Yarl Forum
மட்டு.இராமகிருஷ்ண ஜீவானந்தஜீ மகராஜ் மறைவு - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3)
+--- Forum: துயர்பகிர்வு / நினைவுகூரல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=17)
+--- Thread: மட்டு.இராமகிருஷ்ண ஜீவானந்தஜீ மகராஜ் மறைவு (/showthread.php?tid=999)



மட்டு.இராமகிருஷ்ண ஜீவானந்தஜீ மகராஜ் மறைவு - மேகநாதன் - 02-06-2006

<b>சுவாமி ஜீவானந்தா ஜீ மகராஜ் எண்பத்தோராவது வயதில் இறையடி</b>

மட்டக்களப்பு இராமக்கிருஸ்ணமிசன் தலைவர் சிறிமத் சுவாமி ஜீவனாந்தாஜீ மகராஜ் நேற்று முன்தினம் மாலை 1.15 மணிக்கு மட்டக்களப்பு ஜீ.வி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறையடி எய்தினர்.

மட்டக்களப்பு வலையிறவில் செல்வந்த குடும்பமான வாரித்தம்பி அழகம்மா தம்பதியினருக்கு 1925.06.22ஆம் திகதி புதல்வராகப் பிறந்த இவர் தனது 18 வயதில் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் மட்.கல்லடி இராமக் கிருஸ்ணமிசனில் இணைந்து மட்.சிவானந்தா வித்தியாலயத்தில் கல்வி கற்றார்.

தனது கல்வியினை முடித்துக் கொண்ட இவர் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் இந்தியா சென்று 1952ம் ஆண்டு முதல் 1957ம் ஆண்டு வரை கல்கத்தா வேலூர் மடத்தில் துறவு மேற்கொண்;டார். இதன் போது இவர் சிவசைதன்யா எனும் பெயரையும் பெற்றார் இவர் 1958. 03.01ம் திகதி சுவாமி இராமக் கிருஸ்ணர் குழு பூசை தினத்தன்று சன்னியாசம் பெற்றார்.

அன்று முதல் இவர் சிறிமத் சுவாமி ஜீவனானந்தா ஜீ மகராஜ் எனும் பெயரையும் பெற்றுக் கொண்டார். இவரது இயற்பெயர் தம்பிப்பிள்ளை ஆகும். இந்தியா இருந்து 1966. 03.17ம் திகதி மட்டக்களப்பிற்கு வந்த இவர் சிறிமத் சுவாமி நடராஜானந்தா ஜீ மகராஜ் அவர்களுக்கு உதவியாக இருந்து தனது பணியை மேற்கொண்ட வேளை அவரது மறைவின் பின் 1967.03.17ம் திகதி முதல் மட்டக்களப்பு இராமக்கிரு;ணமிசன் தலைமைபீட பொறுப்பை ஏற்று தனது மறைவு முதல் 2006.02.04ம் திகதி வரை அரும்பணி ஆற்றி வந்தார்.

மட்டக்களப்பு இராமக் கிருஸ்ணமிசனின் கீழ் இயங்கிவரும் மட். கல்லடி சிறுவர் இல்லம், மட்.சாரதா பெண்கள் இல்லம், மட்.காரைதீவு சிறுவர் இல்லங்களை நிருவகித்து வந்தார்.

இதேவேளை கொழும்பு இராமக்கிருஸ்ணமிசன் இலங்கைக் கிளையின் உப தலைவர் சிறிமத் சுவாமி சம்ரஜானந்தா ஜீ மகராஜ் அவர்கள் மறைவின் பின் 1990.07.01ம் திகதி முதல் 1991.06.30ம் திகதி வரைப்பட்ட காலத்தில் கொழும்பு இராமக்கிருஸ்ணமிசன் இலங்கைக் கிளையின் உபதலைவராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

1958.03.01 முதல் தனது மறைவான 2006.02.04ம் திகதி வரை மட்டக்களப்பில் இறைபணி ஆற்றிய இவர் தனது கல்வியினை மட்.சிவானந்தா வித்தியாலயத்தில் கற்று சன்னியாசம் பெறுவதற்கு இந்தியா செல்வதற்கு முன்பு மட்.ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகவும் கடமை புரிந்து ஆங்கில கல்வியினை வளர்க்கவும் அரும்பாடுபட்டுள்ளார்.

மட். ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலை முன்பு ஆனைப்பந்தி ஆலயத்தின் உள் வீதியில் அமைந்து இருந்தது. இறைபணி ஆற்றி வந்த சுவாமி அவர்கள் சமூக சேவையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டு மக்களுக்கும் உதவி புரிந்து வந்தார். கடந்த சுனாமி அனர்த்தத்தின் பின்னர் இவர் மட்டக்களப்பில் ஆற்றிய பணியும் அளப்பரியதாகும்.

இவரால் சுவாமி விவேகானந்தர் ஓராண்டு விழாவின் நினைவாக நாவற்குடாவில் விவேகானந்தா எனும் ஒரு மாதிரிக் கிராமத்தை அமைத்து வீடு அற்ற மக்களை அங்கு குடியமர்த்தியுள்ளார். அதேவேளை சுனாமியினால் வீடுகளை இழந்த சின்ன உப்போடை, பெரிய உப்போடை, சீலாமுனை, கல்லடி, திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் 114 நிரந்தர வீடுகளை மிசன் மூலம் அமைத்து வந்த இவர் ஒரு தொகுதி வீடுகளை கையளித்துள்ளார்.

தனது இறுதி வேலையாக மேற்கொண்ட கல்லடி நீர் வழங்கல் வடிகாலமைப்பு நிலையப் பகுதியில் 70 வீடுகளை அமைக்கும் முயற்சியினை மேற்கொண்டு பூர்த்தியடையும் வேளையில் உயிர் பிரிந்துள்ளார். இதனை கட்டி முடிப்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயற்பட்டார்.

ஆத்மீக நெறியை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு ஆத்மாத்தமான பணியை மேற்கொண்ட இவர் சுவாமி விபுலானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிசன் சுவாமி விபுலானந்தருக்குப் பின் சிறிமத் சுவாமி நடராஜானந்தா ஜீ மகராஜ் அவர்கள் தலைமைப் பொறுப்பேற்று நடாத்தி வந்த வேளையில் அவரின் மறைவிற்கு பின் மூன்றாவது தலைமைப் பொறுப்பினை மறைந்த சிறிமத் சுவாமி ஜீவனானந்த ஜீ மகராஜ் ஏற்று நடாத்தி வந்தார்.

இவரது தகனக் கிரியை நாளை பி.ப 4.00 மணிக்கு மட். சாரதா பெண்கள் இல்லப் பகுதியில் உள்ள வளாகத்தில் இடம் பெறும் தற்போது மட்.கல்லடி மிசனில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள இவரது பூதவுடழுக்கு பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

<i><b>தகவல் மூலம்- ஈழநாதம்-மட்டக்களப்பு பதிப்பு</b></i>


- மேகநாதன் - 02-06-2006

<b>மட்டு. இராம கிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்தாஜீ காலமானார்</b>

மட்டக்களப்பு இராம கிருஷ்ண மிசன் தலைவர் சிறிமத் சுவாமி ஜீவனானந்தா ஜீ மகராஜ் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 7.15 மணிக்கு மட்டக்களப்பு ஜீ.வி.தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 81 ஆவது வயதில் காலமானார்.

மட்டக்களப்பு வலையிறவில் செல்வந்தக் குடும்பமான வாரித்தம்பி அழகம்மா தம்பதியினருக்கு 1925.06.22 ஆம் திகதி புதல்வராக பிறந்த இவர் தனது 18 ஆவது வயதில் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் மட்டக்களப்பு கல்லடி இராம கிருஷ்ண மிசனில் இணைந்து பின்னர் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்றார்.

தனது கல்வியை முடித்துக் கொண்ட இவர் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் இந்தியா சென்று 1952 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரை கொல்கத்தா வேலூர் மடத்தில் துறவு மேற்கொண்டார். இதன் போது இவர் சிவசைதன்யா எனும் பெயரையும் பெற்றார். இவர் 1958.03.01 ஆம் திகதி சுவாமி இராமகிருஷ்ணர் குரு பூஜை தினத்தன்று சந்நியாசம் பெற்றார். அன்று முதல் இவர் ஷ்ரீமத் சுவாமி ஜீவனானந்தா ஜீ மகராஜ் எனும் பெயரையும் பெற்றுக் கொண்டார். இவரது இயற்பெயர் தம்பிப்பிள்ளை ஆகும்.

இந்தியாவிலிருந்து 1966.03.17 ஆம் திகதி மட்டக்களப்பிற்கு வந்த இவர் ஷ்ரீமத் சுவாமி நடராஜானந்தா ஜீ மகராஜ் அவர்களுக்கு உதவியாக இருந்து தனது பணியை மேற்கொண்ட வேளை அவரது மறைவின் பின் 1967.03.17 ஆம் திகதி முதல் மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிசன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கடந்த சனிக்கிழமை வரை அரும் பணி ஆற்றி வந்தார்.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசனின் கீழ் இயங்கிவரும் மட்/கல்லடி சிறுவர் இல்லம், மட்/சாரதா பெண்கள் இல்லம், மட்/காரைதீவு சிறுவர் இல்லங்களையும் நிர்வகித்து வந்தார்.

இதேவேளை கொழும்பு இராம கிருஷ்ணமிசன் இலங்கைக் கிளையின் உபதலைவர் சிறிமத் சுவாமி சம்ரஜானந்தா ஜீ மகராஜ் அவர்கள் மறைவின் பின் 1990.07.01 ஆம் திகதி முதல் 1991.06.30 ஆம் திகதி வரைப்பட்ட காலத்தில் கொழும்பு இராமகிருஷ்ண மிசன் இலங்கைக் கிளையின் உபதலைவராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

1958.03.01 முதல் தனது மறைவான 2006.02.04 ஆம் திகதி வரை மட்டக்களப்பில் இறை பணி ஆற்றிய இவர் தனது கல்வியை மட்/சிவானந்தா வித்தியாலயத்தில் கற்று சந்நியாசம் பெறுவதற்கு இந்தியா செல்வதற்கு முன்பு மட்/ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகவும் கடமை புரிந்து ஆங்கில கல்வியினை வளர்க்கவும் அரும்பாடுபட்டுள்ளார். (மட்/ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலை முன்பு ஆனைப்பந்தி ஆலயத்தின் உள் வீதியில் அமைந்து இருந்தது.)

இவர் சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு விழாவின் நினைவாக நாவற்குடாவில் விவேகானந்தாபுரம் எனும் ஒரு மாதிரிக் கிராமத்தை அமைத்து வீடு அற்ற மக்களைக் குடியமர்த்தியுள்ளார். அதேவேளை கடல்கோளினால் வீடுகளை இழந்த சின்ன உப்போடை, பெரிய உப்போடை, சீலாமுனை, கல்லடி திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் 114 நிரந்தரவீடுகளை மிசன் மூலம் அமைத்து வந்த இவர் ஒரு தொகுதி வீடுகளை கையளித்துள்ளார்.

தனது இறுதி வேலையாக மேற்கொண்ட கல்லடி நீர் வழங்கல் வடிகாலமைப்பு நிலையப் பகுதியில் 70 வீடுகளை அமைக்கும் முயற்சியினை மேற்கொண்டு அத்திட்டம் பூர்த்தியடையும் வேளையில் இயற்கை எய்தியுள்ளார்.

இவரது இறுதிக் கிரியை நாளை (செவ்வாய்) மாலை 4 மணிக்கு மட்/சாரதா பெண்கள் இல்லப் பகுதியில் உள்ள வளாகத்தில் இடம்பெறும். தற்போது மட்/கல்லடி மிசனில் அஞ்சலிக்காக

<i><b>தகவல் மூலம்- தினக்குரல்</b></i>
http://www.thinakural.com/New%20web%20site...y/06/news-4.htm


- மேகநாதன் - 02-06-2006

<b>இந்து மாமன்றம் அஞ்சலி</b>

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷன் தலைவர் சுவாமி ஜீவானானந்தா மகராஜ் அவர்கள் இறையடி சேர்ந்ததையிட்டு அகில இலங்கை இந்து மாமன்றம் ஆழ்ந்த வேதனையடைவதுடன் அஞ்சலியையும் செலுத்துகிறது.

சுவாமிஜி இராமகிருஷ்ண மிஷன் ஊடாக கடந்த நாற்பது ஆண்டுகளாக சிறப்பாக சேவையாற்றி வந்தவர். அந்த வகையில் இராமகிருஷ்ண மிஷன் அமைந்துள்ள கல்லடி - உப்போடை என்ற இடத்தில் ஆண், பெண் பிள்ளைகளுக்கான தனித்தனியான இரு இல்லங்களையும், காரைதீவில் பெண் குழந்தைகளுக்கான இல்லமொன்றையும் அமைத்து நிர்வகித்து வந்தார்.

இந்த நாட்டில் மக்கள் பணியையே இறைபணியாக ஏற்று ஒப்பார் மிக்கார் அற்ற வகையில் சேவை செய்ததன் மூலம் இந்துப் பெருமக்களின் புனித உள்ளங்களில் முன் வரிசையில் வைத்துப் போற்றப்பட்டவர். அவரது அரவணைப்பில் வளர்ந்து உயர்ந்த பிள்ளைகள் ஏராளம். அவருக்கு இந்து மக்கள் செய்யக்கூடிய பொருத்தமான அஞ்சலி அவர் காட்டிய வழியில் இளம் சமுதாயத்தினரை நெறிப்படுத்தி, அவர்களின் வாழ்வு செம்மையுறப் பணிபுரிவதேயாகும்.

யாழ். இந்து மாநாட்டில் தெய்வத் திருமகள் கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டி, ஞானவித்தகர் அருட்கவி சீ. விநாசித்தம்பி ஆகியோரை கௌரவித்ததைப் போன்று மட்டக்களப்பில் மாமன்றம் நடத்தவிருக்கும் இந்து மாநாட்டில் கலாநிதி அவர்களையும் கௌரவித்து மாமன்றம் பெருமை தேடிக்கொள்ள காத்திருந்தது. ஆனால், விதி முந்திவிட்டது.

மாமன்றத்தின் கௌரவ உறுப்பினர்களுள் ஒருவராக சுவாமிஜியை தெரிவு செய்ததன் மூலம் அகில இலங்கை இந்து மாமன்றம் பெருமை தேடிக்கொண்டது. மாமன்றம் சுவாமிஜியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததுடன் அவரது ஆன்மீக வழிகாட்டலையும் பெற்றுவந்தது. சுவாமிஜியின் மறைவு, இந்து மக்களுக்கு ஒரு பேரிழப்பாகும்.

சுவாமிஜியின் இறுதிக் கிரியைகள் நடைபெறும் நாளான 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சகல இந்து பெருமக்களும் துக்கதினமாக அனுஷ்டித்து சுவாமிஜிக்கு ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனையில் ஈடுபடுமாறு அகில இலங்கை இந்து மாமன்றம் அன்பு வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றது என்று மன்றத்தின் பொதுச் செயலாளர் கந்தையா நீலகண்டன் விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

<i><b>தகவல் மூலம்- தினக்குரல்</b></i>


- iruvizhi - 02-06-2006

அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.


- sabi - 02-06-2006

சிரம் தாழ்த்திக் கரம் கூப்பி
வணங்குகிறேன் Cry


- Vasampu - 02-07-2006

சுவாமி ஜீவானந்தா ஜீ மகராஜ் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.


- Rasikai - 02-07-2006

அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்.


- மேகநாதன் - 02-07-2006

<b>மறைந்த மட்டு. இராமகிருஸ்ண மிசன் தலைவருக்கு பெருந்திரானோர் அஞ்சலி </b>

கடந்த சனிக்கிழமை இயற்கையெய்திய மட்டக்களப்பு மாவட்ட இராம கிருஸ்ண மிஷன் தலைவர் சுவாமி ஜீவானந்தா ஜீ மகராஜ் அவர்களின் பூகழுடல் மட்டக்களப்பு விபுலானந்தா மணி மண்டபத்தில் வைக்கப் பட்டுள்ளது. அன்னாரின் புகழுடலுக்கு பெருந்திரளான மக்களும், மாணவர்க ளும் தமது இறுதி அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.

<i><b>தகவல் மூலம்- சங்கதி</b></i>


- மேகநாதன் - 02-07-2006

தொடர்புடைய செய்திக்கும் புகைப்படங்களுக்கும்

http://www.sankathi.com/index.php?option=c...=1631&Itemid=26


- தூயவன் - 02-07-2006

அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்!!


- Shankarlaal - 02-07-2006

<b>எனது கண்ணீர் அஞ்சலிகள் உரித்தாகுக</b>


- Shankarlaal - 02-07-2006

<img src='http://www.thinakural.com/New%20web%20site/web/2006/February/07/page-8-1.jpg' border='0' alt='user posted image'>

<b>தினகுரலிலிருந்து</b>


- Niththila - 02-07-2006

அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள் <!--emo&Sad--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->


- அனிதா - 02-07-2006

சுவாமி ஜீவானந்தா ஜீ மகராஜ் அவர்களுக்கு எனது கண்ணீர் அஞ்சலிகளும்.


- மேகநாதன் - 02-08-2006

இறுதிக் கிரியை நிகழ்வு செய்தி மற்றும் புகைப்படங்களுக்கு

http://www.sankathi.com/index.php?option=c...a391bec06f1396a


- நர்மதா - 02-08-2006

அன்னாருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள்


- Shankarlaal - 02-08-2006

<img src='http://www.pathivu.com/news2/admin/data/upimages/swami-1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.pathivu.com/news2/admin/data/upimages/swami-2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.pathivu.com/news2/admin/data/upimages/swami-3.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.pathivu.com/news2/admin/data/upimages/swami-4.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.pathivu.com/news2/admin/data/upimages/swami-5.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.pathivu.com/news2/admin/data/upimages/swami-6.jpg' border='0' alt='user posted image'>

<b>பதிவிலிருந்து படங்கள்</b>