02-06-2006, 09:47 AM
<b>இந்து மாமன்றம் அஞ்சலி</b>
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஜீவானானந்தா மகராஜ் அவர்கள் இறையடி சேர்ந்ததையிட்டு அகில இலங்கை இந்து மாமன்றம் ஆழ்ந்த வேதனையடைவதுடன் அஞ்சலியையும் செலுத்துகிறது.
சுவாமிஜி இராமகிருஷ்ண மிஷன் ஊடாக கடந்த நாற்பது ஆண்டுகளாக சிறப்பாக சேவையாற்றி வந்தவர். அந்த வகையில் இராமகிருஷ்ண மிஷன் அமைந்துள்ள கல்லடி - உப்போடை என்ற இடத்தில் ஆண், பெண் பிள்ளைகளுக்கான தனித்தனியான இரு இல்லங்களையும், காரைதீவில் பெண் குழந்தைகளுக்கான இல்லமொன்றையும் அமைத்து நிர்வகித்து வந்தார்.
இந்த நாட்டில் மக்கள் பணியையே இறைபணியாக ஏற்று ஒப்பார் மிக்கார் அற்ற வகையில் சேவை செய்ததன் மூலம் இந்துப் பெருமக்களின் புனித உள்ளங்களில் முன் வரிசையில் வைத்துப் போற்றப்பட்டவர். அவரது அரவணைப்பில் வளர்ந்து உயர்ந்த பிள்ளைகள் ஏராளம். அவருக்கு இந்து மக்கள் செய்யக்கூடிய பொருத்தமான அஞ்சலி அவர் காட்டிய வழியில் இளம் சமுதாயத்தினரை நெறிப்படுத்தி, அவர்களின் வாழ்வு செம்மையுறப் பணிபுரிவதேயாகும்.
யாழ். இந்து மாநாட்டில் தெய்வத் திருமகள் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி, ஞானவித்தகர் அருட்கவி சீ. விநாசித்தம்பி ஆகியோரை கௌரவித்ததைப் போன்று மட்டக்களப்பில் மாமன்றம் நடத்தவிருக்கும் இந்து மாநாட்டில் கலாநிதி அவர்களையும் கௌரவித்து மாமன்றம் பெருமை தேடிக்கொள்ள காத்திருந்தது. ஆனால், விதி முந்திவிட்டது.
மாமன்றத்தின் கௌரவ உறுப்பினர்களுள் ஒருவராக சுவாமிஜியை தெரிவு செய்ததன் மூலம் அகில இலங்கை இந்து மாமன்றம் பெருமை தேடிக்கொண்டது. மாமன்றம் சுவாமிஜியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததுடன் அவரது ஆன்மீக வழிகாட்டலையும் பெற்றுவந்தது. சுவாமிஜியின் மறைவு, இந்து மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும்.
சுவாமிஜியின் இறுதிக் கிரியைகள் நடைபெறும் நாளான 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சகல இந்து பெருமக்களும் துக்கதினமாக அனுஷ்டித்து சுவாமிஜிக்கு ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை இந்து மாமன்றம் அன்பு வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றது என்று மன்றத்தின் பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
<i><b>தகவல் மூலம்- தினக்குரல்</b></i>

"
"
"