02-10-2006, 01:32 AM
<i><b>4. சமூகவியல் தாக்கங்கள்</b></i>
சமூகவியல் தாக்கங்கள் என்பதில் மனித உறவுகளை முன்னிலைப்படுத்தலாம். இணையப் பாவனையால் மனித உறவுகளில் நடக்கின்ற மாற்றங்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. இணையப் பாவனையாளர்கள் உறவுகளிடமிருந்து தனிமைப்படுகிறார்கள். நண்பர்களை சந்திப்பதைக் குறைத்துக்கொள்கிறார்கள். தனக்கு அருகிலிருப்பவர்களிடமிருந்து விலகிப்போகிறார்கள். தூர இருக்கின்ற முகம் தெரியாதவர்களோடு virtual உறவை உருவாக்குகிறார்கள். அவர்களை ஒருநாள் சந்திக்காவிட்டால் கவலைப்படுகிறார்கள். இணையத்திலும் நிரந்தரமான உறவுகள் என்று அவர்களுக்கு இருப்பதில்லை. இன்று நண்பர்களாக இருப்பவர்கள் நாளை இல்லாமல் போவார்கள். காணாமல் போவார்கள். புதியவர் வருவார். அவரோடு பழக்கம் ஏற்படும். அவரும் சிறிது காலத்தால் காணாமல் போவார்.