02-09-2006, 05:16 AM
<b>ஜெனீவாப் பேச்சு மேசைக்கு வெலிக்கந்தை விவகாரத்தை கொண்டுவர போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு முடிவு</b>
தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான விடயத்தை ஜெனீவாப் பேச்சு வார்த்தை மேசைக்கு கொண்டுவரவுள்ளதாக போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹொக்றூப் ஹொக்லண்ட் மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானுவிடம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுத் தலைவர் ஹொக்றூப் ஹொக்லண்ட் நேற்றுப் பிற்பகல் 3.00 மணியளவில் மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானு, அவர்களை கரடியனாறு தேனகத்தில் சந்தித்தக் கலந்துரையாடினார்.
இச்ந்திப்பில் மாவட்டத் தளபதி நாகேஸ், மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன், மாவட்ட திட்டமிடல் மேம்பாட்டுச் செயலகப் பொறுப்பாளர் மனோஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒட்டுப்படைகள் எந்தெந்த இடங்களில் செயற்படுகின்றன என்ற தகவல்களை விடுதலைப்புலிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.
இச்சந்திப்பு தொடர்பாக மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தயாமோகன் கருத்துத் தெரிவிக்கையில்:-
இன்றைய சந்திப்பில் ஒட்டுப்படைகளின் நடவடிக்கைகள் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆராயப்பட்டது.
எதிர்வரும் ஜெனீவாப் பேச்சு வார்த்தையில் ஒட்டுப்படை விவகாரம் மற்றும் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்ட விடயம் என்பவற்றை பேச்சு மேசைக்கு கொண்டுவரவுள்ளதாக கண்காணிப்புக் குழுத் தலைவர் எம்மிடம் தெரிவித்துள்ளார் என்றார் தயாமோகன்.
<i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>

"
"
"