Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆடிய ஆட்டம் என்ன? ரெலோ பொபி மரணம்.
#1
முன்னாள் ரெலோ பொபி பிரிவின் தலைவர் பொபி மரணம்.
ரொலோ அமைப்பின் முன்னாள் முக்கிய உறுப்பினரான பொபி காலமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 85, 86 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரொலோ அமைப்பில் பாரிய பிளவு ஏற்பட்டவேளை தாஸ் (தாஸன்)தலைமையிலான குழுவும், பொபி தலைமையிலான குழுவுமாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் வாழ்ந்துவந்த பொபி சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது. யாழ்ப்பாணம் நல்லூரைச்சேர்ந்த பொபி, 80 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் ரொலோ இயக்கத்தில் இணைந்து, சாவகச்சேரி தாக்குதல் உற்பட பல்வேறு பட்ட தாக்குதல்களிலும் முன்னின்று செயற்பட்டவராவார்.

85 ஆம் அண்டுகாலப்பகுதியில் எற்பட்ட பிளவுகளை அடுத்து ரொலோ அமைப்பின் இராணுவத்துறை தலைவராக இருந்த தாஸ் உற்பட அவரது குழுவினரை யாழ்ப்பாணம் வைத்தியசாலையின் உள்ளே வைத்து பொபியே சுட்டுக்கொன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

86 களின் பின்னர் அரசியலில், போராட்டத்தில் இருந்து ஒதுங்கி இருந்த பொபி, இந்தியாவில் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து தங்கியிருந்தார். கடுமையான சுகயீனம் காரமாக இவர் இறந்துள்ளதாக தெரியவருகின்றது.

நன்றி: பதிவு
[b]<span style='font-size:25pt;line-height:100%'>
</span>
Reply


Messages In This Thread
ஆடிய ஆட்டம் என்ன? ரெலோ பொபி மரணம். - by வினித் - 02-07-2006, 01:16 PM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 03:15 AM
[No subject] - by MUGATHTHAR - 02-08-2006, 06:13 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)