Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
டென்மார்க் அலைகள் மூவீஸ் பூக்கள் !
#3
Suren Wrote:தகவலுக்கு நன்றி மோகன். ஆனால் இந்த புலம் சார்ந்த படங்கள் எங்கே கிடைக்கும்? அவர்கள் அனைத்து இடங்களிலும் திரையிடுவதில்லையே .... அதற்கு பொருளாதார மற்றும் ரசிகர் ஆதரவு போதாது என்பது உண்மை. எனக்கு இதுவரை ஒரே ஒரு புலம் சார்ந்த படம் பார்க்கும் வாய்ப்பு கிடைதது .... அது அஜிவனின் எச்சில் போர்வை .... யாழ் இணையத்திலிருந்து பெற்று கொண்டேன். புதிய முயற்சியாக இருந்தது .... அவருக்கு எனது பாராட்டுக்கள்.

நன்றிகள் சுரேன். எமது படைப்புகள் பெரும்பாலும் படைக்கப்பட்டவர்கள் வீடுகளிலேயே முடக்கப்பட்டு விடுகின்றன. பெரும்பாலாக முன்னேறிய சினிமாவை நோக்கி நகர்பவர்கள் ஒரு காலத்துக்கு பின்னர் தமது படைப்புகள் வெளியில் உள்ள பலருக்கு சென்று சேர வேண்டும் என்ற பரந்த நோக்கத்தோடு அவற்றை வெளியிடுவதுண்டு.

ஆனால் இதற்கு மாறானவர்கள் தமது படைப்புகளை அவர்களது வீடுகளில் அடைத்து வைத்திருப்பது ஏன் என்றுதான் தெரியவில்லை?

மேலேயுள்ளது போல் தமது படைப்புகளை ஒரு சில கெசட்களிலாவது வெளியிட வேண்டும் என்ற மனசு கொஞ்சமாவது இல்லாவிடில் எமது படைப்புகளின் வளர்ச்சி தொடர் தாமதமாகவே இருக்கும் அல்லது காணாமல் போய்விடும்.

இலங்கையில் உருவான தமிழ் சினிமாக்களின் பிரதிகள் 1983ம் ஆண்டு இனக்கலவரத்தின் போது மூலப் பிரதிகளோடு சினிமா கலையகங்களுக்குள் இரையாகியதால் ஒன்று இரண்டைத் தவிர அனைத்து படைப்புகளும் அழிந்து போயின. அவற்றை அவர்கள் குறைந்த பட்சம் ஒளி நாடாக்களிலாவது வெளியிட்டிருந்தால் யாரிடமாவது ஒரு ஆவணத்துக்காகவாவது பயன்படுத்தியிருக்கலாம்.(அந்த இருக்கும் ஒன்றிரண்டு படங்களின் ஒளி நாடாக்கள் கூட வெளியே கொடுக்க முடியாதவர்கள் கரங்களுக்குள் முடங்கிக் கிடக்கிறது கூட வருத்தம்தான்.)

அந்த நிலையை புலம் பெயர் கலைஞர்கள் மாற்றுவது மிக அவசியமானதும் தேவையானதுமாகும்.

யாழ் மற்றும் சுரதா இணையதள உதவியுடன் மற்றுமொரு குறும் படம் நிழல் யுத்தம் பாருங்கள்.
http://www.suratha.com/shadow_fight.asf
Reply


Messages In This Thread
[No subject] - by Guest - 01-28-2004, 07:04 AM
[No subject] - by AJeevan - 01-28-2004, 04:50 PM
[No subject] - by Guest - 01-28-2004, 05:20 PM
[No subject] - by Mathivathanan - 01-28-2004, 05:30 PM
[No subject] - by Guest - 01-28-2004, 05:37 PM
[No subject] - by Mathivathanan - 01-28-2004, 05:44 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)