02-04-2006, 01:50 PM
<span style='color:darkred'><b>வெலிக்கந்தை தேடுதல் அரசின் பம்மாத்து </b>
தேசவிரோத ஆயுதக்கும்பலால் கடத்தப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களை விடுவிப்பது தொடர்பான நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசு கண்துடைப்பிற்கு செயற்படுவதாகவே கருதவேண்டியுள்ளது.
சிறிலங்கா அரசு வியாழக்கிழமை கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக வீடுவீடாக விசேட பொலிஸ் குழு தேடுதல் நடத்தியதாகவும் தொடர்ந்து அந்தப் பணி நடைபெற்று வருவதாகவும் சிறிலங்கா அரசு கூறுகின்றது. இது சிறிலங்கா அரசு சர்வதேச சமூகத்துக்கு காட்டும் பம்மாத்து வேலை என்றே கருதமுடியும்.
ஏனெனில் வெலிக்கந்தை பகுதியிலுள்ள தீவுச்சேனைப்பகுதியில் படைப்புலனாய்வு பிரிவினர் ஒட்டுக் குழுக்களை வைத்துள்ளனர். இது கண்காணிப்பு குழுவிலிருந்து ஒட்டுப்படைகளில் இருந்து தப்பி வந்தவர்கள் பல தடவை இந்த விடயங்களை அம்பலப்படுத்தியுள்ளனர். அவ்வாறான நிலையில் சிங்களப் பொலிசார் கடத்தப்பட்டவர்களை அல்லது கடத்தல் காரர்களை பொதுமக்கள் வீடுகளில் தேடுதல் நடத்துவது என்பது முட்டாள் தனம். உண்மையில் வெலிக்கந்தை சோதனைச் சாவடிக்கு அருகில் வைத்து இவர்கள் கடத்தப்பட்டனர்.
வெலிக்கந்தைப்பகுதி சிறிலங்காப் படையினரின் அதியுயர் பாதுகாப்பு வலயம். இந்தப் பாதுகாப்புமிக்க வலயத்துக்குள் படையினருக்கோ அல்லது பொலிசாருக்கோ கண்ணில் மண்ணை தூவிவிட்டு ஒரு ஆயுதக் குழு வெள்ளை வானில் சுதந்திரமாக நடமாடி பட்டப் பகலில் பிரதான வீதியில் வைத்து கடத்திச் செல்வது என்பது சாதாரண விடயமல்ல.
எனவே தேடுதல் விசாரணை என்பவற்றுக்கு ஜனாதிபதி மகிந்தர் உத்தரவிட்டுள்ளார். விசாரணை குழுவை நியமித்துள்ளார் என்று கூறுவது எல்லாம் வெறும் கண்துடைப்பு. உண்மையில் குற்றவாளிகள், கடத்தல்காரர்கள் தீவுச்சேனையில் படைமுகாமிற்கு அருகில் உள்ளனர்.
அவர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கடத்தப்பட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழகப்பணியாளர்களை விடுவிப்பதுடன் கடத்தலில் ஈடுபட்டவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசின் கடமையாகும்.
ஆனால் அந்த விடயத்தை சிறிலங்கா அரசு இன்று தவறவிட்டுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்கள் கடத்தப்பட்ட விவகாரம் சர்வதேசத்தின் கவனத்தை பதியவைத்துள்ளது. போர் நிறுத்தத்தைப் பலப்படுத்தி சமாதானச் சூழலை மீளவும் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தையை ஜெனீவாவில் ஆரம்பிப்பதற்கான ஒரு சூழல் ஏற்பட்டுள்ள நிலையில் இவ்வாறு தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தமிழ் மக்களிடையே மேலும் நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சொல்ஹெய்முடனான சந்திப்பின் போது தேசியத் தலைவர் அவர்கள் வடக்குக் கிழக்கில் இயல்பு நிலை ஏற்பட வேண்டுமென்ற விடயத்தில் அதிக கவனம் செலுத்தி அவ்வாறான சூழலை உருவாக்குங்கள் என வலியுறுத்தியிருந்தார்.
ஆனால் வடமுனையில் போராளி கபிலன் வீரச்சாவடைந்தது. தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணிப்பாளர்கள் கடத்தப்பட்ட சம்பவம் எல்லாம் சமாதானச் சூழலை வேகமாகச் சிதைத்துள்ளது.
இன்று சிங்கள தேசம் தமது சுதந்திர தினத்தை அகமகிழ்வுடன் கொண்டாடுகின்றது. இலங்கைத் தீவுமுழுவதும் சுதந்திரம் கிடைத்த நாளாகச் சிங்கள ஆட்சியாளர்கள் வெளிக்காட்ட முனைந்தாலும், அன்னிய ஏகாதிபத்திய சக்திகளின் கைகளிலிருந்த ஆட்சி, அதிகாரம் சிங்களத் தலைமைகளின் கைகளுக்கு மாற்றப்பட்டதே தவீர இன்றும் தமிழினம் விடுதலையை அடைந்து விடவில்லை.
அதற்கான விடுதலைப் போராட்டம் தேசிய விடுதலையை நோக்கி எழுச்சி அடைந்து தமிழ் மக்களின் போராட்டத்தின் யதார்த்தம் சர்வதேச ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு சூழல் இன்று ஏற்பட்டிருக்கின்றது.
இந்தச் சூழலில் எதிர்வரும் ஜெனீவாப் பேச்சுக்கள் சமாதானத்தைக் கொண்டு வருமா? என்ற சந்தேகத்தில் தமிழ் மக்கள் உள்ள நிலையில் வெலிக்கந்தைக் கடத்தல் விவகாரம் இன்னும் வேதனையைத் தீவிரப்படு த்தியுள்ளது.
எனவே அரசு தமது சுதந்திர தின அகமகிழ்வில் மூழ்கியிருப்பதையும், பம்மாத்து நடவடிக்கைகளில் ஈடுபடுவதையும் விடுத்து உடனடியாகக் கடத்தப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். </span>
<i><b>நன்றி- ஈழநாதம் மட்டக்களப்பு பதிப்பு-
ஆசிரியர் தலையங்கம்(04/02/06)</b></i>
"
"
"

