Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலண்டனில், நெல்லியடி ம.ம.வி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்
#3
நேற்று லண்டன் குறைடன் பகுதியிலுள்ள "Lanfrank School" மண்டபத்தில் நடைபெற்ற நெல்லியடி மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ஒன்று கூடலுக்குச் சென்றிருந்தேன்! அப்பாடசாலையில் படிக்காதனாயினும், அம்மண்ணில் பிறந்தவனென்றபடியாலும், ஒரு பெரும் சரித்திரத்தை எழுதிய பாடசாலையென்ற படியாலும் சென்றிருந்தேன். மிக நேர்த்தியாக ஒருங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சிகளின் ஊடே நடைபெற்ற ஒன்றுகூடல்! மண்டபம் நிறைந்த பார்வையாளர்களினூடே நடைபெற்ற நிகழ்ச்சிகளில், ஆரம்பம் முதல் இறுதிவரை ஆசனங்களிலிருந்து அகராமல் இரசித்தது நிகழ்ச்சிகளின் தரத்தை உணர்த்துவதாக இருந்தது.

லண்டன் பகுதிகளிலுள்ள பல பிரபல வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் இக்கல்லூரியின் பழைய மாணவர்களாக இருப்பது, அக்கல்லூரியின் வளர்ச்சிக்கு பெரும் துணையாக இருக்கப்போவது நேற்று கண் கூடாகத் தெரிந்தது. இப்பாடசாலை மண்டபத்தை பொறுப்பெடுத்து, அதனை சர்வதேச தரத்திற்கு நிகராக பாரிய அளவில் அமைப்பதற்கு இங்கு உறுதியளிக்கப்பட்டது.

இனிதே நிறைவுற்ற இந்நிகழ்ச்சிகளில் சிங்கள வெறியர்களினால் சிதைக்கப்பட்ட இப்பாடசாலையின் வளர்ச்சிக்கு சில உரமூட்டக்கூடிய செயற்பாட்டுகள் முன்னெடுக்கப்பட்டுவரும் இதேவேளை அந்நிகழ்ச்சிக்கு வந்த மக்களிடையே சில ஆதங்கங்களும் வெளிப்பட்டதையும் கவனிக்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக இப்பாடசாலையின் இணையத்தளங்கள், அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் பகுதியை தளமாகக் கொண்டியங்கும், இப்பாடசாலைக்கே தொடர்பற்ற, எம்மினத்தில் விலைபோன கூலிகள் சிலரிடம் சிக்கித் தவிப்பதையும், அதனை விடுவிப்பது அல்லது மாற்றீடுகளைச் செய்ய வேண்டிய தேவைகளையும் வலியுறுத்தியதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
" "
Reply


Messages In This Thread
[No subject] - by Mathan - 01-30-2006, 01:00 PM
[No subject] - by cannon - 02-05-2006, 01:56 PM
[No subject] - by ப்ரியசகி - 02-20-2006, 07:05 PM
[No subject] - by Mathan - 02-20-2006, 07:21 PM
[No subject] - by Selvamuthu - 02-20-2006, 07:24 PM
[No subject] - by ப்ரியசகி - 02-21-2006, 07:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)