02-09-2006, 06:56 AM
starvijay Wrote:<b>குடிசை</b>
என் வீட்டு அலாரம் என்னை எழுப்பியது....ஆம் சூரியன்தான்
என் வீட்டு ஷவரில் தண்ணீர் வந்துகொண்டிருந்தது....ஆம் மழைதான்
என் வீட்டு காத்தாடியில் வந்தது தென்றல்....ஆம் காற்றுதான்
இயற்கை என்வீட்டை சூழ்ந்து கொண்டதாலோ என்னவோ
ஒன்று மட்டும் தான் இப்போதைக்கு இல்லை....ஆம் உணவேதான்.
ஒட்டை கூரை கொண்ட வீட்டைத்தானே சொல்கிறீர்கள்? உங்கள் கற்பனை வளம் நன்றாக இருக்கின்றது.. வாழ்த்துக்கள். தொடர்ந்து எழுதுங்கள்.

