Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
வாசித்ததில் பிடித்த கவிதை...'உன் நினைவுகள்"
#1
உன் நினைவுகள்

* உன் பெயர் எழுத

என் பேனா ஓடும் போதெல்லாம்

கேலிச் சிரிப்போடு வந்து

பிள்ளைக் குறும்பாய்

பிடுங்கி எரிந்தாய்!




* உன் மெல்லிய உதடுகளால்

புன்னகையிட்டு மேனியெங்கும்

மின்சாரம் பாய்ச்சி

என் போர்வைக்குள் புகுந்து

நித்திரை கலைத்தாய்!



* என் ஜன்னல் வழி நழுவி வந்து

சில்மிஷக் கணங்களில்

என் பெண்மை பூக்கச் செய்து

உயிரை உருக்கி உலையிலிட்டு

ஜீவன் பருகி தாகம் தீர்த்தாய்!



* உன் முத்தங்களை

பொக்கிஷமாய்

மார்புக்குள் பொத்தி வைத்தேன்

பிரிவின் துயரில் அவை

கரைந்து போயின!

* ஞாபகச் சின்னமான

நம் நிழல்படம்

சிதிலமாகி

சிதைந்து கிடக்கிறது!

* வீதியில் நிராயுதபாணியாய்...

காகித ஓடமாய்

காதல் கடிதம்

கண்ணீரில் நனைந்தபடி!

* கடற்கரை மணலில்

இருவர் பெயரெழுதி ரசித்தபோது

அலை அழித்ததில்

கண்ணீர் வடித்தாய்

நீ இன்று புன்னகைக்கிறாய்!

* புன்னகையால்

உன்னை நேசித்தேன் ஏன்

கண்ணீரால்

காயப்படுத்தினாய்!

* மவுனச் சிறையில்

அடைத்து நீயேன்

மரணத்தை தருகிறாய்!

* மரணத்தின் வாசலை

அடைந்தேன்

உயிருக்குள் நீயிருப்பதால்

மரணம் பற்றிய நினைவே

மறந்து போகிறது!

* வாழ்வின் மிச்சமாய்

நம் காதல் பயணம் இதில்

உன் நினைவுகளும்,

கண்ணீரும் எனக்கு

புன்னகை மட்டும் உனக்கு!

—க.மோகன்,


Cry Cry Cry Cry Cry Cry
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
வாசித்ததில் பிடித்த கவிதை...'உன் நினைவுகள்" - by SUNDHAL - 02-05-2006, 04:58 AM
[No subject] - by RaMa - 02-05-2006, 06:02 AM
[No subject] - by MUGATHTHAR - 02-05-2006, 06:11 AM
[No subject] - by RaMa - 02-05-2006, 06:15 AM
[No subject] - by MUGATHTHAR - 02-05-2006, 06:20 AM
[No subject] - by SUNDHAL - 02-05-2006, 09:16 AM
[No subject] - by Vishnu - 02-06-2006, 08:50 PM
[No subject] - by SUNDHAL - 02-07-2006, 12:38 AM
[No subject] - by starvijay - 02-07-2006, 04:43 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)