Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கணணி நீங்களும் செய்யலாம்
#2
நுண் செயலிகள் - Processors

<img src='http://www.intel.com/products/i/photo/pentium4.jpg' border='0' alt='user posted image'>

நுண் செயலிகள் பலவகைகளிலும் பல அமைப்புகளிலுமுண்டு. இலத்திரனியல் செயலிகள் நாங்கள்

பாவிக்கும் கணிப்பான்கள், டிஜிற்ல் மணிக்கூடுகள், கைத்தொலைபேசிகள் மற்றும் VCR களிலும் பாவிக்கப்படுகின்றன.

நுண் செயலிகள் நாம் கொடுக்கும் அறிவுறுத்தலுக்கிணங்க பின்வரும் அடிப்படை செயற்பாடுகளைச் செய்யும்

கணித அல்லது தர்க்க அலகு Arithmetic/Logic Unit மூலம் கணிப்பீடுகளைச் செய்தல் (அதாவது கூட்டல் கழித்தல் பெருக்கல் பிரித்தல் போன்ற கணிப்புகளை செய்தல்)

தரவுகளை நினைவகத்திடையே இடம் மாற்றல்

தர்க்க ரீதியான முடிவுகளை எடுத்தல்

நாம் கொடுக்கும் ஒவ்வொரு அறிவுறுத்தலும் நேரத்தின் அடிப்படையிலேயே செயற்படுத்தப் படுகின்றன. உதாரணமாக "பானைக்குள் இருக்கும் சோற்றை கோப்பையில் போடு" எனும் அறிவுறுத்தலை எடுத்துக்கொண்டால்

பானைக்கு அருகில் போதல்
சோற்றை எடுத்தல்
கோப்பைக்கு அருகில் வரல்
கோப்பையில் போடல்

என்றவாறு நுண் செயலி அதை இயக்க அதற்கு 4 நேர அலகுகள் தேவைப்படும். இதனால்தான் கணணியின் வேகத்தை அதன் நேர அலகை வைத்து கணிப்பிடுவார்கள் இப்போதய கணணிகள் செக்கனுக்கு பில்லியன் கணக்காக நேரத் துடிப்புகளை உருவாக்க வல்லன. ஒவ்வொரு துடிப்பிலும் அறிவுறுத்தல்கள் செயற்படுத்தப்படும்.

இந்தக் கணிப்பீடுகள் எல்லாம் எவ்வாறு முடிகிறது? இங்குதான் சிலிக்கனின் விளையாட்டுக்கள் இடம்பெறுகின்றன ஆரம்பத்தில் கணணிச் செயலிகள் மிகப்பெரிய அறையின் அளவுடையதாகவே இருந்தன. இவை மூவாயியின் (Transistor) கண்டுபிடிப்பின் பின் உள்ளங் கைக்குள் சுருங்கிவிட்டன. இன்று பல லட்சக்
கணக்கான மூவாயிகளை ஒரு பெருவிரலளவு சிலிக்கள் சில்லில் அடக்கிவிடலாம்.

கணித மற்றும் தர்க்க ரீதியான செயற்பாடுகளை தக்க முறையில் மூவாயிகளை இணைப்பதால் செய்யலாம். மூவாயிகளின் வலைப்பின்னல் பெரிதாயின் பெரிய கணிப்பீடுகளைச் செய்யலாம்.
இந்த மூவாயிகளே நுண் செயலி எனும் கட்டடத்தின் செங்கற்கள். மூவாயிகளின் எண்ணிக்கையைப் பொறுத்தே ஒரு நுண் செயலியின் திறனும் கணிப்பிடப்படும். மூவாயிகளின் பெருக்கமும் pipelining எனும் தொழில்நுட்பமும் நுண் செயலிகளின் திறனை மேலும் அதிகரிக்கின்றன.

pipelining என்றால் பல அறிவுறுத்தல்களை மாந்தரமாக செயற்படுத்துவது இதை செயற்படுத்தவும் மூவாயிகள் தேவை. ஆகவே மூவாயிகளின் எண்ணிக்கையே நுண் செயலியின் திறனை தீர்மானிக்கிறது.

இனி எவ்வகையான நுண் செயலிகள் தேவை?

சாதாரண பயனாளர்களுக்கு சாதாரண நுண் செயலியே போதுமானது - சாதாரண பயனாளர் எனும்பொழுது தட்டச்சு பழகல், அலுவலக வேலைகள் கணக்குகள் பார்த்தல், அல்லது வியாபார கடிதங்கள் கோவைகள் பிரதி செய்தல் என்பனவாகும் இவர்களுக்கு Pentium II, AMD K6, the old Cyrix 6x86 போன்ற நுண்செயலிகள் போதுமானவை.

உயர் பயனாளர்களுக்கு ஓரளவு வேகமுள்ள செயலிகள் தேவை - பலவகை மென்பொருட்களை ஒரே நேரத்தில் இயக்குவோர், வீடியோ ஓடியோ செப்பனிடல் பதிதல் போன்றன செய்பவர்கள், CAD போன்றன பாவித்து கணணி மென்பொருள் மற்றும் பொறியியல் அமைப்புகளைச் செய்வோர், கணணி விளையாட்டுக்கள் விளையாடுவோர் போன்றோர். இவர்களுக்கு Intel Pentium 4 அல்லது AMD XP processor போன்றன கிட்டத்தட்ட 1 தொடக்கம் 2 Ghz வேகத்துடன் இருத்தல் நல்லது.

நுண் செயலி வாங்கும்போது அதனுடன் வரும் அல்லது வாங்கும் மின்விசிறிகள் பற்றியும் கவனத்தில் எடுக்க வேண்டும் அதிவேக நுண்செயலிகள் விரைவில் வெப்பமடைவதால் கூடிய சுழற்சி வேகமுடைய மின்விசிறிகள் பாவிப்பது இன்றியமையாதது. மின்விசிறிகளுடன் வெப்ப உறிஞ்சி heat sink ஒன்றும் பொருத்தப்பட்டிருக்கிறதா எனவும் பாரத்தல் வேண்டும்.

இதைப்பற்றி உங்களுக்குத் தெரிந்த விடயங்களையும் தோழர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் !
Reply


Messages In This Thread
[No subject] - by Kanani - 06-24-2003, 03:30 PM
[No subject] - by kuruvikal - 06-24-2003, 04:43 PM
[No subject] - by sOliyAn - 06-24-2003, 07:33 PM
[No subject] - by GMathivathanan - 06-24-2003, 09:42 PM
[No subject] - by Kanani - 06-25-2003, 12:42 AM
[No subject] - by vaiyapuri - 06-25-2003, 07:18 AM
[No subject] - by Kanani - 06-25-2003, 07:59 AM
[No subject] - by Kanani - 06-25-2003, 01:08 PM
[No subject] - by sOliyAn - 06-25-2003, 11:18 PM
[No subject] - by Kanani - 06-26-2003, 12:47 AM
[No subject] - by GMathivathanan - 06-26-2003, 01:43 AM
[No subject] - by sOliyAn - 06-26-2003, 01:02 PM
[No subject] - by vaiyapuri - 06-27-2003, 10:16 AM
[No subject] - by GMathivathanan - 06-28-2003, 12:46 AM
[No subject] - by GMathivathanan - 06-28-2003, 01:08 AM
[No subject] - by ahimsan - 06-28-2003, 10:34 AM
[No subject] - by sethu - 06-28-2003, 11:06 AM
[No subject] - by Kanani - 06-30-2003, 09:01 PM
[No subject] - by Kanani - 06-30-2003, 09:04 PM
[No subject] - by ahimsan - 06-30-2003, 09:50 PM
[No subject] - by GMathivathanan - 07-03-2003, 09:05 AM
[No subject] - by GMathivathanan - 07-04-2003, 10:12 PM
[No subject] - by Kanani - 07-13-2003, 08:35 PM
[No subject] - by Kanani - 07-14-2003, 12:29 AM
[No subject] - by Kanani - 08-27-2003, 12:31 AM
[No subject] - by Mathivathanan - 08-27-2003, 01:01 AM
[No subject] - by Kanani - 08-28-2003, 01:12 AM
[No subject] - by Kanani - 08-28-2003, 01:36 AM
[No subject] - by Mathivathanan - 08-28-2003, 01:44 AM
[No subject] - by sOliyAn - 08-28-2003, 02:14 AM
[No subject] - by Kanani - 08-28-2003, 01:02 PM
[No subject] - by Kanani - 08-28-2003, 07:51 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)