02-10-2006, 01:31 AM
<i><b>3. ஒழுக்கவியல் தாக்கங்கள்</b></i>
<b>ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கும்
இழிந்த பிறப்பாய் விடும்
(பொருள்: நல் ஒழுக்கம் உடைமையே வாழ்க்கை இயல்பு ஆகும். தீய ஒழுக்கம் கொண்டிருந்தால் இழிந்த பிறப்பாகிவிடும்)</b>
மேற்கூறிய உடலியல் உளவியல் தாக்கங்களின் விளைவுகளிலிருந்து ஒழுக்கவியல் தாக்கத்தை பதிலாகப் பெறலாம். முன்னைய தலைப்புகளில் குறிப்பிட்டது போல உணவுப் பழக்கம் தொட்டு பாலியல் ஒழுக்கம் வரையாக இந்த சீரழிவு தொடர்கிறது. உணவுப்பழக்கம் பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஆதலால் பாலியல் ஒழுக்கம் சார்ந்த சீரழிவுகளைக் கவனிக்கலாம். இணையத்தின் சீரழிவுகளில் மிகமுக்கியமான ஒன்றாக கருதப்படுகிற சீரழிவு இதுதான். பாலியல் தொழில் விரிவடைவதற்கும் பாலியல் வக்கிரங்கள் இளையோர் மனதில் விதைக்கப்படுவதற்கும் இணையம் காரணமாக உள்ளது என்றால் மிகையாகாது.
<b>ஆபாசவார்த்தைகள்</b>
அரட்டை அறைகளும் தமிழ்ச் சினிமாத் தளங்களும் கருத்துத் தளங்களும் இவற்றை வளர்த்துவிடுவதில் பங்காற்றுகின்றன. யாகூ எம்எஸ்என் போன்ற அரட்டைக் களங்களும் தமிழ் இளையோரால் இயக்கப்படுகிற அரட்டை அறைகளும் ஆபாச வார்த்தைகளை பரவலாக பேசிக்கொள்வதற்கான ஒரு இடமாகத்தான் இன்றுவரை இருக்கின்றன. இங்கே பயனுள்ள ஒரு விடயம் நடந்திருக்கிறதா என்றால் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஒன்றையும் அறியமுடியவில்லை. பல வயதையுடையவர்களும் வந்து போகிற ஒரு அரட்டை அறைக்குள் ஆபாச வார்த்தைகள் எழுதப்படுகிறபோதோ பேசப்படுகிறபோதோ இதுவரை அவற்றை அறியாதவர்கள் அறிந்துகொள்ள சந்தர்ப்பம் அமைத்துக்கொடுக்கப்படுகிறது. முகமூடி அணிந்து செல்பவர்கள் எந்தப் பயமும் கவலையும் இல்லாம் இப்படியான ஆபாச வார்த்தைகளை தாமும் சொல்லிப் பார்க்கிறார்கள். அதன் வக்கிரத் தன்மை வெளிஉலகில் தனது சகோதரர்களிடமும் நண்பர்களிடமும் பயன்படுத்துகிற நிலைக்கு அவர்களை இட்டுச் செல்கிறது.
<b>அநாமதேயர்கள்</b>
நமது பொதுவான வாழ்க்கைச் சூழலில் ஒருவர் மீது இருக்கும் தனிப்பட்ட கோபத்தைக் காட்டுவதற்கு அவரை கண்டவாறு திட்டுவது வழக்கமாக இருக்கிறது. திட்டும்போது ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் குடும்ப உறுப்பினர்களை இழுத்து அவர்களைக் கேவலமாகப் பேசுவதும் நடக்கிறது. ஆனாலும் இது சமூகத்தில் தமது சமூகநிலை கருதியும் ஒழுக்கம் கருதியும் பலரால் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளப்படுகிறது. ஆனால் இணையத்தை பொறுத்த மட்டில் இந்நிலை மாறுகிறது. இணையத்தில அநாமதேயர்களின் எண்ணிக்கை அதிகம். முகமூடிகளின் நடமாட்டம் அதிகம். தமக்கென்றொரு சமூகநிலையை அவர்கள் அங்கு வைத்திருக்கவேண்டிய அவசியம் இல்லை. சமூகத்துக்கு பயந்து தம்மைக் கட்டுப்படுத்தவேண்டியது கிடையாது. இது ஒரு வாய்ப்பாகிப் போகிறது. இதன் விளைவைத்தான் இன்று நாம் பல கட்டுப்பாடற்ற கருத்துக்களங்களிலும் வலைப்பதிவுகள் போன்றவற்றிலும் அரட்டை அறைகளிலும் காணமுடிகிறது.
<b>பாலியல் பக்கங்கள்</b>
தமிழில் இதுவரை பாலியல் தளங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. அதிலும் தமிழில் உள்ள பாலியல் தளங்களை ஐந்து விரல்களுக்குள் அடக்கலாம். ஆனாலும் இளைஞர்களிடம் பாலியல் ரீதியான ஒழுக்கவியல் தாக்கங்கள் நிகழ்கின்றன. இதற்கு காரணம் நாளுக்கு நாள் இணைய உலகத்தில் தோன்றுகிற ஏனையமொழி பாலியல் தளங்கள். இந்தத் தளங்களில் இலவசமான தளங்களும் உள்ளன. மிகக்குறுகிய கட்டணந் தொடங்கி மிகக்கூடிய கட்டணம் கொடுத்து பார்வையிடுகிற தளங்களும் இருக்கின்றன. இவற்றுக்கான அனுமதிகள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று இருந்தாலும் அவற்றைக் கண்காணிப்பதற்கான வசதிகள் குறைவு. ஆபாச இணையப்பக்கங்களால் என்ன பாதிப்பு என்று நீங்கள் எண்ணலாம். இளைஞர்களின் மனசை பாலியல் வக்கிரம் நிறைந்ததாக மாற்றுகிற தன்மை இவற்றுக்கு உண்டு. மனசை இலகுவில் இவற்றுக்கு அடிமையாக்கிவிடக்கூடிய தன்மை இளைஞர்களுக்கும் உண்டு. சிறுவர்களின் நிர்வாணப்படங்களையும் ஆடுமாடுகள் என்று மிருகங்களுடனான பாலியல் உறவினையும் படம்பிடித்து பரப்புகிற ஒரு ஊடகமாக இணையம் பயன்படுகிறது. இவற்றுக்கு தடைகள் தண்டனைகள் இருக்கிறபோதும் முழுமையாகக் கட்டுப்படுத்தும் அளவு தொழில்நுட்ப சாத்தியங்கள் குறைவு. புகலிட தமிழ் இளைஞர்களின் கணனிகளை ஒருமுறை சோதனை செய்து பார்த்தோமென்றால் 90 வீதமானோர்க்கும் மேற்பட்டோரின் கணனிகளில் ஆபாசத் தளங்களுக்கு சென்றமைக்கான சுவடுகள் இருக்கும். இவர்களுள் 18 வயதுக்கும் குறைந்தவர்களும் அதிகமாக இருப்பார்கள்.
<b>இணையக் காதல்</b>
புகலிட சூழலில் எதிர்கொள்ள நேர்கிற முக்கியமான பிரச்சனைகளில் இணையக் காதலினால் ஏற்படுகிற ஒழுக்கவியல் தாக்கமும் ஒன்று. பொதுவாகவே இளம்பருவம் காதல் அனுபவங்களை அதிகமாகக் கொண்டிருக்கும். எதிர்ப்பாலார் மேல் -அதிகம்- கவர்ச்சி உருவாகிற இளம்பருவம். பாலியல் ரீதியான உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற வயது. எதிலும் அவசரமாக முடிவுகளை மேற்கொள்கிற துடிப்பு. எதையும் செய்துபார்க்க துணிகிற மனசு. இப்படியான குணங்களைக் -அதிகம்- கொண்டவர்கள் தான் பெரும்பாலான இளைஞர்கள். இது பலவீனமா பலமா என்பது அதனால் ஏற்படுகிற விளைவுகளை வைத்தே தீர்மானிக்க முடியும்.
இப்படியானவர்களுக்கு இணையம் பல வாய்ப்புகளை அளிக்கிறது. பொதுவில் பெண்களுக்கு தமிழர் சமூகத்தில் பல கட்டுப்பாடுகள் தடைகள் உள்ளன. ஆண்களுக்கும் தான். ஒப்பீட்டளவில் பெண்களுக்கானது அதிகம் என்றே கருதமுடியும். அந்தக் கட்டுப்பாடுகளுக்கான காரணங்களும் சமூகத்தில் தான் இருக்கின்றன. இப்படி கட்டுப்பாடுகளுக்குள் வளர்பவர்களுக்கு இணையம் சொர்க்கம். இணையத்தில் அவர்களுக்கான சுதந்திரம் கிடைக்கிறது.
பெற்றோரைப் பொறுத்தமட்டில் பிள்ளைகள் வெளியில் போகவில்லை. நண்பர்களுடன் ஊர் சுத்தவில்லை. நேரம் பிந்தி வீட்டுக்கு வருவதில்லை. வெளியில் வம்புகளை வளர்த்துக்கொள்வதில்லை. பிரச்சனையில்லாமல் அமைதியாக வீட்டில் இருக்கிறார்கள். தாமுண்டு தம்பாடுண்டு என்று இருக்கிறார்கள். காதல் என்று வெளியில் இரகசியமாகத் திரியவில்லை.
ஆனால் பிள்ளைகளைப் பொறுத்தவரை வெளியுலகத்துக்கு ஈடாக -சிலவேளைகளில் அதற்கும் மேலாக- ஒரு cyber or virtual உலகம் அவர்களின் வீட்டுக்குள் அறைக்குள் இருக்கிறது. தம்மைப்போல பல மனிதர்களை சந்திக்க முடிகிறது. ஆண்கள் பெண்கள் என்ற பேதமின்றி பலரோடும் பழகமுடிகிறது. அரட்டை அறைகள் அதற்கு வழிசெய்கின்றன. messenger களும் துணை செய்கின்றன. தமது உணர்வுகளை கொட்டமுடிகிறது.
இதன் விளைவு எல்லோரையும் நம்புகிறார்கள். அன்பாகப் பழகிறார்கள். அவர்களும் ஆதரவாகக் கதைக்கிறார்கள். நட்பாக இருக்கிறார்கள். நட்போடு பழகிறவர்கள் எல்லோரும் நம்பிக்கையானவர்களாக உண்மையானவர்களாக இருப்பதில்லை. நிழற்படங்களை பகிர்ந்துகொள்ளக் கேட்கப்படுவார்கள் இவர்கள். நம்பிக்கையில் நிழற்படம் அனுப்பி வைக்கப்படும். இந்த நிழற்படத்தினை வைத்துக்கொண்டு பலவிதமான சட்டமீறல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
o பெண்களின் நிழற்படங்களில் முகங்களை வெட்டி ஆபாசமாகவும் நிர்வாணமாகவும் இருக்கிற பெண்களின் படங்களோடு பொருத்தி இணையத்தில் பிரசுரிப்பது.
o அப்படிப் பொருத்தப்பட்ட படத்தைக் காட்டி மிரட்டுவது. இதன் விளைவு பெண்கள் மனரீதியாக பாதிக்கப்படுகிறார்கள்.
o இணையத்தின் மூலம் பெறப்பட்ட பெண்களின் படங்கள் நண்பர்களிடையே பகிர்ந்துகொள்ளப்படுகின்றன.
மேற்சொன்னது ஒரு விளைவின் தொடர்ச்சி. அடுத்த விளைவைப் பார்க்கலாம். பெண் நிழற்படம் அனுப்பியதிலிருந்து அவளின் அழகால் எதிர்த்தரப்பு கவரப்படுகிறது. தனது படத்தையும் ஆண் அனுப்புகிறான். -அது உண்மையான படமாகவும் இருக்கலாம் அழகுபடுத்தப்பட்ட படமாகவும் இருக்கலாம். அல்லது வேறு ஒருவரின் படமாகவும் இருக்கலாம். எதிர்த்தரப்பில் இருப்பவர் இளைஞராகவும் இருக்கலாம். முதியவராகவும் இருக்கலாம்- இனி அடுத்த கட்டம். நட்பு காதலாக மலர்கிறது. ஆசைவார்த்தைகள் பகிரப்படுகின்றன. அன்பு வார்த்தைகள் பகிரப்படுகின்றன. அது மெல்ல வளர்கிறது. காமம் கலந்து பேசுவார்கள். எழுத்தில் எழுதிப் பகிரப்பட்டவைகள் எல்லாம் voice chat மூலமாக குரலில் பகிரப்படும். webcam மூலமாக video chat வரை அது வளரும். இரவிரவாக அறைக்குள்ளிருந்தபடியே காதலும் வளரும். பின்பு தொலைபேசி இலக்கம் பகிரப்படும். தொலைபேசியிலும் காதல் வளரும். கடைசியில் நேரில் சந்திக்க உந்தப்படுவார்கள். -ஒரே நாடாக இருந்தால் அது வேகமாக நடக்கும். வேறு வேறு நாடாக இருந்தால் அதுவும் நடக்கும். நடந்திருக்கிறது- ஒரு நாள் குறிப்பார்கள். எங்கோ ஒரு இடத்தில் சந்திப்பார்கள். சந்தர்ப்பம் சரியாக அமைந்தால் முதல் சந்தர்ப்பத்திலே பாலியல் உறவுக்கு தம்மை அர்ப்பணிப்பார்கள். இல்லாவிட்டால் அடுத்தடுத்து வருகிற சந்திப்புகளில் அது நடக்கும். அதன்பின்பு அவன் விலகிச் செல்வான். அவனது முகவரி இவளுக்கு தெரியாமல் இருக்கலாம். தெரிந்திருந்தாலும் ஒன்றும் செய்யமுடியாமல் இருக்கலாம். பாதுகாப்பாக உடலுறவு கொண்டிருப்பார்கள். இல்லாவிட்டால் கர்ப்பமடைந்திருப்பாள். வீட்டுக்குத் தெரியவரும். தெரியாமலும் இருக்கலாம். கர்ப்பம் கலைக்கப்படும். சிலகாலம் மனமுடைந்தவளாக இருப்பாள். சிலவேளைகளில் தொடர்ந்தும் அப்படியே இருப்பாள். அவளுடைய வாழ்க்கை இப்படியாக சீரழியும். அவன் அடுத்த பெண்ணிடம் அரட்டையடிக்கத் தயாராகிவிடுவான்.
மேற்சொன்னது அவன் ஒரு இளைஞனாக இருந்தால் நடந்திருக்கக்கூடியது -நடந்தது-. அடுத்து எதிர்த்தரப்பு ஒரு குடும்பத் தலைவராக இருக்கலாம். அல்லது 40-50 வயதை கொண்டிருக்கலாம். இருவரும் சந்திப்பார்கள். பெண் தான் ஏமாந்து போனதை உணர்வாள். காலம் தாமதம். பெண் பாலியல் வல்லுறவுக்கு உட்படுவாள். வெளியில் சொல்ல முடியாது. சொன்னால் குடும்பத்தின் மானம் போகும். தனக்குள் அழுவாள். கர்ப்பம் கலைப்பாள். சிலவேளை தற்கொலை முயற்சியும் நடைபெறலாம். தப்பித் தவறி வீட்டுக்கும் தெரிய வரலாம். தெரியவந்தால் பெற்றவர்கள் கவலைப்படுவார்கள். குடும்பமே தற்கொலை வரைகூடப் போகலாம். எதிர்த்தரப்பு முகவரியில்லாமல் தப்பிவிடலாம். தொலைபேசி இலக்கத்தை மாற்றிவிடலாம். புதிய பெண்ணைத் தேடலாம். அல்லது பெண் காவல்துறைக்கு அறிவித்திருக்கலாம். உரியவர் பிடிபட்டிருக்கலாம். தண்டிக்கப்படலாம். அவரது குடும்பமும் அதனால் பாதிக்கப்படலாம்.
மேற்சொன்னவை பெண்ணின்தரப்பு. அதைப்போல் ஆண்களும் ஏமாற்றப்படலாம். பாலியல்ரீதியான பாதிப்புகள் அவர்களுக்கு ஏற்படப் போவதில்லை. ஒரு ஆணே பெண்ணாக நடிக்கலாம். ஒரு பெண்ணின் படத்தை அனுப்பி காதலிப்பதாக ஏமாற்றலாம். இவன் ஏமாரலாம். உண்மையாகக் காதலிக்கலாம். கடைசியில் ஒருநாள் அவன் ஆண் என்பது தெரிய வரலாம். தெரியவரும்போது தான் ஏமாற்றப்பட்டது புரியும். தனது ஏமாற்றத்தால் தற்கொலை முயற்சி வரை செல்லலாம். அல்லது மனரீதியான பாதிப்புக்கு உள்ளாகலாம். எதிர்த்தரப்பு ஆணென்று தெரியாமலும் போகலாம். எதிர்த்தரப்பு திடீரென்று காணாமலும் போகலாம். இதனாலும் இவன் பாதிக்கப்படலாம். -லாம்- என்று சொன்னவையெல்லாம் நடந்தவைதான்.
இன்னொன்று. அரட்டை அறைகளில் கைத்தொலைபேசி இலக்கங்கள் பரிமாறப்படலாம். இணையத்துக்கு வராத பெண்களின் இலக்கங்களும் பரிமாறப்படலாம். இலக்கங்கள் கிடைத்தவர்கள் பெண்ணோடு தொடர்பு கொள்வார்கள். சிலர் ஆபாசமாகக் கதைப்பார்கள். தொலைபேசியில் தொந்தரவு செய்வார்கள். பெண்கள் கைத்தொலைபேசி இலக்கத்தை மாற்றுவார்கள். மாற்றாமலும் விடலாம். சிலர் நட்பாகப் பேசுவார்கள். பின்பு நேரில் தனியே எங்காவது சந்தித்துக்கொள்வார்கள். அல்லது பொது நிகழ்வுகளில் சந்தித்துக்கொள்வார்கள். அதுவும் காதலென்று வளரும். காமம் வரை வளரும். கர்ப்பமாகும். கருக்கலைப்பு. தற்கொலை. வீட்டுக்கு தெரியும். அவன் தொலைபேசி இலக்கம் மாற்றுவான். இவளுக்கு மனரீதியான பாதிப்பு. அவன் அடுத்த இலக்கம் தேடுவான்.
<b>பாலியல் தொந்தரவு</b>
பாலியல் ரீதியாக ஒருவரை தொந்தரவு செய்வதும் அதிகரித்துள்ளன. அரட்டை அறைகளில் நடக்கின்ற கருத்தாடல்கள். அதில் ஏற்படுகிற தனிப்பட்ட கோபங்கள். அதனால் கணனி ஊடுருவப்படும். கணனியிலிருந்து படங்கள் களவாடப்படும். அந்தப்படங்கள் முதலில் சொன்னதுபோல் நிர்வாண உடல்களில் பொருத்தப்படும். உடலுறவுக் காட்சிகளில் பொருத்தப்படும். இணையப்பக்கங்களில் பிரசுரிக்கப்படும். அதைவைத்து உரியவர் மிரட்டப்படுவார். உரியவர் ஆணாக இருந்தால் பாதிப்பு குறைவாக இருக்கும். பெண்ணாக இருந்தால் அதிகமாக இருக்கும். அதிலும் திருமணமான பெண்ணாக இருந்தால் கணவனுக்கு தெரியவந்து பெரும் பிரச்சனை ஆகும்.
மேற்சொன்னவையெல்லாம் நடந்த உண்மைகளிலிருந்து சொல்லப்பட்டவை. கல்யாணம் வரை சென்ற இணையக்காதல் ஒரு சில. கட்டிலோடு முடிந்த இணையக்காதல் கதைகள் பல.