Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பிடித்த சில கவிகள்...
#5
<b>ரயில்</b>

என் கையசைப்பு
உணர்ச்சியில்லாமல்
ஓடிக்கொண்டிருக்கும்
அந்த மனிதர்களுக்கானதல்ல;
என்னைக் கடக்கும்போதெல்லாம்
மறக்காமல்
உற்சாகமாய் கூவிச் செல்லும்
அந்த இரயிலுக்கானது!


<b>பிரபஞ்ச ரகசியங்கள்</b>


உன் தாயை சந்திக்கையில்
கேட்கவென பிரபஞ்சம் பற்றிய
ஒராயிரம் சந்தேகங்களைத்
தொகுத்து வைத்திருக்கிறேன்!
பின்னே,
நிலவைப் பிரசவித்தவளிடம்தானே
கேட்க வேண்டும்
பிரபஞ்ச இரகசியங்களை!


<b>எது கவிதை</b>

உந்தும் உணர்வோடு
ஆழ் கடல் மூழ்கி
அடிமடி தொட்டு
அகள்விழிச் சல்லடையால்
அலசிப் பிடிக்க
அழகு முத்துக்களாய்க்
கவிதைகள்

மெல்லிய காற்றாய்
கடல் மேனி படர்ந்து
அலையலையாய் ஊர்ந்து
முகக்கரை மோதி முத்தமிட
நுரைப் பூக்களாய்க்
கவிதைகள்

அதிகாலைப் பொழுதில்
விலகியும்
விலகா உறக்கத்தில்
இதழ் விரிக்கும்
தளிர் உணர்வுகளில்
திட்டுத் திட்டாய்க்
கவிதைகள்

உறக்கம் கொண்ட கண்களில்
உறங்காத மன அலைச்சலில்
உடனிருக்கும் அத்தனையும்
உறங்கிப்போன இருள் பொழுதில்
மூச்சுவிட்டு மூச்சுவிட்டு அழைக்கும்
தத்துவார்த்தக் கவிதைகள்

கோபம் வரும்
கூடவே கவிதை வரும்
காதல் வரும்
முந்திக்கொண்டு கவிதை வரும்
சோகம் வரும்
அதைச் சொல்லவும்
கவிதை வரும்

எங்கில்லை கவிதை
எப்போதில்லை கவிதை
எதைத்தான் தழுவவில்லை
கவிதை

கவிதை எதுவெனக் காண
விழிசொடுக்கி
ஞானக்குதிரை விரட்டி
அண்டவெளி பறந்தால்
இதயத்தில் பூக்கிறது
எது கவிதை என்று ஒரு
கவிதை


நன்றி தமிழ் ஓவியம் <!--emo&Tongue--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
..
....
..!
Reply


Messages In This Thread
[No subject] - by Vishnu - 12-04-2005, 09:25 PM
[No subject] - by Jenany - 12-05-2005, 10:41 AM
[No subject] - by RaMa - 12-07-2005, 08:24 AM
[No subject] - by ப்ரியசகி - 02-04-2006, 05:24 PM
[No subject] - by Rasikai - 02-04-2006, 10:30 PM
[No subject] - by RaMa - 02-05-2006, 06:06 AM
[No subject] - by starvijay - 02-07-2006, 04:29 AM
[No subject] - by ப்ரியசகி - 02-19-2006, 06:57 PM
[No subject] - by Eelam Angel - 02-19-2006, 11:59 PM
[No subject] - by RaMa - 02-20-2006, 06:18 AM
[No subject] - by சந்தியா - 02-22-2006, 10:52 AM
[No subject] - by Unnavan - 02-23-2006, 06:33 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)