Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழர் புனர் வாழ்வுக் கழக பணியாளர்கள் கடத்தல்
#14
கடத்தப்பட்ட 5 பணியாளரும் பாதுகாப்புடன் திரும்புவதை உறுதிப்படுத்துமாறு அரசாங்கம், சர்வதேச சமூகத்தை கோருகிறது தமிழர் புனர்வாழ்வுக் கழகம்

ஐவரின் இறுதிக்கிரியைக்கும் ஆயத்தப்படுத்துமாறு விடுவித்தோரிடம் கடத்தல்காரர் தமிழில் தெரிவிப்பு

வெலிக்கந்தை பகுதியில் வைத்து திங்கட்கிழமை இனம் தெரியாத ஆயுத பாணிகளால் கடத்தப்பட்ட தமது ஐந்து அலுவலக பணியாளர்களும் பாதுகாப்பாக திரும்பி வருவதை உறுதி செய்யுமாறு சர்வதேச சமூகத்தையும், இலங்கை அரசாங்கத்தையும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.


வெலிக்கந்தை பகுதியில் வைத்து தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்கள் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து விளக்கமளிக்கும் செய்தியா ளர் மாநாடு கொழும்பிலுள்ள அதன் அலுவல கத்தில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது, தமிழர் புனர்வாழ்வுக் கழக மூத்த ஆலோசகர் கே.பாலேந்திரா, திட்ட முகாமையாளர் அர்ஜு னன் எதிர்வீரசிங்கம், ஹெலொய்ஸ் கணேஸ் ரூபன் ஆகியோர் விளக்கமளிப்பதை காணலாம்.

பெண் கணக்காளர் ஒருவர் உட்பட ஐவர் கடத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து கொழும்பில் செவ்வாய்க்கிழமை தமிழர் புனர்வாழ்வுக் கழகம் நடத்திய செய்தியாளர் மாநாட்டிலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தைச் சேர்ந்த அர்ஜூனன் எதிர்வீரசிங்கம், ஹெலொய்ஸ், கணேஸ் ரூபன் உட்பட பலர் கலந்து கொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது;

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்களப்பு அலுவலகத்திலிருந்து வவுனியாவிற்கு கணக்கீடு தொடர்பான செயலமர்விற்காக சென்று கொண்டிருந்த தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் ஐந்து அலுவலகப் பணியாளர்கள் பொலநறுவையின் வெலிக்கந்தை பகுதியில் வைத்து இனந்தெரியாத ஆயுதபாணிகளால் கடத்தப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

திங்கட்கிழமை இலங்கை இராணுவ காவலரணிற்கு அருகில் இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து 15 தமிழர் புனர்வாழ்வுக் கழக பணியாளர்கள் பயணத்தை மேற்கொண்டிருந்தனர்.

தமிழர் புனர்வாழ்வுக் கழக வாகனம், வெலிக்கந்தை இராணுவ சோதனைச் சாவடியில் பதிவு செய்யப்பட்ட பின்னர் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருந்த வேளை வானை பின்தொடர்ந்த வெள்ளை வானொன்று திடீரென முன்னால் வந்து தமிழர் புனர்வாழ்வுக் கழக வாகனத்தை இடைமறித்து நிறுத்தியது.

மட்டக்களப்பிலிருந்து பொலநறுவைக்கு செல்லும் ஏ௧1 வீதியில் இலங்கை இராணுவ சோதனை சாவடியிலிருந்து 100 மீற்றர் தூரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் மட்டக்களப்பு அலுவலக கணக்காளர் தனுஷ்கோடி பிரேமினியும் (பல்கலைக்கழக மாணவி) மேலும் நான்கு கணக்காளர்களும் பலவந்தமாக வாகனத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மட்டக்களப்பைச் சேர்ந்த சண்முகநாதன் சுவேந்திரன், தம்பிராஜா வசந்தராஜன் (சந்திவெளி முறக்கொட்டாஞ்சேனை), பழுகாமம் வன்னி நகரைச் சேர்ந்த ரவீந்திரன் அருள் நேசராசா, சுதேஸ்கரன் ஆகியவர்களே கடத்தப்பட்ட ஏனையவர்களாவர்.

தமிழர் புனர்வாழ்வுக் கழக வாகனத்தில் இருந்த ஏனைய பத்து பேரும் சமீபத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம், இலங்கை யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் உட்பட பலரை தொடர்பு கொண்டு இந்த சம்பவம் குறித்து அறிவித்துள்ளதுடன் தனது பணியாளர்கள் எங்கிருக்கின்றார்கள். அவர்களது பாதுகாப்பு குறித்து அறிய முயன்று வருகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சமாதான முயற்சிகளில் தொடர்பு பட்ட பலருடனும் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் தொடர்பு கொண்டுள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஏனைய, சிவில் அமைப்புகளுக்கும் இவர்கள் பாதுகாப்பாக திரும்பி வருவதை உறுதி செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றது.

குறிப்பிட்ட தமிழர் புனர்வாழ்வுக் கழக அலுவலக பணியாளர்கள் கடல்கோளிற்கு பிந்திய, யுத்தத்திற்கு பிந்திய மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள். அநாதைக் குழந்தைகள் தொடர்பான பணிகளில் ஈடுபட்டவர்கள்.

குறிப்பிட்ட சம்பவம் இடம்பெற்ற வேளை அந்த இடத்திலிருந்து விடுதலை செய்யப்பட்ட ஒருவர் எமக்கு முழுமையான விவரங்களை அளித்துள்ளார் எனத் தெரிவித்தனர்.

இதேவேளை, குறிப்பிட்ட சம்பவத்தின் போது ஆயுதபாணிகளால் விடுவிக்கப்பட்ட தன்னை இனம்காட்ட விரும்பாத பெண்மணியொருவர் தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது;

தமிழர் புனர்வாழ்வுக் கழக வாகனமொன்று மட்டக்களப்பிலிருந்து வவுனியாவிற்கு 14 பேருடன் பயணித்துக் கொண்டிருந்தது.

வெலிக்கந்தை சோதனைச் சாவடியில் வாகனம் பதிவு செய்யப்பட்ட பின்னர் 100 மீற்றர் தூரம் சென்றதும் சற்றுத் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை வான் தமிழர் புனர்வாழ்வுக் கழக வாகனத்தை பின் தொடர ஆரம்பித்தது. பின்னர் எமது வாகனத்தை இடைமறித்தது.

5 பேர் (20 முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள்) வெள்ளை வானிலிருந்து இறங்கி எமது வாகனத்திற்குள் நுழைந்தனர். ஒருவர் வாகனச் சாரதியை வெளியே இழுத்து பின் ஆசனத்தில் இருத்திய பின்னர் அருகிலிருந்த காட்டுப் பகுதியை நோக்கி வாகனத்தை செலுத்தினார்.

வாகனத்திலிருந்த அனைவரினது கண்களும் கைகளும் கட்டப்பட்ட பின்னர் வாகனம் காட்டுப் பகுதியொன்றில் நிறுத்தப்பட்டது, ஆண்கள் அனைவரும் புளியமரமொன்றின் கீழ் இருக்க வைக்கப்பட்டனர்.

பெண்களின் கண்கள் கட்டப்பட்டன. பிரேமினியைத் தவிர, ஏனைய அனைத்து பெண்களும் மீண்டும் வாகனச் சாரதியுடன் வாகனத்திற்குள் இருத்தப்பட்டனர், பிரேமினியும் நான்கு ஆண்களும் மாத்திரம் தடுத்து வைக்கப்பட்டனர்.

வீதிக்கு வாகனம் வந்த வேளை பொலிஸ் வாகனமொன்று இருக்கின்றது என ஒரு கடத்தல்காரர் சத்தமிட்டார். எனினும் மற்றையவர் அதனால் பிரச்சினையில்லை எனக் குறிப்பிட்டார்.

மேலும், விடுவிக்கப்பட்டவர்கள் ஏனைய ஐவருக்கும் இறுதிக் கிரியைகளுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் தமிழ் பேசியதுடன் சாதாரண உடையிலிருந்தனர். இவர்கள் கைத்துப்பாக்கி வைத்திருந்தனர், ஐந்து பேர் கடத்தலில் ஈடுபட்டிருந்த அதேவேளை, வெள்ளை வானில் பலர் இருந்தனர்.
- தினக்குரல்
,
,
Reply


Messages In This Thread
[No subject] - by மேகநாதன் - 01-31-2006, 01:35 AM
[No subject] - by மேகநாதன் - 01-31-2006, 01:54 AM
[No subject] - by மேகநாதன் - 01-31-2006, 02:02 AM
[No subject] - by cannon - 01-31-2006, 10:25 AM
[No subject] - by cannon - 01-31-2006, 10:55 AM
[No subject] - by வினித் - 01-31-2006, 12:07 PM
[No subject] - by மேகநாதன் - 02-01-2006, 08:03 AM
[No subject] - by மேகநாதன் - 02-01-2006, 08:09 AM
[No subject] - by sri - 02-01-2006, 12:41 PM
[No subject] - by மேகநாதன் - 02-02-2006, 02:25 AM
[No subject] - by மேகநாதன் - 02-02-2006, 02:29 AM
[No subject] - by மேகநாதன் - 02-02-2006, 02:30 AM
[No subject] - by Aravinthan - 02-02-2006, 04:47 AM
[No subject] - by வினித் - 02-03-2006, 12:24 AM
[No subject] - by ஜெயதேவன் - 02-03-2006, 01:47 AM
[No subject] - by ஜெயதேவன் - 02-03-2006, 02:00 AM
[No subject] - by மேகநாதன் - 02-04-2006, 03:25 AM
[No subject] - by மேகநாதன் - 02-04-2006, 03:48 AM
[No subject] - by மேகநாதன் - 02-04-2006, 01:50 PM
[No subject] - by மேகநாதன் - 02-06-2006, 09:56 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:38 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:39 AM
[No subject] - by மேகநாதன் - 02-07-2006, 04:54 AM
[No subject] - by மேகநாதன் - 02-08-2006, 05:51 PM
[No subject] - by மேகநாதன் - 02-09-2006, 05:16 AM
[No subject] - by மேகநாதன் - 02-14-2006, 04:15 AM
[No subject] - by MUGATHTHAR - 02-14-2006, 10:23 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)