02-07-2006, 04:54 AM
<b>ரீ.ஆர்.ஓ பணியாளர்கள் கடத்தல் - தொடரும் மக்கள் மீதான கெடுபிடிகளிற்கு வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலகம் கண்டனம் </b>
தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் பணியாளர்கள் கடத்தப்பட்டதும் அவர்கள் இதுவரை விடுதலை செய்யப்படாததும் அப்பட்டமான மனித உரிமை மீறல் நடவடிக்கையாகும். இது தொடர்பாக நாங்கள் சர்வதேசத்தின் கவனத்திற்கும் கொண்டு செல்லும் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றோம். இவ்வாறு வடக்கு கிழக்கு மகித உரிமைகள் செயலகத்தின் தலைவர் அருட்திரு கருணாரெட்ணம் அடிகளார் சங்கதியிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது தமிழர் தாயகப்பகுதிகளில் சிறிலங்கா அரசுடன் இணைந்து செயலாற்றுகின்ற ஆயுதக்குழுக்கள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் முலம் ஆயுதக்குழுக்களின் செயற்பாடுகள் மேலும் அம்பலமாகியுள்ளது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பில் சிறிலங்காவின் பொறுப்புள்ள அமைச்சர்கள் வெளியிட்டு வருகின்ற பொறுப்பற்ற பேச்சுக்கள் ஜெனிவாவில் நடைபெற இருக்கின்ற பேச்சுக்களையே கேள்விக்குறியாக்கியுள்ளது.
இது மட்டுமல்லாது வடக்கு கிழக்கு பகுதிகளில் கூட படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்ற சுற்றி வளைப்புக்கள் அடையாள அட்டை பரிசோதனைகள் கெடுபிடிகள் என்பன மக்களின் இயல்புவாழ்வில் பெரிதும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. இவை தொடர்பிலான பலமுறைப்பாடுகள்; எமது செயலகத்தில் கிடைத்திருக்கின்றன. இந்த விசாரணைகள் தொடர்பாக நாம் இலங்கையில் இருக்கின்ற அனைத்து மனித உரிமைகள் செயலகத்தினுடனும் தொடர்பு கொண்டு நடவடிக்கைளை துரிதாமாக மேற்கொண்டு வருகின்றோம் என்றும் அருட்திரு கருணாரெட்ணம் அடிகளார் குறிப்பிட்டார்.
மேலும் வடக்கு கிழக்கு மீனவர்களின் நிலைகள் தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் மன்னார் யாழ்ப்பாணம் திருகோணமலை பிரதேசங்களில் மீனவர்களுக்கு அனமதி அட்டை என்ற போர்வையில் சிறிலங்கா கடற்படையினர் பல கெடுபிடிகளை ஏற்படுத்தி வருவதாகவும் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இது தொடர்பிலும் நாங்கள் சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். குறிப்பாக தமிழ் மீனவர்களுக்கு இவ்வாறான கெடுபிடிகளை ஏற்படுத்தி சிங்கள மீனவர்களுக்கு அதே பகுதியில் சிறிலங்கா கடற்படை தரப்பு சில சலுகைகளை வழங்கி வருவதானது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும்.
அத்துடன் திருகோணமலையில் பல சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி தமிழ் மீனவர்களின் நடவடிக்கைகளை முடக்கும் நடவடிக்கையில் சிறிலங்கா கடற்படை தரப்பு ஈடுபட்டு வருகின்றது. எனவே இவ்வாறன செயற்பாடுகளை நமது செயலகம் முழுமையாக கண்காணிப்பதாகவும் கருணாரெட்ணம் அடிகளார் சங்கதிக்கு மேலும் தெரிவித்துள்ளார்.
<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>

"
"
"