02-10-2006, 01:33 AM
<i><b>5. பிற தாக்கங்கள்</b></i>
<b>பொருளாதாரவியல்</b>
இணையப்பாவனையால் ஏற்படுகிற பொருளாதார தாக்கம் பலவகையானது. முதலில் இணைய இணைப்புக்கான செலவு. வேகம் கூடக் கூட இணைப்பிற்கான கட்டணமும் அதிகரிக்கிறது. வேகமான இணைப்பை வைத்திருக்கவே பலர் விரும்புகிறார்கள். அதனால் அதற்கான பணச்செலவு அதிகரிக்கிறது.
இணைப்பு கிடைத்தபிறகு அதில் தோன்றுகிற விளம்பரங்களால் ஏற்படுகிற நட்டங்கள். சில ஆபாசத்தளங்களுக்குள் போவதுக்கான மென்பொருள் கணனியில் -தானாக- பதியப்படும். அதன்மூலம் உள்ளே போய் பார்க்க ஆசைவரும். போவார்கள். அதனால் பணச்செலவு ஏற்படும்.
இணையத்தில் வைரஸ்களின் தொல்லைகள் அதிகம். அதற்கான பாதுகாப்புகளை செய்யவேண்டியுள்ளது. அதற்கு பாதுகாப்பு மென்பொருட்கள் தேவைப்படுகிறது. பணம் செலவாகிறது. பாதுகாப்பில்லாமல் வைரஸ் தாக்கினால் கணனியைத் திருத்துவதற்கு மீண்டும் பணச்செலவு ஏற்படுகிறது. வைரஸ் தாக்குதல் மட்டுமில்லை crackers இன் தாக்குதல்களும் அதிகம் இணையத்தில் இருக்கின்றன. அவர்களிடம் மாட்டுப்பட்டால் கணனியை திருத்துவதற்கு பணச்செலவு.
spyware - adware - spams என்று பல தொந்தரவுகள். இவற்றிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு தேவையான செயலிகளின் தேவை. அவற்றுக்கான பணச்செலவு. பாதிக்கப்பட்டால் பிறகு ஏற்படுகிற பணச்செலவு.
<b>மொழியியல்</b>
மொழி பற்றி பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆங்கிலம் போன்ற மொழிகள் இணையத்தால் எப்படி பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன என்று எல்லாருக்கும் தெரியும். தமிழுக்கும் அந்த நிலைமைதான். வேகமாக அவசரமாக எழுதவேண்டும் என்பதால் ஏற்படுகிற தவறுகள் -என்னைமாதிரி- ஒருபக்கம் இருக்கு. மற்றப்பக்கம் தமிழ் ஒழுங்கா தெரியாதவையால விடப்படுற பிழைகள். வேகமான பாவனைக்காக வேண்டுமென்று தமிழை வெட்டிக்கொத்தி எழுதுற நிலைமை. தமிழை ஆங்கிலத்தில் எழுதிறதால வாற பாதிப்பு. உதாரணம ல ள ழ எல்லாத்தையும் ஆங்கிலத்தில எழுதுறதால் உச்சரிப்புகள் மறந்துபோற நிலை. இப்படி மொழியியல் ரீதியாகவும் இளைஞர்களிடம் சீரழிவு ஏற்படுது.
<b>கல்வி</b>
கல்விரீதியான பாதிப்புகள் என்ன? இணையத்தில் சுலபமாகப் பெறப்படும் தகவல்கள். ஆராயமல் அப்படியே பிரதிசெய்யும் தன்மை. சுயமான ஆக்கங்கள் எழுதுவது குறைந்துபோகிற நிலை. பெறப்படும் தகவல்களின் உண்மை பற்றிய உறுதியின்மை. இப்படி பலதையும் சொல்லலாம்.