02-07-2006, 04:38 AM
<b>மட்டு. மாவட்டத்தில் பணி புறக்கணிப்பு வீதி வெறிச்சோடியது மக்கள் முடக்கம்! </b>
மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட பணிப்புறக்கணிப்பால் மாவட்டத்தின் முழு நடவடிக்கையும் ஸ்தம்பிதம் அடைந்தன. அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் தாக்குதலுக்குட்படுத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்@ கடத்தப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் உடன் விடுதலை செய்ய வேண்டும் எனவும் கோரி மாவட்டத்திலுள்ள உள்ளுர் மற்றும் வெளிநாட்டு அமைப்புக்களின் தொண்டர் நிறுவனங்கள் தமது பணிகளை புறக்கணித்து தமது எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளார்கள்.
இதனால் மட்டக்களப்பு மாவட்டத்தின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வீதிகளில் டயர்கள் எரிக்கப்பட்டு போக்குவரத்தும் இடம்பெறவில்லை. பாடசாலைகள், அலுவலகங்கள், வங்கிகள், வைத்தியசாலைகளில் ஊழியர்களின் வருகை மிகக் குறைவால் வெறிச்சோடிக் காணப்பட்டது.
ஆரையம்பதி, களுவாஞ்சிகுடி, பட்டிருப்பு, கல்லாறு, செங்கலடி, தேத்தாத்தீவு, வந்தாறுமூலை, சித்தாண்டி, வாழைச்சேனை பகுதிகளிலும் கர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டது. வீதிகளில் பொது மக்களின் நடமாட்டமும் மிகவும் குறைவாகக் காணப்பட்டது. வீதிகளில் இராணுவம், பொலிசார் பெருமளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நாளை புதன்கிழமை மீண்டும் தொண்டர் நிறுவனங்கள் தமது பணிகளை புறக்கணிக்கப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கடந்த 3ம் திகதி அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையம் எடுத்த விசேட கூட்ட தீர்மானத்தின்படி நிராயுபாணிகளான தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் சம்பந்தப்பட்டவர்களால் விடுவிக்கப்பட வேண்டும்.
இதற்காக சர்வதேச சமூகம், இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக்குழு, மனித உரிமைகள் அமைப்புக்கள், அரசு ஆகியன அதிக அழுத்தம் கொடுத்து விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக்கோரி நேற்று முதல் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தில் அரசசார்பற்ற நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலை காரணமாக அரச சார்பற்ற நிறுவனங்கள் தமது பணியை நிறுத்தியுள்ளன. இதனால் கடற்கோளால் பாதிக்கப்பட்ட மக்களின் சகல பணிகளும் முடங்கி விடுமோ என பாதிக்கப்பட்ட மக்கள் அச்சம் தெரிவித்துள்ளதுடன் கடத்தப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
<i><b>தகவல் மூலம் - ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>
தொடர்புடைய செய்திக்கும் புகைப்படங்களுக்கும்
http://www.sankathi.com/index.php?option=c...=1630&Itemid=26

"
"
"