02-10-2006, 01:39 AM
<b>o அனித்தா அக்கா</b>
தங்களுக்கான இணையப்பக்கங்கள செய்யிற ஆக்கள் எத்தின பேர்? அந்த இணையத்தளங்களில வாற விசயங்கள் என்ன எண்டு பாப்பமா? இலவசமா குடுக்கிற வழங்கிகள வச்சுக்கொண்டு தனக்கு பிடிச்ச நடிக நடிகை யாரெண்டும் அவையின்ர படங்களையும் போட்டு வைக்கிறத தாகே செய்யினம்? நீங்க சொன்ன ஆக்களோட எல்லாம் தொடர்ப வச்சிருந்தா நீங்க எல்லாம் பெரியாக்களாகிடுவீங்களா? நீங்க சுயமா ஏதாவது செய்தாத்தான் உங்களுக்கு புகழ். அதவிட்டிட்டு அவையோட தொடர்பு வச்சிருக்கிறன் இவையோட தொடர்பு வச்சிருக்கிறன் எண்டா என்ன அர்த்தம்?
உலக நடப்புகள அறிஞ்சு கொள்ளுற ஆக்கள பாப்பம்? இணையத்த திறந்தோடன போறது முதல்ல இண்டைக்கு எந்த நடிகைக்கும் எந்த நடிகருக்கும் கல்யாணம் எண்டு பாக்கவும் யாருக்கும் யாருக்கும் கல்யாணம் எண்டு பாக்கவும் தானே? இதுக்கும் யாழ் களத்தில உதாரணஞ் சொல்லவா? அல்வா கொடுத்த ஐஸ்வர்யா ராயெண்டு புது தலைப்பு தொடங்கி அதுக்கு கீழ கண்ணீர் வடிக்கிறதுக்கெண்டு ஒரு கூட்டமும் விசிறிவிடுறதுக்கு ஒரு கூட்டமும் திரியிறது இங்க நடக்குதே. உதுகள கவனிக்கிறேலயா? ஐஸ்வர்யா ராய் யாரக் கட்டினா உங்களுக்கு என்ன வந்திச்சு? அவான்ர பிள்ளைக்கு உங்கட பேர வைக்கிதெண்டு சொன்னாவோ? மானங்கெட்ட பிழைப்பு நடத்துற எங்கட இளசுகளுக்கு இணையம் உதவி செய்து எண்டுறது இதில இருந்தே தெரியலயா?
படம் இறக்கிறதயும் கல்யாணக்காட் அடிக்கிறதயும் விட்டா பெரும்பாலான இளைஞர்களுக்கு என்ன தெரியுமெண்டுறீங்க? அதவிடுங்க கணனியே பாவிக்கத் தெரியாததுகளுக்கெல்லாம் வீட்டில இணையத்தளத்த பூட்டிக்குடுத்திட்டு இருக்கினம் தாய்தகப்பன். கணனிய ஒழுங்கா பாவிக்கத் தெரியாதவை இணையத்தில என்ன பிரயோசனமா செய்து கிழிக்கப் போயினம்?
Quote:எதிரணித் தலைவர் அவர்களே... நீங்கள் குறிப்பிட்ட சிறுவயதில் அல்லது அண்மைக்காலத்தில் புலம்பெயர்ந்தவர்களில் ஒரு பகுதியினர் தான் தமிங்கிலத்தில் தகவல் பரிமாறும் இணையத்தளங்களில் தம் நேரத்தை போக்குகின்றனர்... அதற்கு காரணம் ஏற்கனவே அவர்கள் சினிமா மோகத்தில் இருக்கிறார்கள் என்பது தான். நீங்கள் சொல்கிற அப்படியான தமிங்கிலத் தளங்களில் இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளிலிருந்தும் பெரும்பான்மையானவர்கள் வருகிறார்கள் என்பதை மறந்துவிடவேண்டாம். இங்கே பிறந்து வளர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்கள் வாழும் நாட்டின் மொழியிலுள்ள தளங்களில் தான் தம்மை அதிகம் ஈடுபடுத்திக்கொள்வார்கள் என்பது யதார்த்தம்...அனித்தா அக்கா நீங்க சொல்ற மாதிரி அவையவை வாழுற நாட்டு மொழில இருக்கிற இணையத்தளங்களுக்கு போகினம் எண்டு வைச்சு கொள்ளுவம். ஆனா எந்த வகையான தளங்களுக்கு போகினம் எண்டு சொல்லுங்க பார்ப்பம்? அதுவும் சினிமாத்தளங்களாவும் இல்லாட்டை அரட்டையடிக்கிற தளங்களாவும் அதுவும் இல்லாட்டி பொப் ஸ்ரார்கள பற்றின தளங்களாவும் தான் பெரும்பான்மையாக இருக்கும். ஏற்கனவே சினிமா மோகத்தில இருக்கினமா இல்லையா எண்டுறது பிரச்சனையில்ல. இணையம் அதுக்கு துணை போகிறதா இல்லையா எண்டுறது தான் பிரச்சனை.
Quote:சினிமாவை, நடிகர் நடிகையரை, அவர்களின் நெளிக்கோலங்களை இணையத்தின் பரவலாக்கத்திற்கு முன்னரே சஞ்சிகைகளிலும் பக்கம் பக்கமாக அலசினார்கள் என்பதை நீங்கள் மறந்துவிட்டீர்கள் போலும்... சினிமா இணையப்பக்கங்களை புரட்டுவதால் தான் இளைஞர்கள் சீரழிந்துபோகிறார்கள் என்றால், அதற்கு காரணம் இணையம் அல்ல சினிமா என்பதை எதிரணியினர் புரிந்துகொள்ளவேண்டும்....!இதப்பற்றி முதல்ல எங்கட அணி ஆக்கள் சொல்லிட்டினம் தான். திரும்ப நான் ஒண்ட சொல்ல விரும்புறன். முந்தியெண்டாலும் பறவால்ல சஞ்சிகையில பாத்திட்டு அத வெட்டி மடிச்சு ஏதாவது ரமூலை முடுக்கில வச்சினம். இப்ப ஐஸ்வர்யா ராயின்ர முதல் தொட்டு ஏஞ்சலஸ் எண்டு அவையின்ர படத்த எல்லாம் ஸ்கிறீன்சேவரா கணனித் திரையில பாவிக்கினம். கணனிய போட்ட கண்ணுக்கு முன்னால வாறது உந்த கறுமங்கள் ஐஸ்வர்யா ராயின்ர படமும் அசினின்ர படமும் தான். அம்மா அப்பான்ர படத்த எத்தின பேர் போட்டு வைக்கினம்.
Quote:ஐயா எதிரணித் தலைவர் அவர்களே, சினிமாப் படங்களைத் தரவிறக்குவதும், கல்யாணக்காட் அடிப்பதும் (இது கணினி சார்ந்தது, இணையம் இல்லாமலே இதை செய்யலாம்.) தான் பிள்ளையின் கணினி வித்தகம் என்று எண்ணுவது பெற்றோரின் அறியாமை.... தொலைக்காட்சித் தொடர்கள் பார்த்து கண்ணீர் வடிக்கும் பெற்றோரும், வானொலிகளில் மணிக்கணக்கில் அரட்டையடிக்கும் பெற்றோரும் இதைத்தான் வித்தகமாக நினைத்து பெருமையடித்துக் கொள்வார்கள். ஏனென்றால் அவர்களின் வட்டம் குறுகியது. ஆனால் உண்மையில் அதனையும் தாண்டி பிள்ளை நிறைய பயனுள்ள விடயங்களை செய்து பயனடைகிறது.... வலைப்பதிவுகளை வாசிக்கிறார்கள்... தமக்கான ஒரு இணையப்பக்கத்தை செய்து தனது எண்ணங்களையும் கருத்துக்களையும் வெளிப்படுத்துகிறார்கள். யேர்மன் எழுத்தாளர் சோழியான் அண்ணா, சுவிசில் வசிக்கும் ஒளிப்பதிவுக் கலைஞர் அஜீவன் அண்ணா, போன்ற இன்னும் பல இலக்கியவாதிகளுடனும் கலைஞர்களுடனும் தொடர்புகளைப் பேணுகிறார்கள். என்னைப் போன்றவர்கள் கூச்சமில்லாமல் கவிதைகளை எழுதிப் பழகுகிறார்கள். தாயக செய்திகளை உடனுக்குடன் படிக்கிறார்கள். உலக நடப்புக்களை அறிந்து அறிவை வளர்த்துக்கொள்கிறார்கள். இவை பெற்றோருக்கு தெரியாது தான் ஏனென்றால் அவர்கள் குறுகிய வட்டத்துக்குள்ளே இருக்கிறார்கள். எனவே பெற்றோரின் குறுகிற பார்வையை மட்டும் வைத்துக்கொண்டு இளைஞர்கள் இணையத்தால் சீரழிகிறார்கள் என்ற வாதம் குழந்தைப்பிள்ளைத்தனமானது....!அனிதா அக்கா செவ்வாயில குடியேறி எத்தின காலம்? இல்ல நீங்க இந்த உலகத்தில இருக்கிற மாதிரி எனக்கெண்டாத் தெரியல. தமிழ் வலைப்பதிவின்ர காலம் ஒரு ஒண்டரைல இருந்து இரண்டு வருசம் இருக்குமா? அத வாசிக்கிறாக்கள் ஒரு 1000 இல இருந்து 3000க்குள்ள வருமா? அந்த 3000க்குள்ள இளைஞர்கள் ஒரு 1900ம் பேர் வருமா? அதில புலம்பெயர்ந்து வாழுற ஈழத் தமிழ் இளைஞர்கள் 300 பேர் வருமா? மொத்தமா இணையத்தளம் பாக்கிற இளைஞர்களுக்குள்ள இந்த 300 பேர் எல்லாம் ஒரு கணக்கா?
தங்களுக்கான இணையப்பக்கங்கள செய்யிற ஆக்கள் எத்தின பேர்? அந்த இணையத்தளங்களில வாற விசயங்கள் என்ன எண்டு பாப்பமா? இலவசமா குடுக்கிற வழங்கிகள வச்சுக்கொண்டு தனக்கு பிடிச்ச நடிக நடிகை யாரெண்டும் அவையின்ர படங்களையும் போட்டு வைக்கிறத தாகே செய்யினம்? நீங்க சொன்ன ஆக்களோட எல்லாம் தொடர்ப வச்சிருந்தா நீங்க எல்லாம் பெரியாக்களாகிடுவீங்களா? நீங்க சுயமா ஏதாவது செய்தாத்தான் உங்களுக்கு புகழ். அதவிட்டிட்டு அவையோட தொடர்பு வச்சிருக்கிறன் இவையோட தொடர்பு வச்சிருக்கிறன் எண்டா என்ன அர்த்தம்?
உலக நடப்புகள அறிஞ்சு கொள்ளுற ஆக்கள பாப்பம்? இணையத்த திறந்தோடன போறது முதல்ல இண்டைக்கு எந்த நடிகைக்கும் எந்த நடிகருக்கும் கல்யாணம் எண்டு பாக்கவும் யாருக்கும் யாருக்கும் கல்யாணம் எண்டு பாக்கவும் தானே? இதுக்கும் யாழ் களத்தில உதாரணஞ் சொல்லவா? அல்வா கொடுத்த ஐஸ்வர்யா ராயெண்டு புது தலைப்பு தொடங்கி அதுக்கு கீழ கண்ணீர் வடிக்கிறதுக்கெண்டு ஒரு கூட்டமும் விசிறிவிடுறதுக்கு ஒரு கூட்டமும் திரியிறது இங்க நடக்குதே. உதுகள கவனிக்கிறேலயா? ஐஸ்வர்யா ராய் யாரக் கட்டினா உங்களுக்கு என்ன வந்திச்சு? அவான்ர பிள்ளைக்கு உங்கட பேர வைக்கிதெண்டு சொன்னாவோ? மானங்கெட்ட பிழைப்பு நடத்துற எங்கட இளசுகளுக்கு இணையம் உதவி செய்து எண்டுறது இதில இருந்தே தெரியலயா?
படம் இறக்கிறதயும் கல்யாணக்காட் அடிக்கிறதயும் விட்டா பெரும்பாலான இளைஞர்களுக்கு என்ன தெரியுமெண்டுறீங்க? அதவிடுங்க கணனியே பாவிக்கத் தெரியாததுகளுக்கெல்லாம் வீட்டில இணையத்தளத்த பூட்டிக்குடுத்திட்டு இருக்கினம் தாய்தகப்பன். கணனிய ஒழுங்கா பாவிக்கத் தெரியாதவை இணையத்தில என்ன பிரயோசனமா செய்து கிழிக்கப் போயினம்?
Quote:எதிரணித் தலைவர் அவர்களே, மனதிலுள்ள வக்கிரங்கள் என்று நீங்கள் சொன்னதன் மூலம் ஏற்கனவே அவர்கள் சீரழிந்துதான் உள்ளார்கள் என்பதை ஒத்துக்கொள்கிறீர்கள்... இணையப் பரவலாக்கத்துக்கு முன்னரே மனதில் உள்ள வக்கிரங்களை சுவர்களிலும், பேருந்துகளிலும் இறக்கி வைத்தார்கள் என்பதை உங்களால் மறுக்க முடியுமா?ஏற்கனவே சீரழிஞ்சிருக்கட்டும். சீரழிஞ்சு போனதுகள இன்னும் சீரழிக்கிறதும் சீரழிவு தானே? ஏதோ ஒரு மூலையில இருக்கிற சீரழிவ உலகமெல்லாம் காவி தொற்றுநோய்போல பரப்புறதும் சீரழிவுதானே? இந்தியாவில பெரியார் எண்டு ஒருத்தர் இருந்தவர். அவரின்ர சில வரியள இங்க உங்களுக்கு நினைவுபடுத்துறது பொருத்தமா இருக்குமெண்டு நினைக்கிறன். கடவுள கற்பித்தவன் முட்டாள்......கடவுள பரப்பியவன் அயோக்கியன்.....கடவுள வணங்குறவன் காட்டுமிராண்டி எண்டு சொல்லியிருக்கிறார். அதத்தான் நாங்களும் சொல்லுறம். சீரழிவுகள பரப்புற இணையமும் அயோக்கியத்தனமானது எண்டு.
Quote:யாகூ சாற் ரூம்கள் பற்றி எதிரணித் தலைவர் குறிப்பிட்டார்.... அவர் கெட்டதை மட்டுமே ஒலிவடிவில் கேட்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.... அது ஒரு சிறு துளிதான். யாகூ அரட்டை அறைகளிலே ஒலிவடிவிலான பட்டிமன்றங்கள் நடந்தனவே அவற்றை நீங்கள் அறியவில்லையா? ஒரு சில கெட்டவர்களை வைத்துக்கொண்டு தமிழர்கள் எல்லோருமே கெட்டவர்கள் என்று வெளிநாட்டவர்கள் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கிறது உங்கள் வாதம்..... எதிரணித் தலைவர் யாழ் போன்ற தமிழ்த் தளங்களை மட்டுமே மையமாக வைத்து தனது வாதத்துக்கு வலுச்சேர்க்கிறார்..... யாழுக்கும் அப்பால் பல வேற்றுமொழித் தளங்களின் மூலம் தமிழ் இளைஞர்கள் பயனடைகிறார்கள் என்பதுவும் அதன் எண்ணிக்கை மிகப்பெரியது என்பதுவும் எதிரணியினர் அறியவில்லைப் போல் உள்ளது....அனிதாக்கா அனிதாக்கா....ஒலிவடிவில நடந்த பட்டிமன்றங்கள் எத்தின பேரால நடத்தப்பட்டிருக்கு? அது எவ்வளவு காலத்துக்கு தொடர்ந்த நடந்தது? இப்பவும் அது தொடருதா? இந்த கேள்வியளுக்கு உங்களால என்ன பதில் தரமுடியும்? இவ்வளவு பட்டியலிட்டா பிறகும் ஒருசில கெட்டவைகள் தான் நடக்குது எண்டு நீங்க இனியும் சொல்லுவீங்க எண்டா உங்களுக்காக நான் மிக வருந்துறன். வேற மொழித் தளங்கள பற்றி முதலில சொல்லிட்டன். தமிழ்ச்சினிமால அரைவாசிப்பேர் மூழ்கி இருக்கினமெண்டா மேற்கத்தய பாட்டு மோகத்தில (கெட்ட கெட்ட வார்த்தைகளில படிக்கிறதுகளெல்லாம் பாட்டாகிட்டு) மிச்சப்பேர் திரியினம்.
Quote:இன்று பெரும்பாலான பயனுள்ள தமிழ் இணையத்தளங்களை நிர்வகிப்பவர்கள் யார்? தாங்கள் கற்ற தொழில்நுட்பத்தின் மூலம் இணையத்தளங்களை வடிவமைத்து வழங்குபவர்கள் யார்? இளைஞர்கள் தான் என்கிற உண்மையை மறுக்கப் போகிறீர்களா? இன்று இந்த பயனுள்ள இணையத்தளமான யாழ் இணையத்தை வடிவமைத்தும் நிர்வகித்தும் வருகின்ற மோகன் அண்ணா இளைஞர் இல்லையா? இன்று உடனுக்குடன் செய்தியை ஓடிப்போய் புதினம் செய்தித்தளத்தில் பார்க்கிறீர்களே அதனை நிர்வகிப்பவர் யார்? ஒரு இளைஞர் தானே? வலைப்பதிவுகள் பலவற்றில் எழுதுபவர்களில் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள் என்பதையும் அதன்மூலம் தமிழில் பல நல்லவிதயங்களை அவர்கள் எழுதுகிறார்கள் என்பதையும் எப்படி மறந்துபோனீர்கள்? இலக்கிய இதழ்களான அப்பால் தமிழ், தமிழமுதம், பதிவுகள் போன்ற இணையத்தளங்களை மூத்தவர்கள் நெறிப்படுத்த தொழில்நுட்ப உதவிகள் செய்பவர்கள் யார்? இளைஞர்கள் தானே? தமிழ் சமூகத்துக்கு எதனைச் செய்தார்கள் என்று கேட்கிறீர்களே தமிழ்த்தேசியத்துக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கும் உறுதுணையாக பல தளங்களை உருவாக்கி நெறிப்படுத்துபவர்கள் யார்? இளைஞர்கள் தானே? தமிழீழப் இலக்கியப் படைப்புகள் பல வெளிஉலகத்துக்கு தெரியாமல் இருந்ததே அவற்றையெல்லாம் இணையம் ஊடாக உலகத்தமிழர்கள் அறியும் வகை செய்தவர்கள் யார்? html கற்போம், java கற்போம், வீடியோத் தொழில்நுட்பம் கற்போம், விஞ்ஞானம் அறிவோம் வாருங்கள் என்று தமிழ்சமூகத்தை தொழில்நுட்ப அறிவையும், அறிவியலையும் வளர்க்க இணையம் ஊடாக வழிசெய்தவர்கள் யார்? இன்னும் இன்னும் நிறைய சொல்லலாம்....இணையத்தளங்க நிர்வகிச்சா போதாது. தொழில்நுட்பங்கள படிச்சா போதாது. இதெல்லாம் செய்தாபோல நன்மையடையினமெண்டு யார் சொன்னது? கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக எண்டு வள்ளுவன் சொல்லி வச்சானே அதுமாதிரி நடக்கோணும். அப்பதான் பயனடையினமெண்டு அர்த்தம்.படிச்ச தொழில்நுட்பத்த வச்சு என்னத்த பெருசா செய்திட்டினம்? இலட்சக்கணக்கில இணையத்த பாக்கிற இந்த தமிழ் இளைஞர்களில எத்தின பேராம் இணையப்பக்கத்த உருவாக்கினம். அவை உருவாக்கினதில எத்தின பக்கங்கள் பயனுள்ள பக்கங்கள்? ஒரு கணக்கெடுத்த நடத்திப் பாப்பமா? தமிங்கிலத்தில இருக்கிற தளங்கள் 30 விழுக்காடுகளத் தாண்டும். முழுக்க முழுக்க ஆங்கிலத்தில இருக்கிறதுகள் 50 வீழுக்காடத் தாண்டும். மிச்சமிருக்கிற 20 ல 10 விழுக்காடு தமிழில இருந்தாலும் பயனில்லாத சினிமாக் குப்பயைள காவி வாற தளங்கள். கடைசியா மிஞ்சி இருக்கிறதில எத்தன வீதமான பக்கங்கள் உண்மையான தகவல்கள தாங்கி வருது? எத்தின வீதம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுது? அனித்தாக்கா நீங்க சொன்ன அந்த மூன்று இலக்கிய பக்கங்கள விட வேற ஒரு நாலு புலம்பெயர் ஈழத்தமிழர்களால அதுவும் இளைஞர்களால தொழில்நுட்ப உதவி செய்யப்படுற இலக்கிய பக்கங்கள பட்டியலிட முடியுமா உங்கட அணியால? முடியாது. ஆக உலகத்தில எண்ணிக்கைல ரண்டாவது இடத்தில இருக்கிற தமிழ் இணையப் பக்கங்களில மூன்றே மூன்று இலக்கிய தளங்கள வச்சுக்கொண்டு நன்மையடையினம் எண்டு சொல்லி வாதாட வந்திருக்கிற உங்கள நினைச்சு அழவா சிரிக்கவா எண்டு தெரியல. தமிழீழ விடுதலை போராட்டுத்துக்கான பக்கங்கள ஈழத்தில இருந்தே செய்யினம். அப்பிடி இங்க இருக்கிறாக்கள் செய்யிறதுகள எண்ணினாலும் ஒரு 20 இல இருந்து 30 க்குள்ளதான் வரும். அதில உண்மையாவ தேசித்துக்கு துணையா இருக்கிறதெண்டு பாத்தா ஒரு கை விரல்களுக்குள்ள அடக்கலாம். தமிழீழ இலக்கியத்த உலகத்துக்கு எப்பிடி அறிய வச்சவை? மொழிபெயர்த்து மற்ற மொழிகளில மற்ற நாட்டுக்காரரின்ர பக்கங்களில போட்டு ஈழத்தமிழ் இலக்கியத்த பரப்பினவையா? இலக்கியமெண்டா சூரியக்குடும்பம் தாண்டி ஓடுறவை தான் இந்த இணையம் பாக்கிற 90 வீத இளைஞர்கள். இதில இவை இலக்கியத்த உலகம் முழுக்க வெளிச்சம் போட்டுக் காட்டினவையாம் (அய்யோ அய்யோ). HTML JAVA VIDEO பற்றி எங்கயாவது முழுமையா இருக்கா? எல்லாம் அரைகுறை. இதுக்குள்ள இத வச்சு நாங்க என்னத்த படிச்சு கிழிக்கிறது? விஞ்ஞானத்த பிபிசில போய் வாசிச்சா விளக்கமா இருக்கு. அத மொழிபெயர்த்து போடுறத வாசிக்கிறவ எத்தின பேர்.
Quote:எதிரணித் தலைவர் அவர்களே கூத்தடிப்பதற்கும் கும்மாளம் அடிப்பதற்கும் டிஸ்கோ இருக்கிறது. டேற்றிங் செய்வதற்கு கைத்தொலைபேசி இருக்கிறது. கல்யாண பிறந்தநாள் சாமத்தியச்சடங்கு மண்டபங்களிலும் தமிழர் கலைநிகழ்வுகளிலும் கைத்தொலைபேசி இலக்கங்களை மாற்றிக்கொண்டு அதற்கு பின்னால் டேட்டிங் செய்து பிறகு காதல் செய்து பிறகு காமம் கொண்டு பிறகு கைவிட்டு என்று நடக்கிறது. இணையம் இல்லாமல் தான் இவ்வளவும் நடக்கிறது.... !இணையமில்லாமல் இதெல்லாம் நடக்குதெண்டு யார் சொன்னது. கைத்தொலைபேசி இலக்கத்த கடவுளென்ன கனவில கொண்டுவந்து குடுக்குறாரோ? முதலில அரட்டை அறை வழிய தான் கைத்தொலைபேசி இலக்கங்கள் மற்றாக்களிட்ட பரவுது எண்டுற விசயம் அனித்தா அக்காக்கு தெரியேல போல. அதுக்கு பிறகு தொலைபேசில கதைச்சு ஏதாவது ஒரு நிகழ்ச்சில சந்திச்சு பிறகு அங்கால நடக்குறதெல்லாம் சீரழிவுகள். அரட்டை அறையில ஓராளுக்கு கிடைக்கிற இலக்கம் பிறகு அவரின்ர நண்பர் நண்பரின்ர நண்பர் எண்டு அப்பிடியே பரவி ஆளாளுக்கு மாறி மாறி கடைசில என்ன நடக்கும் எண்டு நான் இங்க சொல்லத் தேவையில்ல எண்டு நினைக்கிறன்.

