02-10-2006, 01:26 AM
<i><b>2. உளவியல் தாக்கங்கள்</b></i>
உளவியல் தாக்கங்களை இணையம் எப்படி உருவாக்கிறது என்பது சுவாரசியமான அதேநேரம் கவலைக்குரிய உண்மையாகும். (ஒரு உளவியல் பற்றிப் பயிலும் மாணவியாக எனது அனுபவங்களை பகிர்ந்துகொள்கிறேன்). இணையம் எப்படி இயங்குகிறது அதன் சேவைகள் அதன் பல பரிமாணங்கள் என்பன பற்றி ஏற்கனவே பலரும் குறிப்பிட்டு விட்டார்கள். இந்த பல் பரிமாணத் தன்மையின் சிறப்பம்சம் எல்லாத்தரப்பினரையும் அவர்களின் ஆர்வத்துக்கேற்ப கவர்ந்திழுக்கக்கூடிய குணாம்சங்களைக் கொண்டிருப்பதுதான். இது வெளிப்பார்வையில் நன்மையாகத் தோன்றினாலும் ஆழமாகப் பார்த்தோமென்றால் இலகுவாக ஒருவரை அவரின் பலவீனத்தை வைத்தே அடிமையாக்கும் நிலை இங்கு காணப்படுவது புலப்படும். சாதாரணமாகவே போதைப்பொருள் பாவனையாளர்களை இரு வகையாக நாங்கள் பிரிக்கலாம். ஒன்று போதைப்பொருளை பயன்படுத்துவோர் மற்றையது போதைப்பொருளால் பயன்படுத்தப்படுவோர் (ஆக்கிரமிக்கப்பட்டோர்). முதல் வகையினர் உளவியல் ரீதியான தாக்கங்களுக்கு உள்ளாவதில்லை (அல்லது குறைவு). இரண்டாவது வகையினர் பெரிதுமாக உளவியல் தாக்கத்துக்கு ஆட்பட்டவர்களாக ஒன்றில் மிக மென்மையானவர்களாக அல்லது மிக வக்கிரமானவர்களாக மாற்றம் பெறுவார்கள்.
நேரடியாக இணையத்தை போதைப்பொருளோடு உப்பிட முடியாத போதும் பாவனையாளர்களை அதே இருவகையினராக நாங்கள் பிரித்து அணுகமுடியும். அடிமைப்பட்டவர்களாகவும் தம்மைச் சுற்றி நடப்பதை மறந்தவர்களாகவும் தனிமையாக தனி ஒரு உலகத்தில் இருப்பவர்களாகவும் இவர்கள் உளநிலையில் மாற்றங்கள் ஏற்படும். சிலநேரங்களில் இணையத்தில் எதுவுமே செய்யாமல் அதை வெறித்துப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள். எதற்காக தாம் இணையத்தில் இருக்கிறோம் என்கிற நோக்கமே அவர்களிடம் இருக்காது. அப்படியான மனநிலைக்குத் தள்ளப்பட்டவர்களாக இருப்பார்கள். (இப்படியான சிலர் உளவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டார்கள்). குறிப்பாக அரட்டை அறைகளில் பல இளையோர் அடிமையாகிப்போய் எதுவுமே செய்யாதவர்களாக மந்தநிலையில் இருப்பார்கள். தமிழர்கள் இப்படிப் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா என்கிற கேள்வி எழலாம். தமிழர்களில் சிலர் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். பலரது வீட்டில் என்ன நடக்கிறது என்பதே பெற்றோருக்குத் தெரியாது. சிலருக்கு ஏன் தமது பிள்ளைகள் இப்படியிருக்கிறார்கள் என்கிற காரணம் தெரியாது. சிலருக்கு தன் பிள்ளைக்கு மனநிலை குழம்பியிருக்கிறது என்று சிகிச்சைக்கு போவதால் கெளரவப் பிரச்சனை.
இது ஒரு பிரச்சனையாக இருந்தால் அடுத்து இணையத்தின் மூலம் வக்கிரத் தன்மைகள் இளையோர் மத்தியில் ஏற்படுவது இன்னொரு பிரச்சனையாக இருக்கிறது. பாலியல் வக்கிர எண்ணங்கள் ஏற்படுவதற்கும் அதை நிஜ வாழ்க்கையில் செய்துபார்க்கவேண்டும் என்ற எண்ணங்கள் ஏற்படுவதற்கும் இணையம் துணைபோகிறது. சிறுவர்கள் மீதான பாலியல் வன்முறை என்பது அவற்றில் ஒன்றாகக் குறிப்பிடத்தக்கது. இணையம் மட்டும் தான் அதற்கு காரணம் என்று சொல்ல வரவில்லை. இணையமும் ஒரு காரணமாக அமைகிறது என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன். மீண்டும் தமிழ் இளையோரிடம் இப்படியான சீரழிவுகள் நிகழ்கின்றனவா என்ற கேள்வி எழலாம். அங்கங்கே சில சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நாளை இவை பெருகக்கூடாது என்பதும் இப்பொழுதே இந்தப் பிரச்சனைகளை கதைத்து தீர்வு காணவேண்டும் என்பதுமே எமது எண்ணம்.
அடுத்ததாக இணையத்தில் முகவரியில்லாத (முகமூடி) நபர்களால் ஏற்படுத்தப்படுகிற உளவியல் தாக்கம் மிகக் கொடுமையானது. நண்பர்களாகவும் காதலர்களாகவும் பழகி ஏமாற்றப்பட்டு உளவியல் தாக்கத்துக்குள் உள்ளாக்கப்பட்டவர்கள் பலருண்டு. அதைவிட அரட்டை அறைகளாலும் மடலாடற் குழுமங்களாலும் கருத்துத்தளங்களாலும் மனக்கசப்புகள் உருவாகுவதும் பகையுணர்வு உருவாகுவதும் தவிர்க்கமுடியாத ஒன்றாக உள்ளது. முகமூடி அணிந்தவர்களாக பலர் இருப்பதால் மற்றவர்கள் பற்றிய கவலைகள் அவர்களுக்கில்லை. இதனால் வன்மையாக தாக்கப்படும்போதோ சிறுசிறு விடயங்களில் இணையத்தில் ஏமாற்றங்களை அடையும்போதோ மென்மையான மனதையுடையவர்கள் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இவர்கள் தற்கொலை முயற்சிகளுக்கும் தன்னிலை மறந்து தனியே புலம்புகிற மனநிலைப் பாதிப்புக்கும் ஆளாகிறார்கள் என்பதையும் வருத்தத்தோடு தெரிவிக்க விரும்புகிறேன்.