![]() |
|
வாசித்ததில் பிடித்த கவிதை...'உன் நினைவுகள்" - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: வாசித்ததில் பிடித்த கவிதை...'உன் நினைவுகள்" (/showthread.php?tid=1024) |
வாசித்ததில் பிடித்த கவிதை...'உன் நினைவுகள்" - SUNDHAL - 02-05-2006 உன் நினைவுகள் * உன் பெயர் எழுத என் பேனா ஓடும் போதெல்லாம் கேலிச் சிரிப்போடு வந்து பிள்ளைக் குறும்பாய் பிடுங்கி எரிந்தாய்! * உன் மெல்லிய உதடுகளால் புன்னகையிட்டு மேனியெங்கும் மின்சாரம் பாய்ச்சி என் போர்வைக்குள் புகுந்து நித்திரை கலைத்தாய்! * என் ஜன்னல் வழி நழுவி வந்து சில்மிஷக் கணங்களில் என் பெண்மை பூக்கச் செய்து உயிரை உருக்கி உலையிலிட்டு ஜீவன் பருகி தாகம் தீர்த்தாய்! * உன் முத்தங்களை பொக்கிஷமாய் மார்புக்குள் பொத்தி வைத்தேன் பிரிவின் துயரில் அவை கரைந்து போயின! * ஞாபகச் சின்னமான நம் நிழல்படம் சிதிலமாகி சிதைந்து கிடக்கிறது! * வீதியில் நிராயுதபாணியாய்... காகித ஓடமாய் காதல் கடிதம் கண்ணீரில் நனைந்தபடி! * கடற்கரை மணலில் இருவர் பெயரெழுதி ரசித்தபோது அலை அழித்ததில் கண்ணீர் வடித்தாய் நீ இன்று புன்னகைக்கிறாய்! * புன்னகையால் உன்னை நேசித்தேன் ஏன் கண்ணீரால் காயப்படுத்தினாய்! * மவுனச் சிறையில் அடைத்து நீயேன் மரணத்தை தருகிறாய்! * மரணத்தின் வாசலை அடைந்தேன் உயிருக்குள் நீயிருப்பதால் மரணம் பற்றிய நினைவே மறந்து போகிறது! * வாழ்வின் மிச்சமாய் நம் காதல் பயணம் இதில் உன் நினைவுகளும், கண்ணீரும் எனக்கு புன்னகை மட்டும் உனக்கு! —க.மோகன்,
- RaMa - 02-05-2006 ஆகா சுண்டல் கவிதைகளும் சுட்டு போட தொடங்கி விட்டீர்களோ? நன்றி கவிதை இனைப்புக்கு. - MUGATHTHAR - 02-05-2006 [quote]வாழ்வின் மிச்சமாய் நம் காதல் பயணம் இதில் உன் நினைவுகளும் கண்ணீரும் எனக்கு புன்னகை மட்டும் உனக்கு! சுண்டல் கவிதையை சுட்டுப் போடேக்கையும் அடிவாங்கவேணும் எண்டு எண்ணத்திலை போட்ட உமது துணிச்சலுக்கு பாராட்டுக்கள் இருக்தாலும் உண்மையைச் சொல்லியிருக்கிறீர் - RaMa - 02-05-2006 [quote=MUGATHTHAR][quote]வாழ்வின் மிச்சமாய் நம் காதல் பயணம் இதில் உன் நினைவுகளும் கண்ணீரும் எனக்கு புன்னகை மட்டும் உனக்கு! சுண்டல் கவிதையை சுட்டுப் போடேக்கையும் அடிவாங்கவேணும் எண்டு எண்ணத்திலை போட்ட உமது துணிச்சலுக்கு பாராட்டுக்கள் இருக்தாலும் உண்மையைச் சொல்லியிருக்கிறீர்[/quote] யாருக்கு புன்னகை யாருக்கு கண்ணீர் என்பது சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அங்கிள்? - MUGATHTHAR - 02-05-2006 Rama Wrote:யாருக்கு புன்னகை யாருக்கு கண்ணீர் என்பது சம்மந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தான் தெரியும் அங்கிள்? என்ரை அனுபவத்திலை எனக்கு கண்ணீர் தானம்மா மற்றவர்களை கேட்டுப் பாப்பம் - SUNDHAL - 02-05-2006 ஆஆஆ ....விட்டால் விளக்குமாறும் எடுத்து கொடுப்பிங்க போல இருக்கே அங்கிள்..?
- Vishnu - 02-06-2006 கவிதை இணைப்புக்கு நன்றி சுண்டல்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்னப்பா எதும் மாட்டிவிட்டுதோ?? :wink: - SUNDHAL - 02-07-2006 Vishnu Wrote:கவிதை இணைப்புக்கு நன்றி சுண்டல்.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> என்னப்பா எதும் மாட்டிவிட்டுதோ?? :wink: என்ன இப்படி கேட்டா? நீங்க தானே சொன்னிங்க பாத்து தாறன் வெயிட் பன்ன சொல்லி சோ ஸட்டில் வெயிட்டிங்ப்பா.. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :oops: :oops: - starvijay - 02-07-2006 கவிதை இணைப்புக்கு நன்றி |