02-10-2006, 01:37 AM
<b>ஈ) எதிர்வாதங்கள்</b>
<b>o இளைஞன் அண்ணா</b>
<b>o இளைஞன் அண்ணா</b>
Quote:வளர்ச்சி என்றால் என்ன? மேல்நோக்கி நகர்வதா? கீழ்நோக்கி நகர்வதா? - மரம் மேல் நோக்கி வளர்கிறது. வேர் கீழ்நோக்கி வளர்கிறது.எண்டு இளைஞன் அண்ணா சொன்னார். அண்ணா நாங்க மரமே வளரல மரம் பட்டுப் போகுது வேர் அழுகிப் போகுது எண்டு சொல்லுறம். வளருதா இல்லாட்டி சீரழியுதா எண்டுறது தானே அண்ணா தலைப்பே. நீங்க மேல நோக்கி வளருது கீழ நோக்கி வளருது எண்டு நகைச்சுவையள் சொல்லி சிரிக்க வைக்கிறியள்.
Quote:உலக மொழிகளில் இணையப்பக்கங்களின் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில்புதுசு புதுசா இணையத்தளங்கள் வருகுது எண்டுறது ஒரு பக்கமா இருக்கட்டும். புதுசு புதுசா முளைச்சு வாறதுகள் எல்லாம் ஊனத்தோட (மன்னிக்க) வந்தாலும் பறவால்ல. வாறதுகள் எல்லாம் தொற்றுநோயள காவிக்கொண்டெல்லோ வருகுதுகள். அந்த தொற்றுநோயள் பரவி கடைசில சிகிச்சைக்கு என்ன செய்யிறதெண்டு முழிக்கிறதுக்கு முதலே தீர்வுகள காணுங்கோ.
இருப்பது தமிழ் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. புதிய புதிய இணையத்தளங்களின்
தோற்றங்களும், அவற்றின் பயன்பாடுகளும் எத்தகையன என்பது எதிரணியினர் அறியாததா?
Quote:இன்று இந்தப் பட்டிமன்றத்தில் பங்கேற்று தமது கருத்துக்களை முன்வைக்கவும்,தங்கட முகத்தயும் அடையாளத்தையும் மறைச்சுக்கொண்டு கருத்துகள வைக்கத்தானே இந்த இணையத்தளங்களில நடக்கிற கருத்தாடலுகள் வழிசெய்யுதுகள். 80 விழுக்காடு ஆக்கள் இளமாக்கள் எண்டு எப்பிடி உறுதியா சொல்லுவீங்கண்ணா? முகமூடியளோட திரியிற இவையில யார் ஆம்பிள? யார் பொம்பிள? யார் இளமாள்? யார் கிழடு? எண்டு எப்பிடி தெரிஞ்சுகொள்ளுவீங்க? பெண்ணாக இருக்கிறவை தங்கள ஆணாயும் | ஆணாக இருக்கிறவை தங்கள பெண்ணாயும் | வயது கூடினவை தங்கள வயது குறைஞ்சவை எண்டும் | குண்டா இருக்கிறவை தங்கள மெலிஞ்ச கட்டான உடம்போட இருக்கிறமாதிரியும் இணையத்தில அடையாளப்படுத்தலாமே? இதுகள வச்சுக்கொண்டு சும்மா கற்பனைல கணிப்புகள செய்யிறது எதுக்குமே உதவாதண்ணா. மனுசர்கள் சிலதுகள் தங்கள பறவையள காட்டிக்கொள்ளுற உதாரணங்கள யாழ்களத்திலயும் உங்களுக்கு எடுத்துக் காட்டவா? சரி யாழ்களம் மாதிரி நன்மை தாற தமிழ் களங்கள் எத்தின இருக்கு? தமிழ் களங்களால மட்டும் தான் நன் பெறேலும் எண்டு சொல்லேலாது வேறு மொழி களங்களிலயும் நன்மை பெறலாம் எண்டு சொன்னியள். அப்பிடியான களங்களுக்கு எத்தின எங்கட இளமாக்கள் போறவை எண்டு சொல்லுங்கோவன். கண்கெடுப்பு ஒண்டு நடத்தினா உங்கட கற்பனையள் எல்லாம் கற்பனையாவே போயிடுமண்ணா.
கருத்தாடல்களை நிகழ்த்தவும் வந்திருப்போரில் 80வீதமானோர் இளையோர் தான் என்பதும்,
அவர்கள் இந்த இணைய ஊடகத்தினூடாக நிகழும் கருத்துப் பரிமாற்றத்தில் நன்மையே
அடையப் போகிறார்கள் என்பதும் உறுதி. அதனடிப்படையில், இணைய ஊடகத்தால் இளம்
சமூகம் சீரழிகிறது என்று வாதாட வந்திருக்கும் எதிரணி இளைஞர்களும்
நன்மைபெறுபவர்களாகவே உள்ளார்கள் என்பதனை அவர்களுக்கு சுட்டிக்காட்ட
விரும்புகிறோம்.
Quote:அறிவுசீவிகளாக தங்களை தாங்களே வரித்துக்கொண்டு ஒரு குறுகிய வட்டத்தைஅண்ணா புறக்கணிப்பு எங்கதான் இல்ல? எல்லா இடத்திலயும் இருக்கு. இணையத்திலயும் அது இரக்கண்ணா. தங்கள அறிவாளியளா காட்டிக் கொள்ளுறதும் பிறகு மற்றாக்கள மட்டந்தட்டுறதுமு் இணையத்திலயும் இருக்கு. இதுக்கும் யாழ் களத்த உங்களுக்கு முன்னுக்கு உதாரணமா வைக்கலாம். நீங்க ஒரு கருத்த வச்சா உங்கள மட்டமா விமர்சிக்கிறதும் உங்கள மாற்றுக்கருத்தாளன் எண்டு நக்கலடிக்கிறதும் புரட்சி புதுமை எண்டு சொல்லி கிண்டலடிக்கிறதும் பெண்ணியவாதியள் எண்டு கேலி பண்ணுறதும் யாழ் களத்திலயே நடக்கலயா அண்ணா? நீங்க சொல்லுற அந்த வெளியுலகத்தில இருந்துதான் இந்த இணையமும் இயங்குது எண்டுற மறந்திட்டீங்க போல நீங்க.
உருவாக்கி, அந்த வட்டத்துக்குள் தாமே பெரியவர்கள் என்றும், இவர்கள் சிறுவர்கள் என்றும்
வளர்ந்துவரும் இளைஞர்களைப் புறம்தள்ளுவதுதான் வெளியுலகம். அவர்களைத் தாண்டி,
அவர்தம் அறிவிலித்தனத்தைத் தகர்த்தெறிந்து நம்மாலும் முடியும், நாமும் வளர்வோம்
என்கிற இளையோர் தம் எண்ணத்துக்கு சுதந்திரமான ஒரு களத்தை அமைத்துத் தந்தது இந்த
இணைய ஊடகம் என்றால் மிகையாகாது.
Quote:வெவ்வேறு நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் நம் தமிழ் இளம் சமூகம் ஒருங்கிணையவும், தமக்குள் நட்புறவை வளர்த்துக்கொள்ளவும், அதனூடாக பல செயற்திட்டங்களை வகுக்கவும், வகுத்த செயற்திட்டங்களை ஒன்றுகூடி செயற்படுத்தவும் பலமாக, பாலமாக இருப்பது இணையம் என்றால் மறுக்கமுடியுமா?நட்புறவ வளத்தா பறவா இல்ல. நட்புறவ வளத்துக் கொள்ள இடமளிக்கிற அதே இணையத்தில தான் அதுக்கும் அதிகமான அளவு பகையுணர்வ வளர்த்துகொள்ளுறதுக்கும் இடமிருக்கு. செயற்திட்டங்கள வகுக்கிறதுக்கும் வகுத்த செயற்திட்டங்கள ஒன்றுசேர்ந்து செயற்படுத்துறதுக்கும் பலமா இருக்கெண்டு சொல்லுறீங்க. நான் அத மறுக்கல அண்ணா. ஆனா எப்பிடியான செயற்திட்டங்கள? குழுமோதல்களுக்கான செயற்திட்டங்கள. ஒரு பெண்ணை பத்துப்பேர் எப்பிடி காதலிக்கலாம் எண்டுறதுக்கான செயற்திட்டங்கள. அந்த இணையத்தளத்த எப்பிடி ஊடுருவலாம் எண்ட செயற்திட்டங்கள வகுக்கத்தானே?
Quote:சாதி, சமயம், ஊர்ப் பாகுபாடுகள் களைந்து ஈழத்தமிழர் நாம் என்கிற தேசியத்தைஉங்கள நினைச்சா எனக்கு அடிக்கடி சிரிப்புத்தான் வருது. சாதி சமயம் ஊர்ப்பாகுபாடுகள் களைஞ்சு தமிழர் எண்டுற தேசியத்த உணரவைத்திருக்கிறதா? பாவம். பகல்கனவு. சாதிகளின்ர பெயர சொல்லி சண்டை பிடிக்கிற இளமாக்கள யாகூ போன்ற அரட்டை அறைகளில காட்டுறனஇ வாறீங்களா? சமயப் பாகுபாட்ட அப்பட்டமா வெளிக்காட்டுற வலைப்பதிவுகள காட்டுறன் பார்க்க நீங்க தயாரா? அதவிடுங்கோ. யாழ் களத்திலய இந்து சமயத்தின்ர குறைபாடுகள விமர்சிச்சு சிலபேர் கருத்து வச்சிருக்கினம். அதுக்கு சில மதம் பிடிச்சவை சில பேர் இந்து மதத்துக்கு எதிரா கருத்து வச்சா அத நிர்வாகம் விடுது ஆனா மற்ற மதத்துக்கு எதிரா வச்சா விடுவினமா எண்டு அப்பட்டமா மதவெறிய காட்டினதுகளும் யாழ்களத்தில இருக்கு. தேடிப்பிடிச்சு காட்ட நான் தயார். சன்மானம் தர நீங்கள் தயாரா? சகோதரத்துவமா (அய்யோ அய்யோ)? சண்டைக்காரர்களாத்தானே இணையம் புகலிட தமிழ் இளைஞர்கள வளத்து விட்டிருக்கு.
உணர்ந்து, சகோதரத்துவத்தை வளர்த்து இளையோர் மத்தியில் ஒரு புதிய உலகத்தை
உருவாக்கிக்கொண்டிருப்பது எது? இணையம் என்கிறேன் - மறுப்பீரோ?
Quote:இளையோர் மீது (குறிப்பாக இளம் பெண்கள்) கருத்தியல் சுதந்திரத்தில் தலையிட்டு,முதலே சொன்னதுதான். வெளியுலகத்துக்குள்ள தான் இந்த இணைய இணைய உலகமும் இருக்கண்ணா. வெளிஉலகத்தின் எல்லா விடயங்களும இணையத்துக்குள்ளயும் பிரதிபலிக்குது. வெளியில நடக்கிற பெண்கள் மேல அவிட்டு விடப்படுற கருத்தியல் வன்முறை இணைய உலகத்துக்குள்ளயும் நடக்குது. இதுக்கும் யாழ் களத்த ஒரு அளவுகோலாக அல்லாட்டி எடுத்துக்காட்டா என்னால காட்ட முடியும். ஒரு பெண் கருத்த வச்சா அவவ கீழ்த்தரமா விமர்சிக்கிறது இங்க நடக்கலயா? அத விடுங்கோ. ஒரு ஆண் தன்ர கருத்த வச்சா கூட அவரின்ர மனுசி அக்கா தங்கச்சி அம்மா மகள் எண்டு எல்லாரையும் இழுத்து மட்டமாக விமர்சிக்கிற மடத்தனம் இங்க நடந்தத காணலயா? யாழில இருக்கிற எத்தின பெண்கள் நீங்க சொல்லுற மாதிரி சுதந்திரமாவும் சுயமாவும் தங்கட கருத்த வச்சிருக்கினம்? நான் மற்றது தமிழினி அக்கா (இவாவும் அடிக்கடி பயந்து ஓடிடுவா) மற்றது குருவி அக்கா(இவா ஒருத்தி தான் போறன் போறன் எண்டுகொண்டு இன்னும் போகாம இருக்கிற ஒராள்) அடுத்தது அஸ்வினி அக்கா. இவைய விட யாழில ஒரு பெண்ண சொல்லுங்கோ பாப்பம்? (இதுகள் ஒண்டும் இணையத்தில நடக்கல எண்டு நீங்க சொன்னபடியாத்தான் சொன்னான்)
கருத்தியல் வன்முறையை கட்டவிழ்த்துவிடும் வெளியுலகத்துக்கு மாற்றாக, சுதந்திரமாகவும்
சுயமாகவும் தனது கருத்தை, தனது எண்ணத்தை, தனது உணர்வுகளை வெளிப்படுத்த
வழிசமைத்துக்கொடுத்திருப்பது எது? இணையம்தானே? - இது தமிழ் இளையோர்
அடைந்துள்ள மிகப்பெரிய நன்மையில்லையா?
Quote:உலகக் கலைகளெலாம் கற்று தமிழுக்கு வளம் கொணர்ந்து சேர்ப்போம் என்றுஅண்ணா அண்ணா. எல்லாம் இருக்குதண்ணா. இல்லையெண்டு சொல்லல. ஆனா இதுகளால ந்மையடையினமா இதுகள பயன்படுத்துகினமா எண்டுறதுதானே கேள்வியே. எந்தக் கலையை கொண்டுவந்து சேத்தியள் தமிழுக்கு? பத்து பதினஞ்சு யன்னல்கள் திறக்கிற கலையையா (10 nicknames)? இல்லாட்டி ஊடுருவுற (hacking + cracking) கலையையா?
பொருள்படும் ஆன்றோர் எண்ணத்தை செயலாக்கும் தளம் எது? கலைகளெல்லாம் விரல்
நுனியில், கலைப்படைப்புகளெல்லாம் கண்ணருகில், சிறு திரையில்.
Quote:பள்ளிக் கல்விக்குத் தேவையான தகவல்களைத் திரட்டவும், ஆய்வுகளை மேற்கொள்ளவும் விலைமதிப்பான புத்தகங்களுக்கு ஈடாக இருப்பது இணையம். நேரத்தை மிச்சப்படுத்தி, நிறைவான தகவல்களைத் திரட்டிடத் துணைபுரிகிற இணையத்தின் சேவையால் எத்தனை எத்தனை தமிழ் இளைஞர்கள் நன்மையடைகிறார்கள் என்பதை அறிவீர்களா? இன்றுஇணையத்தில ஒரு தகவல தேடுறதுக்கு சரியா ஒர சொல்லக் குடுக்கணும். அப்பதான் நெரத்தோட கண்டு பிடிக்கலாம். இல்லாட்டி மாடுதான் பிடிக்கலாம். நேரம் செலவழியுறதுதான் மிச்சம். ஒரு புத்தகத்தில இருக்கிறத போல உறுதியான நம்பத்தகுந்த மாதிரி தகவல உடன தேடி எடுக்கிறது கடினமண்ணா. ஒரு இணையத்தளத்தில ஒருவர் பிறந்த ஆண்டு 1941 எண்டு இருக்கும். இன்னொண்டில 1942 எண்டு இருக்கும். இன்னொண்டில முழுக்க முழுக்க வேற மாதிரி இருக்கும். எத நம்புவீங்க? எத உறுதிப்படுத்துவீங்க? இன்ரர்நெட்டில இருக்கிறதெல்லாம் நம்பிக்கையான தகவலெண்டு சொல்ல முடியாதண்ணா. பொய்ப்பரப்புரைய செய்யிறதுக்காண்டி நர்னும் ஒரு இணையப் பக்கத்த தொடங்கி அதில பொய்யான தகவல போட்டு வச்சா நாளைக்கு ஒரு தகவல் தேடி வாற மாணவனோ மாணவியோ என்ர பொய்யான தகவல உண்மையா நினைச்சுத்தானே தன்ர கருத்துத்தளத்த விரிச்சுக்கொள்ளுவினம்? இந்த இணையத்தில இருக்கிற தகலால சுடுகிற பழக்கம் நிறையப்பேருக்கு வந்திட்டு. சொந்தமா ஒண்ட எழுதுற பழக்கம் குறைஞ்சு போச்சு. வெட்டி ஒட்டுறதும் சுட்டுப் போடுறதும் அடுத்தவன்ரய தன்ர எண்டுறதும் ஒரு தனிப்பெருங் கலையா வளந்துபோச்சு இண்டைக்கு. ஆயகலைகள் அறுபத்துநாலோட இத அறுபத்தஞ்சாவத சேத்துக் கொள்ளுங்கோ.
எதிரணியினர் தமது வாதத்துக்கு வலுச்சேர்ப்பதற்காய் தகவல்களை எங்கு சென்று
தேடுகிறார்கள்? தோள்கொடுக்கும் தோழனை துரோகி என்கலாமா?

