02-04-2006, 12:30 AM
<b>பாகம் - 7
மாதங்கிக்கு இன்றைக்கு வீட்டு வேலைகள் எல்லாம் செய்து முடிந்து விட்டது. குழந்தை அரவிந்தும் நித்திரையாக இருக்கிறான். ஏதாவது படம் போட்டுப் பார்க்கலாம் என்றால், எல்லாம் பார்த்த படமாயிருக்கிறது. சரி, இந்த சோஃபாவில கொஞ்சம் ஓய்வாக கண்ணை மூடிக் கொண்டு இருக்கலாம் என்று எண்ணி அப்படியே சாய்ந்து உட்கார்ந்த மாதங்கி கண்களை மூடிக் கொண்டாள். சாருவுக்கு ஒருவரை திருமணம் பேசி முடித்திருப்பதாக அப்பா நேற்று போனில் கதைக்கும்போது சொன்னார். அவர் தங்களுக்கு நன்கு தெரிந்தவர்தான் என்று அப்பா கூறியது அவளுக்கு நிம்மதியாக இருந்தது. அவளுக்கு தனது வாழ்வில் நடந்த விஷயங்கள் எல்லாம் ஒரு படமாக எண்ணத்தில் ஓடத் தொடங்கியது..................
அப்போது மாதங்கிக்கு பன்னிரண்டு வயது. பாடசாலைக்குப் போகும்போதும் வரும்போதும் பயமறியாத இளங்கன்றுபோல் துள்ளிக்குதித்தபடியே செல்வாள். கண்ணில் படுவோர் எல்லோருடனும் ஏதாவது பேசிக்கொண்டே செல்வாள். எதுவும் பேசாது நிற்பவர்களைக்கூட அண்ணா, அக்கா, மாமா, தம்பி என்று வாய்க்குவந்த முறைகளைக்கூறி அழைத்து ஏதாவது கதைத்துக்கொண்டே செல்வாள்.
"சரியான வாயாடி" என்று மாதங்கியைக் காண்பவர்கள் கூறுவார்கள்.
ஆனால் அவள் யாரையும் பொருட்படுத்தமாட்டாள். அப்படியானதொரு வேளையில்தான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. மாதங்கி ஓவெனக் கதறி அழுதபடி தலையணைக்குள் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி, விம்மி அழுதாள்.
அவளால் தான் ஒரு பையனிடம் தோற்றதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.............
தொடருங்கள்</b>

<b> .. .. !!</b>