02-10-2006, 01:25 AM
<i><b>1. உடலியல் தாக்கங்கள்</b></i>
உடலியல் தாக்கங்களாக ஐம்புலன்களிலும் நிகழ்த்தப்படக்கூடிய தாக்கங்களை முதன்மையாகக் கொள்ளலாம். இந்தத் தாக்கங்களில் இருந்து இணையப் பாவனையாளர்கள் (கணனி) பாதுகாப்பதற்கான வழிமுறைகள் ஆய்வாளர்களால் அடிக்கடி நினைவுபடுத்தப்படுகின்ற போதும் அதனை பின்பற்றுகிற பாவனையாளர்கள் எத்தனை பேர் என்பது இன்னொரு ஆய்வுக்குரிய கேள்வியாகும். கணனிப் பாவனையாளர்களில் பெரும்பாலானவர்கள் இன்று குழாய்த்திரையைத் (?) (tube monitor) தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள். tube monitor இல் காண்பிக்கப்படுகிற காட்சி "வரி வரியாக"த்தான் (line to line) காட்சிப்படுத்தப்படுகிறது. அப்படிக் காட்சிப்படுத்தப்படுகிறபோது ஒருவகை மின்னும் தன்மை (flicker effect) உருவாகிறது. இதனால் பாவனையாளர்களின் கண்கள் சோர்வைடைகின்றன. திரையை உற்று நோக்கவேண்டிய தேவை ஏற்படுவதால் கண்களின் மேல் அதிக உழைப்பை சுமத்தவேண்டியுள்ளது. அதன் தொடர்விளைவாக தலையிடி போன்ற வலிகள் ஏற்படுவதோடு கண்பார்வையும் குன்றிப்போகிறது. tube monitor க்கு மாற்றீடான வழி flat screen. ஆனால் அதிகமானவர்கள் விலையைப் பார்த்து உடலைக் கெடுப்பதில் குறியாய் இருக்கிறார்கள்.
அடுத்து இணையம் பயன்படுத்துவோர் பலதளங்களுக்கும் போவார்கள். காட்சிகள் அடிக்கடி மாறும் சூழல் அங்கு உருவாகிறது. இணையப்பக்கங்களை செய்பவர்களில் அதிகமானவர்கள் உடலியல் பாதிப்புகளை கருத்தில் எடுக்காமல் தமக்கு அழகாகக் படுவதை செய்கிறார்கள். இதனால் சிறிய எழுத்துக்களை உற்றுப் பார்க்கவேண்டியதாக உள்ளது. கடும் வெளிச்ச நிறங்கள் கண்களைக் குத்துகின்றன. இவையெல்லாம் சீரான பார்வையை சிதைக்கின்ற காரணிகளாக அமைவது குறிப்பிடத்தக்கதாகும். புலம்பெயர்ந்து வாழ்கிற இளைஞர்களில் இணையப்பாவனையாளர்களாக உள்ள எத்தனை இளையோர் மூக்குக்கண்ணாடி அணிகிறார்கள் என்று கணக்கெடுத்தால் 60 விழுக்காடுகளை அது தாண்டும் என்பது உறுதியாகச் சொல்லமுடியும்.
அடுத்ததாக முக்கிய சீரழிவாக இணையப் பாவனைக்கான இணைப்பினால் ஏற்படுகிற உடலியல் பாதிப்புகளையும் இங்கே குறிப்பிடலாம். இன்றைய காலகட்டத்தில் இணைய இணைப்புக்கு பலவிதமான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கனவாக அதிகம் பேரால் பயன்படுத்தப்படுகின்றனவாக மூன்றைக் குறிப்பிடலாம்:
ஒன்று: local area network/wide area network
இரண்டு: wireless local area network
மூன்று: bluetooth (ஒரு குறிப்பிட்ட குறுகிய எல்லைக்குள் ஒலியையும் ஏனைய தரவுகளையும் பரிமாறிக்கொள்வதற்கான இணைப்பு)
இவற்றினால் என்ன பாதிப்பு? கடைசி இரண்டும் அலைவரிசையை அடிப்படையாகக் கொண்ட இணைப்பு முறை. வயர் இல்லாத இணைப்புமுறை. இந்த இணைப்பின் போது சராசரியாக 0.1watt சக்தி வெளிப்படுகிறது. இது கைத்தொலைபேசி வெளிப்படுத்துவதில் 5 இல் 1 பங்குதான்.
WLAN மூலமாகவும் BLUETOOTH மூலமாகவும் வெளிப்படுத்தப்படுகிற கதிர்கள் உடல்நலத்துக்கு கேடுவிளைவிக்கின்றன. இவையும் ஏனைய கதிரலை இணைப்புகள் போல அவதானத்துடனும் பாதுகாப்புடனும் அணுகவேண்டியவையாக உள்ளன. காரணம்: இந்தக் கதிர்வீச்சு வெளிப்பாட்டின்போது தனியே தரவுகள் மட்டும் கடத்தப்படுவதில்லை. மாறாக சமநேரத்தில் மானுட உடலுக்குள் வெப்பசக்தியாக மாற்றம் அடையக்கூடிய சக்தியும் சேர்த்துக் கடத்தப்படுகிறது. தனியே ஒரே ஒரு கம்பியில்லாது இணைக்கப்பட்ட கணனியால் (இணையம்) உருவாகிற இந்த வெப்பம் குறைவானதே. அதாவது மானுட உடலில் பாதிப்புகளை செலுத்துவது மிக மிகக் குறைவானது. ஆனால் ஒரே நேரத்தில் பல (கம்பியில்லா) இணைப்புகளை பயன்படுத்தும்போது (உதாரணம்: கைத்தொலைபேசி அல்லது வேறு ஒரு வயரில்லா இணைப்பு) வெளிப்படுத்தப்படுகிற கதிர்வீச்சினால் உருவாகிற வெப்பம் அதிகமாகும் (எல்லாம் ஒன்றுசேருவதால்). சில கதிர்வீச்சு பாதுகாப்பு மையங்களால் கணிப்பிடப்பட்டுள்ளபடி உடல்வெப்பம் 0.3 இலிருந்து 0.5 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கலாம் (உதாரணம்: ஒருவர் இயக்கத்தில் உள்ள இரண்டு கைத்தொலைபேசிகளை உடல்ரீதியான தொடர்பை வைத்துக்கொண்டு இணையத்தையும் பயன்படுத்தும்போது இந்த நிலையை அடைய முடியும்). இதனை மீறும்போது ஏற்படுகிற பாதிப்பு உடல்நலத்தில கேட்டினை விளைவிக்கிறது. புகலிடத் தமிழ் இளையோர் வயரில்லா இணையசேவையை அதிகம் பயன்படுத்தத் தொடங்கியுள்ளார்கள். ஒரே நேரத்தில் கைத்தொலைபேசியையும் பிற வயரில்லா இணைப்புகளையும் பயன்படுத்துகிறார்கள். இவை அனைத்தும் வீட்டின் ஒரு குறிப்பிட்ட குறுகிய இடத்துக்குள் தான் நிகழ்கின்றன. இதனால் உடல்வெப்பம் அதிகரிக்கிற சூழல் உருவாகிறது என்பதை கவலையுடன் குறிப்பிடவேண்டியுள்ளது. இவற்றுக்கும் மாற்றுவழிகள் உண்டு. ஆனால் இவற்றை கவனத்தில் எடுப்பவர்கள் மிகக் குறைவு. அதற்கான பொது அறிவு குறைவாகவே அதிகமானோரிடம் உள்ளது.
இணையத்தில் (+கணினியில்) ஆர்வமாக இருப்பவர்கள் உணவு உட்கொள்ளுவதில் கவனம் செலுத்துவது குறைவாகிறது. அல்லது உணவு உட்கொள்ளுவதில் சீரான தன்மை இருப்பதில்லை. நேர ஒழுங்கு கடைப்பிடிக்கப்படுவதில்லை. சிலவேளைகளில் உணவு உட்கொள்வதையே மறந்தநிலையில் பலர் இருக்கிறார்கள். இதற்கான காரணங்களில் ஒன்றாக அரட்டை(?)(chat) அறைகளைக் குறிப்பிடலாம். உணவு உட்கொள்வதில் தாமதம், அப்படி உட்கொண்டாலும் செமிபாடு அடைவதற்கான உடல் அசைவுகள் மிகக் குறைவு. இந்த சீரற்ற உணவுப்பழக்கத்தால் உடல்நிலையில் பாதிப்புகள் பல ஏற்படுகின்றன. உடல் மெலிவு, நரம்புத்தளர்ச்சி, சோர்வு, மயக்கம் போன்ற உடன்விளைவுகளுக்கும் வேறு பல தாமதமான விளைவுகளுக்கும் ஆளாகின்றார்கள்.
இவைதவிர கணனியின் பாதிப்புகளான நீண்டநேரம் நாற்காலியில் அமர்வதால் ஏற்படுகிற முதுகுவலி, கழுத்துநோவு போன்றவையும் குறிப்பிடத்தக்கன.