிக்கலாம்.இணையத்தை கட்டாயம் மற்றவருடைய வேலையக் களவாடத்தான் பாவிக்கவேண்டுமா அவர்கள் ஒரு கடினமான விளக்கத்ததை இலகுவான நடையில் எழுதியிருந்தால் அதை வாசிச்சு அறிவை வளர்க்கலாமே தமிழினியக்கா.
நீங்க சொல்றதெல்லாம் பல்கலைக்கழக மட்டத்தில சரியா இருக்கலாம். ஆனா பள்ளிக்கூட மட்டத்தில உதுகள கவனிக்கிறல. ஆனாலும் பல்கலைக்கழக மட்டத்திலயும் பாருங்கோ இணையத்தில இருந்து எடுத்து கொஞ்சமா மாத்திப்போட்டு குடுத்தா அத பல்கலைக்கழகத்திலயும் கண்டுபிடிக்கிறது சிக்கலான வேலை. நீங்க நினைக்கிற அளவொண்டும் தொழில்நுட்பம் வளரேல்லக்கா. முதல்ல இணையத்தில ஒரு விசயத்த தேடி இலகுவா எப்பிடி கண்டுபிடிக்கிறதெண்டுறது எங்கட இளைஞர்களுக்கு தெரியிறேல. அதால ஒண்ட தேடியெடுக்க கனநேரம் செலவளிக்கினம். இப்ப பார்த்தீங்க எண்டா இணையத்தில இன்னொராளின்ரய எடுத்த தன்ர ஆக்கமெண்டு வெளில சொல்லித் திரியிற சீரழிவுகளும் நடக்குது. உங்க யாழிலயும் ரண்டு மூண்டு பேர் பிடிபட்டவை. இன்னொண்டையும் சொல்லோணும். இணையத்தில பொறுக்கியெடுக்கிறதுகள கொண்டுவந்து ஒரிடத்தில போடுவினம். அத எங்க எடுத்தவை எப்ப எடுத்தவை அத யாரெழுதினது எண்டறத பற்றின ஒரு தகவல்களும் இல்லாம. இதெல்லாம் தகவல் திருட்டுத்தானே. இதுகளெல்லாம் சீரழிவுகள் தானே?

Quote:இளம்பெண்கள் எத்தின பேரை சுதந்திரமா எழுத விடுறியள்.ஒரு கருத்துச் சொன்னா அதைத் திரிச்சு அவேன்ர குடும்பத்தோட பொருத்திப்பாத்து என்னல்லாம் நடக்குது.நான் இப்பிடி போன வைகாசிலதான் இணையத்தில ஏதோ எழுதத்தொடங்கினான்.ஆனால் பதினேழு வயசில முதல்க்கதை ஒரு பத்திரிக்கைல வர சொந்தக்காரர் எல்லாம் கதை நல்லாத்தானிருக்கு ஆனால் உனக்குது வேண்டாம்.உது உனக்கு சோறு போடாது அது இது என்று வியாக்கியானம் செய்தவை.நான் இப்பிடியெல்லாம் எழுதுறது என் குடும்பத்தில யாருக்குமே தெரியாது.இது பெண்களுக்கு மட்டுமில்ல ஆண்களுக்கும் பொருந்தும்.இணையத்தில எழுதுறதுக்கு சுதந்திரம் அதிகம்தானே.வசதியும் தானே நாங்களே எழுதி நாங்களே பதிவு செய்து அதில ஒரு சந்தோசம் இருக்கெல்லோ.
ஓமக்கா இணையத்தில எழுதுறதுக்கு சுதந்திரம் அதிகந்தான். அதால என்னத்த எழுதுறதெண்டு தெரியாமல் கண்ட கண்ட குப்பையளையும் எழுதிக் கொட்டுகினம். உங்க வலைப்பதிவு வழிய நடக்கிற கூத்துகள பாக்கிறம்தானே. ஆபாசமா பின்னூட்டம் எழுதுகினம். ஒராளின்ர குடும்பத்த பற்றி கண்டபடி கதைப்பினம். ஏன் இங்க யாழிலயே சுதந்திரமா ஒண்ட எழுதமுடியுமா. எழுதினா உடன தனிப்பட தாக்க வெளிக்கிடுவினம். சுதந்திரமா எழுதக் கிடைச்சோடன சுயதம்பட்டம் அடிக்கிற கூட்டம் தான் அதிகரிச்சிருக்கு. இணையத்தில எழுதிறெண்டா கூட வீட்டுக்கு தெரியாமத் தான் நீங்க எழுதவேணு்டிக் கிடக்கு. அப்பிடி எழுதிக் கிழிச்சு என்னத்தக் கண்டியள்? ஏதாவது நன்மையடைஞ்சியளா? உங்கட முகத்த காட்டிக்கொண்டு உங்கட சொந்தப்பேர வைச்சுக்கொண்டு உங்களால சுதந்திரமா உங்கட கருத்த வெளிப்படையா இந்த யாழ்களத்தில வைக்கமுடியுமா? வைச்சுக்காட்டுங்க. அதுக்கும் அடுத்ததா போய் பெண்கள் திருமணத்துக்கு முதல்ல பாலியல் உறவு வைச்சுக்கொள்ளலாமா வேண்டாமா எண்டுறத பற்றி உங்கட ஒரு கட்டுரைய எழுதுங்கோ. அப்ப பெண்கள் சுதந்திரமா எழுதுகினம் எணு்டு ஒத்துக்கொள்ளுறன். சும்மா விசுக்கியடிச்சுக்கொண்டு சுதந்திரமா எழுதுறமெண்டு கதையளக்காதேங்கோ.

Quote:நீங்க சொன்ன இந்தியாவில தான் அண்மையில் ஒரு தொலைக்காட்சி நிறுவனம் மலிவான விலையில் 700 சானல்கள் கொண்ட ஒரு டிஸ்க்கை விற்பனைக்கு விட்டது.சன் ரீவி செய்தியிலை பார்த்தது.பெயர்கள் ஞாபகம் இல்லை.அந்த டிஸ்க் ஏனிப்பிடி மலிவாக விற்கப்பட்டடு எப்பிடி இவ்வளவு விற்பனையானது என்று ஆராய்ந்ததில் அதில் பல வெளிநாட்டு தடைசெய்யப்பட்ட சானல்கள் இருந்ததாம்.அதால பார்க்கிறதுக்கு இணையம்தான் கதி என்றில்லை.இப்பெல்லாம் ஹிந்திப்படத்திலெல்லாம் எல்லாம் காட்டினமே கெட்டுப்போகணும் என்றால் நிறைய வழியிருக்கு. ஈராக் படங்கள் பத்திரிக்கைகளில் ஒரு அமெரிக்க அதிகாரி ஆண்கைதிகளை பிறப்புறுப்பில் சிகரெட்டால் சுடும் படங்கள் வந்திருந்தனதானே.
அக்கா முதலாவது நாங்க இங்க புலம்பெயர்ந்த நாடுகளில வாழுற இளைஞர்கள பற்றிக் கதைக்கிறம். இரண்டாவது நாங்க இணையத்தால சீரழிஞ்சுபோறத பற்றிகஇ கதைச்சா நீங்க ஏன் அதுகும் கெடுக்குது தர்னெ இதுகும் கெடுக்குது தர்னே எண்டுகொண்டு இருக்கிறியள். இங்க சிலபேரின்ர வியாதி உங்களுக்கும் தொத்திட்டுது எண்டு நினைக்கிறன். ஒண்டப் பற்றிக் கதைச்சா ஏன் அதபற்றிக் கதைக்கல ஏன் இதப்பற்றிக் கதைக்கல எண்டு தங்கட பலவீனத்த காட்டுறது. நாங்க கதைக்கிறது இணையத்தின்ர சீரழிவுகள பற்றி. தொலைக்காட்சியளின்ர சீரழிவுகள பற்றி வேணுமெண்டா பிறகொரு தலைப்பத் தொடங்கிக்க கதைப்பம். சரியா?
Reply


Messages In This Thread
[No subject] - by Selvamuthu - 12-28-2005, 09:53 PM
[No subject] - by இளைஞன் - 12-29-2005, 06:54 PM
[No subject] - by sOliyAn - 12-29-2005, 09:49 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:32 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:48 PM
[No subject] - by sOliyAn - 12-30-2005, 12:05 AM
[No subject] - by tamilini - 12-30-2005, 12:42 AM
[No subject] - by Selvamuthu - 12-30-2005, 01:52 AM
[No subject] - by அனிதா - 12-30-2005, 06:34 PM
[No subject] - by tamilini - 12-30-2005, 08:22 PM
[No subject] - by ப்ரியசகி - 12-31-2005, 05:50 PM
[No subject] - by tamilini - 12-31-2005, 09:03 PM
[No subject] - by Vishnu - 01-01-2006, 02:57 PM
[No subject] - by tamilini - 01-01-2006, 11:10 PM
[No subject] - by MUGATHTHAR - 01-02-2006, 10:32 AM
[No subject] - by tamilini - 01-02-2006, 05:09 PM
[No subject] - by Snegethy - 01-02-2006, 09:37 PM
[No subject] - by tamilini - 01-03-2006, 01:07 AM
[No subject] - by வியாசன் - 01-05-2006, 08:49 PM
[No subject] - by வியாசன் - 01-06-2006, 08:42 PM
[No subject] - by tamilini - 01-06-2006, 10:51 PM
[No subject] - by AJeevan - 01-07-2006, 12:56 AM
[No subject] - by tamilini - 01-07-2006, 05:03 PM
[No subject] - by அருவி - 01-10-2006, 11:42 AM
[No subject] - by tamilini - 01-10-2006, 01:30 PM
[No subject] - by Selvamuthu - 01-14-2006, 02:19 AM
[No subject] - by Mathan - 01-16-2006, 11:49 PM
[No subject] - by Selvamuthu - 01-17-2006, 04:20 AM
[No subject] - by pulukarponnaiah - 01-17-2006, 10:02 PM
[No subject] - by tamilini - 01-18-2006, 09:24 PM
[No subject] - by வர்ணன் - 01-19-2006, 03:55 AM
[No subject] - by Selvamuthu - 01-19-2006, 11:30 PM
[No subject] - by வன்னியன் - 01-20-2006, 05:34 PM
[No subject] - by Selvamuthu - 01-21-2006, 01:43 PM
[No subject] - by kurukaalapoovan - 01-23-2006, 03:11 AM
[No subject] - by Selvamuthu - 01-24-2006, 03:51 PM
[No subject] - by Eswar - 01-25-2006, 01:52 AM
[No subject] - by tamilini - 01-25-2006, 02:33 PM
[No subject] - by Mathuran - 01-26-2006, 12:09 AM
[No subject] - by tamilini - 01-26-2006, 11:16 PM
[No subject] - by Thala - 01-27-2006, 12:29 AM
[No subject] - by tamilini - 01-27-2006, 01:04 PM
[No subject] - by மேகநாதன் - 01-27-2006, 07:03 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 12:25 PM
[No subject] - by Nitharsan - 01-28-2006, 07:13 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 11:58 PM
[No subject] - by stalin - 01-30-2006, 12:00 PM
[No subject] - by RaMa - 01-31-2006, 10:10 AM
[No subject] - by Selvamuthu - 02-01-2006, 02:48 AM
[No subject] - by narathar - 02-01-2006, 10:14 PM
[No subject] - by Selvamuthu - 02-03-2006, 02:31 AM
[No subject] - by தூயவன் - 02-04-2006, 04:08 AM
[No subject] - by Selvamuthu - 02-06-2006, 12:32 AM
[No subject] - by Rasikai - 02-07-2006, 10:35 PM
[No subject] - by Selvamuthu - 02-09-2006, 12:04 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:19 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:22 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:24 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:25 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:26 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:31 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:32 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:33 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:35 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:37 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:39 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:41 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:42 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:43 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:44 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:45 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:46 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:52 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:56 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:58 AM
[No subject] - by Selvamuthu - 02-11-2006, 10:18 PM
[No subject] - by Vasampu - 02-13-2006, 05:22 PM
[No subject] - by Selvamuthu - 02-15-2006, 12:22 PM
[No subject] - by kuruvikal - 02-15-2006, 09:38 PM
[No subject] - by Selvamuthu - 02-16-2006, 01:11 PM
[No subject] - by sOliyAn - 02-22-2006, 05:53 PM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:55 AM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:59 AM
[No subject] - by Selvamuthu - 03-09-2006, 09:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)