Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பங்குனி எட்டு வருகிறதாம்
#1
பங்குனி 8.

பங்குனி எட்டு வருகிறதாம்
பாரில் பெண்கள் எழுகினமாம்.
வருசம் ஒருநாள் கொண்டாட்டம்
வாய்க்கு நல்ல சொல்லுணவு.
இன்னும் பெண்கள் விடியவில்லை
இனியும் து}க்கம் ஏன் தோழி ?


வானலையெங்கும் விழாக்கோலம்
வார்த்தைகள் உன்னை அழைக்கிறது.
ஏனடி பெண்ணே உன்னுறக்கம்
இன்னும் கலையாக் கண்ணுறக்கம்.
எழுந்திடு எழுந்திடு பெண்ணுலகே
உனக்காயொரு நாள் வருடத்தில்
உண்டு என்பதை மறந்தாயோ ?


பங்குனி எட்டின் வரவையெங்கள்
பார்வைகள் எல்லாம் பார்க்கிறது.
இங்கினி ஊர்வலம் , ஆர்ப்பாட்டம் ,
இதர இலக்கிய போராட்டம்.
பங்குனி எட்டில் படைத்திடணும்
பாரில் எம்மை உணர்த்திடணும்.


கொள்கை , லட்சியம் , கொடிபிடித்தல்
எல்லாம் அன்று உரைத்திடணும்.
பங்குனி ஒன்பது விடியும் முன்னம்
புரட்சிகளெல்லாம் முடித்திடணும்.
இனியொரு பங்குனி விடியுமட்டும்
பழையதையெல்லாம் அடுக்கி வைத்து
பணிகள் யாவும் முடித்திடுவோம்.

27.01.04
Reply


Messages In This Thread
பங்குனி எட்டு வருகிறத - by shanthy - 01-29-2004, 10:48 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)