Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் - புலம் பெயர் வாழ் இளையோரும் இணைய ஊடகமும்
#69
<b>o விஸ்ணு அண்ணா</b>

Quote:நடுவர் அவர்களே... நாம் ஒரு விடயத்துக்கு அடிமையாவதுக்கு எமது மனக்கட்டுப்பாடின்மை தான் காரணம். இணையத்திலும் அதே தான்.... மனக்கட்டுப்பாடின்மை தான் இணைய போதைக்கு காரணமே தவிர எத்தனையோ நன்மைபயக்கும் விடயங்களை தந்து கொண்டிருக்கும் இணையம் எவ்வகையிலும் காரணம் இல்லை என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன். அழிவுக்கு மட்டுமே வழிசமைக்கும் குடி, போதைவஸ்து போன்றவைகளுடன்... எத்தனையோ சாதனைகளைப்படைக்க வழிசமைக்கும் இணையத்தையும் சேர்த்து கொள்வது எவ்வகையில் பொருத்தமாகும்??
விஸ்ணு அண்ணா மனக்கட்டுப்பாடின்மைதான் அடிமைத்தனத்துக்கு காரணமெண்டுறியள் சரி அப்பிடியே வைச்சுக்கொள்ளுவம். மனக்கட்டுப்பாடின்மை எண்டுறது எப்பிடி வருது? மனக்கட்டுப்பாட்ட உடைச்சாத்தானே வரும். அப்பிடியெண்டா மனக்கட்டுப்பாட்டை உடைக்கிற அளவு பாதிப்பு தாற ஏதோண்டு இணையத்தில இருக்குத்தானே. ஏதோண்டு எண்டுறத விட நிறைய இருக்கு எண்டுறது சரியா இருக்கும். மனுசரின்ர பலவீனங்கள பாவிச்சு மனுசரின்ர மனச குழப்பி தன்னை நம்பி மட்டுமே வாழவைக்கிற ஒரு சீரழிவுச்செயல இணையம் செய்யுது. நானில்லாம உன்னால இருக்க முடியாது எண்டுற எண்ணத்த மனசுக்குள்ள விதைக்குது.

Quote:இதனால் நான் கூறவிரும்புவது நடுவர் அவர்களே....... தாயகத்தில் இருந்து வந்தவர்களுக்கு தாயக உணர்வுகள் இருக்கிறது என்று பிரியசகி கூறுகிறார். ஆனால் இங்கு பிறந்தவர்கள் அல்லது சிறுவயதில் இங்கு வந்தவர்களுக்கு தாயக உணர்வை ஊட்டுவதில் இணையம் எத்தகைய ஒரு பணியை ஆற்றுகிறது என்பதை நாம் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும். உதாரணமாக இணையத்தளத்தினூடாக தமது சேவைகளை விரிவு படுத்தும் TYO அமைப்புகளில் இணையத்தளங்களையும் நேரம் இருக்கும் போதுபார்க்குமாறு எதிரணியினரை கேட்டுகொள்கிறேன்.
tyo அமைப்பில இருக்கிற ஆக்களின்ர எண்ணிக்கை எத்தினை? அதில இணையத்த பாக்கிற ஆக்கள் எத்தின பேர்? tyo அமைப்பின்ர இணையப்பக்கங்களால என்னத்த செய்யினம்? அதில எத்தின பேர் பங்குபற்றுகினம்? அரட்டை அறைகளிலயும் படங்கள் இறக்கிற இடங்களிலயும் பங்குபற்றுற ஆக்களோட ஒப்பிடேக்க இந்த எண்ணிக்கை எதுவுமில்ல. அடுத்ததா பார்த்தமெண்டா இணையத்தினூடாக என்ன சேவையை விரிவுபடுத்தியிருக்கினம்? ஒரு online community இருக்குதா? இல்ல. ஒரு ஆரோக்கியமான கருத்து பகிர்வ செய்யிற மாதிரி ஒழுங்கான கருத்துக்களங்கள் இருக்கா? அப்பிடி இருந்தாலும் அதில ஏதாவது ஆக்கபூர்வமாக செய்யப்படுதா? இல்லையே.

Quote:காலையில் தாயகத்தில் என்ன நடந்தது ?? என்று பார்த்து... தாயக செய்திகளை அன்றாடம் பெற்றுக்கொண்டு தாயக உணர்வில் எப்போதும் இருக்கவும்.... அது மட்டும் அன்றி உலகதில் எந்த மூலையில் என்ன நடந்தது என்பதை அறிந்து உலக அறிவை பெற்றுக்கொள்ளவும்.. நாளை 10 பேர் மத்தியில் ஒரு பூரணமான ஒருவனாக தன்னை தயார்படுத்திக்கொள்ள இனையம் துணைபுரிகிறது.
அப்பிடியா? செய்திகள உடனுக்குடன பெறலாம் எண்டுறது உண்மைதான். அதில இருக்கிற திரிபுத்தன்மைகளால செய்திகளில உண்மையள் இல்லாம போகுது. உடனுக்குடன செய்திய குடுக்கோணுமெண்டு எல்லாரும் ஆசைப்படுறதால உண்மை பொய் ஆராயுறேல. ஒராள் போட்டத அந்தப் பிழையோடயே மற்றாளும் பிரதியெடுத்து போடுறது எல்லாம் நானாந்தம் நடக்குறதுதானே. இதுக்கும் உதாரணம் வேணுமா. யாழில இருக்கு.

Quote:இவ்வாறாக கல்வி, பொழுதுபோக்கு, வர்த்தகம், தொடர்பாடல், விளம்பரம் போன்ற இன்னும் பல விடயங்களில் நமது இளையோர் இணையத்தின் மூலம் பல நன்மைகளை பெற்று தம்மை மெருகேற்றி விருகிறார்கள். இவ்வாறாக பயன் கொடுக்கும் ஒரு இணையத்தை.. ஒரு சிலர் சரியான வழி நடத்தலின்றி.. அல்லது தமது தனிப்பட்ட பலவீனங்களால் கேட்டுப்போவதை சாட்டி குறை கூறுவது எந்தவகையில் நியாயமானது??
பலவீனங்கள் தானா உருவாகுறேல எண்டுற சின்ன உண்மைய பெரிய அண்ணா விஸ்ணு தெரிஞ்சுகொள்ளேலயோ? பலவீனங்கள் உருவாக்கப்படுறது. ஒண்டில ஒராள் பலவீனமா இருந்தா சரி அவர விலகியிருக்க சொல்லலாம். ஒட்டுமொத்தமா இளைஞர்கள் சமூகம் ஒரு விசயத்தில பலவீனமா இருந்தா அந்தப் பலவீனம் வெளில(இணையத்த சொல்றன்) இருந்து தான் உருவாக்கப்படுது அண்ணா. விளம்பரத்தால இளைஞர்கள் என்ன நன்மை பெறுகினம்? வியாபாரம் செய்யினமா? சரி தமிழ் இளைஞர்கள் நடத்துற online shops எத்தினை இருக்கெண்டு சொல்லுங்கோ? வர்த்தகம் போன்ற துறைகளில நன்மையடைகினம் எண்டு சொன்னாப் போதாதே. என்ன எப்படி அடையினம் எண்டு சொல்லுங்கோவன்? பொழுதுபோக்கு எண்டியள். பொழுதுபோக்கால நன்மையடையினமெண்டா சந்தோசப்படலாம். பொழுதுபோக்கெண்டு எங்கட ஆக்கள் சொல்லுறது எத? அரட்டையடிக்கிறதையா? சினிமா செய்தியள வாசிக்கிறதயா? படங்கள் இறக்கிறதையா? சினிமா நடிகர்களின்ரயும் நடிகைகளின்ரயும் படங்கள சேர்த்து வைக்கிறதயா? இல்லாட்டி online games விளையாடுறதையா? எத? எத? எத? இதெல்லாத்தையும் நன்மையளெண்டு சொன்னா உலகம் தாங்காது அண்ணா.
Reply


Messages In This Thread
[No subject] - by Selvamuthu - 12-28-2005, 09:53 PM
[No subject] - by இளைஞன் - 12-29-2005, 06:54 PM
[No subject] - by sOliyAn - 12-29-2005, 09:49 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:32 PM
[No subject] - by Selvamuthu - 12-29-2005, 11:48 PM
[No subject] - by sOliyAn - 12-30-2005, 12:05 AM
[No subject] - by tamilini - 12-30-2005, 12:42 AM
[No subject] - by Selvamuthu - 12-30-2005, 01:52 AM
[No subject] - by அனிதா - 12-30-2005, 06:34 PM
[No subject] - by tamilini - 12-30-2005, 08:22 PM
[No subject] - by ப்ரியசகி - 12-31-2005, 05:50 PM
[No subject] - by tamilini - 12-31-2005, 09:03 PM
[No subject] - by Vishnu - 01-01-2006, 02:57 PM
[No subject] - by tamilini - 01-01-2006, 11:10 PM
[No subject] - by MUGATHTHAR - 01-02-2006, 10:32 AM
[No subject] - by tamilini - 01-02-2006, 05:09 PM
[No subject] - by Snegethy - 01-02-2006, 09:37 PM
[No subject] - by tamilini - 01-03-2006, 01:07 AM
[No subject] - by வியாசன் - 01-05-2006, 08:49 PM
[No subject] - by வியாசன் - 01-06-2006, 08:42 PM
[No subject] - by tamilini - 01-06-2006, 10:51 PM
[No subject] - by AJeevan - 01-07-2006, 12:56 AM
[No subject] - by tamilini - 01-07-2006, 05:03 PM
[No subject] - by அருவி - 01-10-2006, 11:42 AM
[No subject] - by tamilini - 01-10-2006, 01:30 PM
[No subject] - by Selvamuthu - 01-14-2006, 02:19 AM
[No subject] - by Mathan - 01-16-2006, 11:49 PM
[No subject] - by Selvamuthu - 01-17-2006, 04:20 AM
[No subject] - by pulukarponnaiah - 01-17-2006, 10:02 PM
[No subject] - by tamilini - 01-18-2006, 09:24 PM
[No subject] - by வர்ணன் - 01-19-2006, 03:55 AM
[No subject] - by Selvamuthu - 01-19-2006, 11:30 PM
[No subject] - by வன்னியன் - 01-20-2006, 05:34 PM
[No subject] - by Selvamuthu - 01-21-2006, 01:43 PM
[No subject] - by kurukaalapoovan - 01-23-2006, 03:11 AM
[No subject] - by Selvamuthu - 01-24-2006, 03:51 PM
[No subject] - by Eswar - 01-25-2006, 01:52 AM
[No subject] - by tamilini - 01-25-2006, 02:33 PM
[No subject] - by Mathuran - 01-26-2006, 12:09 AM
[No subject] - by tamilini - 01-26-2006, 11:16 PM
[No subject] - by Thala - 01-27-2006, 12:29 AM
[No subject] - by tamilini - 01-27-2006, 01:04 PM
[No subject] - by மேகநாதன் - 01-27-2006, 07:03 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 12:25 PM
[No subject] - by Nitharsan - 01-28-2006, 07:13 PM
[No subject] - by tamilini - 01-28-2006, 11:58 PM
[No subject] - by stalin - 01-30-2006, 12:00 PM
[No subject] - by RaMa - 01-31-2006, 10:10 AM
[No subject] - by Selvamuthu - 02-01-2006, 02:48 AM
[No subject] - by narathar - 02-01-2006, 10:14 PM
[No subject] - by Selvamuthu - 02-03-2006, 02:31 AM
[No subject] - by தூயவன் - 02-04-2006, 04:08 AM
[No subject] - by Selvamuthu - 02-06-2006, 12:32 AM
[No subject] - by Rasikai - 02-07-2006, 10:35 PM
[No subject] - by Selvamuthu - 02-09-2006, 12:04 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:19 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:22 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:24 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:25 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:26 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:31 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:32 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:33 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:35 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:37 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:39 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:41 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:42 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:43 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:44 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:45 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:46 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:47 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:49 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:52 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:56 AM
[No subject] - by poonai_kuddy - 02-10-2006, 01:58 AM
[No subject] - by Selvamuthu - 02-11-2006, 10:18 PM
[No subject] - by Vasampu - 02-13-2006, 05:22 PM
[No subject] - by Selvamuthu - 02-15-2006, 12:22 PM
[No subject] - by kuruvikal - 02-15-2006, 09:38 PM
[No subject] - by Selvamuthu - 02-16-2006, 01:11 PM
[No subject] - by sOliyAn - 02-22-2006, 05:53 PM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:55 AM
[No subject] - by இளைஞன் - 03-02-2006, 12:59 AM
[No subject] - by Selvamuthu - 03-09-2006, 09:50 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)