Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
மட்டு.இராமகிருஷ்ண ஜீவானந்தஜீ மகராஜ் மறைவு
#2
<b>மட்டு. இராம கிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஜீவனானந்தாஜீ காலமானார்</b>

மட்டக்களப்பு இராம கிருஷ்ண மிசன் தலைவர் சிறிமத் சுவாமி ஜீவனானந்தா ஜீ மகராஜ் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு 7.15 மணிக்கு மட்டக்களப்பு ஜீ.வி.தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனது 81 ஆவது வயதில் காலமானார்.

மட்டக்களப்பு வலையிறவில் செல்வந்தக் குடும்பமான வாரித்தம்பி அழகம்மா தம்பதியினருக்கு 1925.06.22 ஆம் திகதி புதல்வராக பிறந்த இவர் தனது 18 ஆவது வயதில் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் மட்டக்களப்பு கல்லடி இராம கிருஷ்ண மிசனில் இணைந்து பின்னர் மட்டக்களப்பு சிவானந்த வித்தியாலயத்தில் கல்வி கற்றார்.

தனது கல்வியை முடித்துக் கொண்ட இவர் ஆத்மீகத்தில் கொண்ட ஈடுபாட்டினால் இந்தியா சென்று 1952 ஆம் ஆண்டு முதல் 1957 ஆம் ஆண்டு வரை கொல்கத்தா வேலூர் மடத்தில் துறவு மேற்கொண்டார். இதன் போது இவர் சிவசைதன்யா எனும் பெயரையும் பெற்றார். இவர் 1958.03.01 ஆம் திகதி சுவாமி இராமகிருஷ்ணர் குரு பூஜை தினத்தன்று சந்நியாசம் பெற்றார். அன்று முதல் இவர் ஷ்ரீமத் சுவாமி ஜீவனானந்தா ஜீ மகராஜ் எனும் பெயரையும் பெற்றுக் கொண்டார். இவரது இயற்பெயர் தம்பிப்பிள்ளை ஆகும்.

இந்தியாவிலிருந்து 1966.03.17 ஆம் திகதி மட்டக்களப்பிற்கு வந்த இவர் ஷ்ரீமத் சுவாமி நடராஜானந்தா ஜீ மகராஜ் அவர்களுக்கு உதவியாக இருந்து தனது பணியை மேற்கொண்ட வேளை அவரது மறைவின் பின் 1967.03.17 ஆம் திகதி முதல் மட்டக்களப்பு இராமகிருஷ்ணமிசன் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கடந்த சனிக்கிழமை வரை அரும் பணி ஆற்றி வந்தார்.

மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிசனின் கீழ் இயங்கிவரும் மட்/கல்லடி சிறுவர் இல்லம், மட்/சாரதா பெண்கள் இல்லம், மட்/காரைதீவு சிறுவர் இல்லங்களையும் நிர்வகித்து வந்தார்.

இதேவேளை கொழும்பு இராம கிருஷ்ணமிசன் இலங்கைக் கிளையின் உபதலைவர் சிறிமத் சுவாமி சம்ரஜானந்தா ஜீ மகராஜ் அவர்கள் மறைவின் பின் 1990.07.01 ஆம் திகதி முதல் 1991.06.30 ஆம் திகதி வரைப்பட்ட காலத்தில் கொழும்பு இராமகிருஷ்ண மிசன் இலங்கைக் கிளையின் உபதலைவராகவும் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது.

1958.03.01 முதல் தனது மறைவான 2006.02.04 ஆம் திகதி வரை மட்டக்களப்பில் இறை பணி ஆற்றிய இவர் தனது கல்வியை மட்/சிவானந்தா வித்தியாலயத்தில் கற்று சந்நியாசம் பெறுவதற்கு இந்தியா செல்வதற்கு முன்பு மட்/ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலையில் ஆங்கில ஆசிரியராகவும் கடமை புரிந்து ஆங்கில கல்வியினை வளர்க்கவும் அரும்பாடுபட்டுள்ளார். (மட்/ஆனைப்பந்தி ஆண்கள் பாடசாலை முன்பு ஆனைப்பந்தி ஆலயத்தின் உள் வீதியில் அமைந்து இருந்தது.)

இவர் சுவாமி விவேகானந்தர் நூற்றாண்டு விழாவின் நினைவாக நாவற்குடாவில் விவேகானந்தாபுரம் எனும் ஒரு மாதிரிக் கிராமத்தை அமைத்து வீடு அற்ற மக்களைக் குடியமர்த்தியுள்ளார். அதேவேளை கடல்கோளினால் வீடுகளை இழந்த சின்ன உப்போடை, பெரிய உப்போடை, சீலாமுனை, கல்லடி திருச்செந்தூர் ஆகிய பகுதிகளில் 114 நிரந்தரவீடுகளை மிசன் மூலம் அமைத்து வந்த இவர் ஒரு தொகுதி வீடுகளை கையளித்துள்ளார்.

தனது இறுதி வேலையாக மேற்கொண்ட கல்லடி நீர் வழங்கல் வடிகாலமைப்பு நிலையப் பகுதியில் 70 வீடுகளை அமைக்கும் முயற்சியினை மேற்கொண்டு அத்திட்டம் பூர்த்தியடையும் வேளையில் இயற்கை எய்தியுள்ளார்.

இவரது இறுதிக் கிரியை நாளை (செவ்வாய்) மாலை 4 மணிக்கு மட்/சாரதா பெண்கள் இல்லப் பகுதியில் உள்ள வளாகத்தில் இடம்பெறும். தற்போது மட்/கல்லடி மிசனில் அஞ்சலிக்காக

<i><b>தகவல் மூலம்- தினக்குரல்</b></i>
http://www.thinakural.com/New%20web%20site...y/06/news-4.htm
"
"
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 02-06-2006, 09:43 AM
[No subject] - by மேகநாதன் - 02-06-2006, 09:47 AM
[No subject] - by iruvizhi - 02-06-2006, 07:09 PM
[No subject] - by sabi - 02-06-2006, 11:25 PM
[No subject] - by Vasampu - 02-07-2006, 01:13 AM
[No subject] - by Rasikai - 02-07-2006, 03:05 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:49 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:50 AM
[No subject] - by தூயவன் - 02-07-2006, 05:23 AM
[No subject] - by Shankarlaal - 02-07-2006, 09:36 AM
[No subject] - by Shankarlaal - 02-07-2006, 10:34 AM
[No subject] - by Niththila - 02-07-2006, 11:03 AM
[No subject] - by அனிதா - 02-07-2006, 01:57 PM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 04:29 AM
[No subject] - by நர்மதா - 02-08-2006, 10:18 AM
[No subject] - by Shankarlaal - 02-08-2006, 10:51 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)