02-08-2006, 10:46 AM
<b>சாலை விபத்தில் நடிகை பூஜா படுகாயம்
பிப்ரவரி 08, 2006
பெங்களூர்:
நடிகை பூஜா பயணம் செய்த காரும், டாக்சியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் பூஜா படுகாயம் அடைந்தார்.
ஜேஜே, அட்டகாசம், தம்பி, தகப்பன்சாமி என பல படங்களில் நடித்துள்ளவர் பூஜா. இப்போது பொறி என்ற புதுப் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்குகிறது.
படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக பெங்களூரில் உள்ள தனது வீட்டிலிருந்து கிளம்பினார் பூஜா. விமான நிலையம் செல்லும் வழியில் அவரது காரும், இன்னொரு டாக்சியும் பயங்கரமாக மோதிக் கொண்டன. இதில் பூஜாவுக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு போகப்பட்டார். அங்கு பூஜாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சில அறுவைச் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
தட்ஸ்தமிழிலிருந்து செய்தி</b>