01-28-2004, 01:10 AM
இந்தியாவுடன் இலங்கை செய்து கொள்ளும்
பாதுகாப்பு ஒப்பந்தத்துக்கு புலிகள் கடும் எதிர்ப்பு!.
புதுடில்லிக்கு மதியுரைஞர் பாலசிங்கம் அறிவிப்பு
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உத் தேசப் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆழ்ந்த கவலையும் எதிர்ப்பும் வெளி யிட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம் தற்போதைய சமாதான முயற்சிகளில் மிக மோசமான எதிர்விளைவுகளை ஏற் படுத்தும் என்றும் புலிகள் தெரிவித்திருக்கின்றனர். உத் தேசப் பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பான தமது இயக் கத்தின் ஆட்சேபத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கம், நோர்வே ஊடாக இந்திய அரசுக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றார்.
உத்தேச ஒப்பந்தம் அதிகாரச் சமநிலை விடயத்தில் புலிகளுக்குப் பாதகமான விளைவு ஏற்படுத்தும், இராணுவச் சமநிலையில் ஏற்படும் குழப்பம், இலங்கை சமாதான முயற்சி களுக்கு அடிப்படையான யுத்த நிறுத்த உடன்படிக்கையையே குழப்பி விடும்|| - என்று மதியுரைஞர் பால சிங்கம் நோர்வேத் தரப்புக்குச் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.
இந்தியாவுடனான இராணுவ ஒப்பந்தம், சிங்கள அரசியல் தலை மைத்துவத்தை தமிழர் தொடர்பாகக் கடுமையான - யுத்த முனைப்புடைய - போக்கைக் கடைப்பிடிக்கத் து}ண் டும். அது ஏற்கனவே முரண்பட்டிருக் கும் சமூகங்களை ஆற்றுப்படுத்தவும் அவற்றிடையே சமாதானத்தை வளர்க் கவும், மிக முக்கிய அடிப்படையாக விளங்கும் பரஸ்பர நம்பிக்கையை அடியோடு தகர்த்து விடும்|| - என்றும் விளக்குகின்றார்; பாலசிங்கம்.
கொழும்பில் ஏற்பட்டுள்ள அரசி யல் நெருக்கடியால் சமாதான நட வடிக்கைகளுக்கு அபாயம் நேர்ந்துள்ள இந்த இக்கட்டான சமயத்தில், இரா ணுவ சம்பந்தப்பட்ட பாதுகாப்பு ஒப் பந்தம் ஒன்றை அவசர அவசரமாக மேற்கொள்ள வேண்டிய தந்திரோபா யத் தேவை ஏதும் இந்திய அரசுக்கு உருவாகவில்லை|| - என்றும் பால சிங்கம் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய ஒப்பந்தம் தமிழர் களின் நலனுக்குத் தீங்கு விளைவிப் பதாகவும் அவர்களின் பேரம் பேசும் வலுவைப் பாதிப்பதாகவும் அமையும்|| எனவும் நோர்வே அனுசரணையாளர் ஊடாக இந்தியாவுக்கு அவர் தெரி யப்படுத்தியிருக்கின்றார்.
புலிகளின் இராணு வலிமையைச் சமாளிப்பதற்கு இத்தகைய இராணுவ ஒப்பந்தம் பயனுள்ள ஒரு பொறி என்று பிரசாரப்படுத்துவதன் மூலம் அரசி யல் லாபம் தேடும் விரக்தியின் முனைப் பில் இலங்கையின் ஜனாதிபதி சந்தி ரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக் கிரமசிங்க ஆகிய இருவருமே உள் ளனர் என்றும் பாலசிங்கம் கூறினார்.
இந்த உத்தேச ஒப்பந்தம் குறித்து புலிகளின் அரசியல்துறைப் பொறுப் பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனும் ஏற்கனவே கவலை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தேச ஒப்பந்தம் தமிழரை அச்சுறுத்த முன்வைக்கப்படும் ஒரு பூச்சாண்டி. அது இந்த நாட்டின் இனப் புூசலில் வெளிநாட்டு சக்திகளை ஈடு படுத்தும் வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பின்னும் சர்வதேச வலைப்பின்னலின் ஓர் அங்கம்|| - என்று கடந்த 14ஆம் திகதி ஷஉதயன்| பத் திரிகைக்கு அளித்த விசேட செவ்வி யில் தமிழ்செல்வன் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இனப்புூசலுக்குள் பிற நாடு களை இழுப்பது நீண்டு செல்லும் இந்தப் பிரச்சினையை மேலும் சிக்க லாக்கும்|| - என்று அவர் தெரிவித்தார்