Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
oh our INDIA ??!!
#31
[b]சந்திரிகா - ரணில் அதிகாரப் போர் நிழல்..............
இந்திய - அமெரிக்க பனிப்போர் நிஜம்.............



இலங்கை அரசியல் சனாதிபதிக்கும்,பிரதமருக்கும் இடையேயான அதிகாரப் போட்டி இலங்கை மீதான இந்திய - அமெரிக்க ஆதிக்கப்போட்டியாக உருவெடுத்துள்ளது போல் தெரிகிறது. பின்னது நிஜயவடிவம் என்றால், முன்னது அதன் நிழல் வடிவம் என்றே கூறும் வகையில் நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன.


இந்து சமுத்திரப் பிராந்தியம் மீதான ஆதிக்கத்தை தம்வசம் வைத்துக்கொள்வதில் இந்தியாவும், அமெரிக்காவும் காட்டும் அக்கறையானது எதிர்காலத்தில் அவர்களது இராணுவ மற்றும் அரசியல் தேவைகளின் அடிப்படையிலான தொன்றாகும்.

அவர்களின் இந்தத் தேவையானது, இரு தரப்புக்கிடையேயான ஒரு ராஜதந்திர யுத்தமாக மாறுமளவிற்கு நிகழ்வுகள் யாவும் இலங்கைப் பிரச்சினையை மையப்படுத்தி நடந்துவருவதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

ரணில் பதவிக்கு வந்த நாள் தொடக்கம் இலங்கை இனப்பிரச்சினைக்கான சமாதானத் தீர்வை முன்னெடுப்பதற்கான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அமெரிக்காவும் அதன் சார்பு நாடுகளும் அரசுடனான தொடர்புகளை நெருக்கமாக்கிக் கொண்டதையடுத்து, இலங்கை மீதான இந்தியாவின் ஆதிக்க ஆளுமைக்கு நெருக்கடி ஏற்பட அரம்பித்தது.

இனப்பிரச்சினைக்கான சர்வதேச அனுசரனையுடனான பேச்சுவார்த்தை நீண்ட காலம் தொடர்வதற்கு சாத்தியம் இருக்காது எனவும், விடுதலைப்புலிகள் அதனை எப்படியாவது குழப்பி மீண்டும் போர் நிலையொன்றைத் தோற்றுவித்து விடுவார்கள் என்ற தப்புக்கணக்கை இந்தியா போட்டதன் காரணமாக பேச்சுவார்த்தைகள் ஆரம்பம் குறித்து அக்கறை காட்டாது இருந்துவிட்டது.

ஆனால் இந்திய மதிப்பீட்டிற்கு மாறாக, பேச்சுவார்த்தை தொடர்பான விடயங்களின் விடுதலைப்புலிகள் காட்டிய விசுவாசமான ஆர்வம் இந்திய நினைப்புக்கு மாறான நிலைமைகைள தோற்றுவிக்க காரணமாயிற்று.

பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு சர்வதேச hPதியில் கிடைந்து வந்த அபரிமிதமான ஆதரவும், அளித்துவந்த ஊக்கமும், இந்தியா எதிர்பார்க்காத ஒன்றேயாகும். இன்னும் தெளிவாகக் கூறுவதானால் சமாதான முயற்சிகளில் விடுதலைப்புலிகள் காட்டிவந்த விரும்பமும் அவர்கள் காட்டிய பொறுமையும், கையாண்ட ராஜதந்திர hPதியிலான உத்திமுறைகளும் சர்வதேச நாடுகளின் கவனத்தை வன்னிநோக்கி தீர்க்கமாக திருப்பச் செய்தமையானது இந்தியாவால் சகிக்க முடியாத விடயமேயாகும்.

இந்த சர்வதேச சமூகத்தின் நடவடிக்கைகள் பின்புலத்தில் அமெரிக்காவின் வலுவான அறிவுறுத்தலும் நெறிப்படுத்தலும் இருந்துள்ளதை இந்தியா நன்கு அறிந்து கொண்டபோதும், அதனை உடனடியாக ஊடுருவித் தனது ஆளுமையை அதற்குள் ஆழமாகப் பதித்துக்கொள்ள சரியான வாய்ப்புக்கிடைக்காததால் காலம் வரும் வரை பார்த்திருந்தது என்றால் மிகையாகாது.

இதேவேளை அமெரிக்காவின் அணுகுமுறையானது இந்தியாவை புறந்தள்ளுவதாகவோ, இனப்பிரச்சினை தீர்வு விவகாரத்தில் இந்தியாவுக்கான பங்கு நிராகரிப்பதாகவோ வெளிப்படையாகக் காட்டிக்கொள்ளவில்லை. இந்தியாவை சமாதான நடவடிக்கைகளுடன் ஒன்றினைத்துச் செல்வது போன்று தோற்றம் காட்டும் உத்திமுறைகளைக் கையாண்டதால், இந்தியாவாலும் எதுவுமே உடனடியாகச் செய்ய முடியாது போயிற்று. எனினும் நிலைமைகளின் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்துக்கொண்டே இருந்ததுடன் தனது நியாயமான தலையீடு ஒன்றை மேற்கொள்வதற்கான சூழலை உருவாக்கும் மறைமுகச் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுக் கொண்டேயிருந்தது.

தனது இந்த மூலோபாயத்தை செயற்படுத்த பிரதமருக்கு எதிரான அதிகார மிக்க சனாதிபதியை இந்தியா பயன்படுத்த முயன்ற அதேவேளை, ரணிலுக்கும் அவர் முன்னெடுக்கம் சமாதான முயற்சிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தும் தனது ஈராண்டு கால வேட்கையைத் தணித்துக்கொள்ள சமாதானத்தை நகர்த்தி முன்னேற்ற ஆதரவு பலமாக இருக்கும் அமெரிக்க ஆதரவு சர்வதேச சமூகத்தை விரும்பாத இந்தியாவை தனது இலக்கினை எட்ட சந்திரிகா பயன்படுத்த முயன்றதும் தெரிந்த விடயங்களேயாகும்.

இந்த நடவடிக்கைக்காக சந்திரிகாவால் தேர்ந்தெடுக்க்பபட்ட ராஜதந்திர வேறு யாருமல்ல லக்ஸ்மன் கதிர்காமரே தான்.

சந்திரிகாவின் அதிகார அரசியல் நடவடிக்கைகளில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் சமாதான முன்னேடுப்புகளில் இருந்து ரணில் விலகுவதாக வெளிவந்த அறிவிப்பு சமாதான முன்னெடுப்புக்களை சந்திரிகாவே பொறுப்பேற்கவேண்டும் என்ற ரணிலின் கோரிக்கை அதிகாரபலம் கொண்ட அரசுடன்தான் இனிப்பேச்சுக்களைத் தொடரமுடியும் என்ற விடுதலைப்புலிகளின் அறிவிப்பு ஆகியன சிறிலங்காவின் பிரச்சினைகளுள் சந்திரிகாவை ஊடுருவல் ஊடகமாகப் பயன்படுத்தி உள்நுழைய இந்தியாவுக்கு போதுமான காரணிகளாகிவிட்டது.

சந்திரிகா அரசியல் நெருக்கடிகளுக்கு தீர்வுகாண பிரதமர் ரணிலுடன் விரைவாக இணக்கத்திற்கு வருமாறு விடுக்கப்பட்ட அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு சந்திரிகா கொஞ்சமேனும் அசையவில்லை.

இதற்கு அவர் வசமிருந்த நிறைவேற்று அதிகாரபலமும், இந்தியாவின் வலுவான ஆதரவுப் பின்னணியும்தான் காரணம் எனலாம். இப்போது இந்தியத் தலையீட்டுக்கான சமாதான சூழல் ஒன்றை சந்திரிகா உருவாக்கிவிட்டுள்ளார் என்றே கூற வேண்டும்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிக்கு உடனடியாகத் தீர்வுகாண்பதற்குரிய வழிவகைகளை ஆராய்வதற்கென ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளும் ஏனைய சில ஜரோப்பிய நாடுகளும் ராஜதந்திரிகள் அடங்கிய குழுக்களை அனுப்பமுயன்று வரும் இவ்வேளையில், அதற்கு முன்னர், இந்த அமெரிக்கச் சார்பு நாடுகளின் முயற்சிகளுக்கு ஆப்பு வைக்கும் நடவடிக்கையாக சனாதிபதியும் பிரதமரையும் ஒற்றுமைப்படுத்தும் முயற்சிகளில் இந்தியா தலைப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இது இந்தியாவின் மற்றொரு ஊடுருவல் தந்திரோபாயமாகும். இதன் மூலம் இத்தகைய முயற்சியை ஏற்கெனவே வேறுவேறு வழிமுறைகளில் ஆரம்பித்துவிட்டுள்ள ஜப்பான், அமெரிக்கா மற்றும் நோர்வே போன்ற நாடுகள் தமது முயற்சிகளைக் கைவிடவோ ஒதுங்கிப் போகவோ ஒத்திப்போடவோ நேரிடலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சந்திரிகாவையும் ரணிலையும் ஒற்றுமைப்படுத்துவதென்பது சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்காக இந்தியா எடுக்கும் ஆத்மார்த்தமான முயற்சியாக நிச்சயம் இருக்காது.

இதன் பிரதான நோக்கம் இலங்கை மீதான தனது ஆதிக்க வலுவை இந்தியா நிரூபிக்க முயலுவதாகவும், சமாதான முன்னெடுப்புகளை இந்தியாவின் பிராந்திய நலன்களை பாதுகாப்பதற்கான முறையில் நகர்த்துவதாகவுமே இருக்கும். நிச்சயமாக இந்த முயற்சி சந்திரிகாவின் அரசியல் நலன்களை பாதுகாப்பதற்காகவும் அமையும் என்பதில் ஜயமில்லை.

இதில் இந்தியாவின் சொல்லை சந்திரிகா கேட்பார். ஆனால் ரணில் அதற்கெல்லாம் உடன்படுவாரா என்பது விடைகாண முடியாத கேள்வியாகும். ரணில் இந்திய அணுகுமுறைக்கு ஒப்புதல் அளித்தால் அமெரிக்கா மற்றும் ஜரோப்பிய நாடுகளின் ஆதரவை இப்போதிருக்கும் அளவுக்கு அவரால் பெறமுடியாமல் போகும்.

ரணிலின் அரசியல் எதிர் காலத்திற்கு இது பாதிப்பாகவும் அமையும். எனவே ரணிலின் முடிவு இந்த முயற்சிகளில் இந்தியாவுக்கு எதிராக அமையாவிட்டாலும், இந்தியாவின் முழுமையான அபிலாசைகளை நிறைவேற்ற உதவியாக அமையப்போவதில்லை என்பது தெளிவு.

எந்த வகையிலும் சந்திரிகா ரணில் ஒன்றுமையென்பது சாத்தியமானதாக இருக்காது. இருந்தாலும் நிரந்தரமானதாக அமையாது. இலங்கை மீதான தமது ஆதிக்கவலுவை இந்தியா ஊடுருவி சிதைப்பதை அமெரிக்காவும் விட்டுக்கொடுக்காது. ஆகவே இலங்கையில் சமாதான முயற்சிகள் இந்தப்புத்தாண்டிலும் இழுபறி நிலையில் தொடரும் சாத்தியமே உண்டு.

இந்த நிலையில் விடுதலைப் புலிகள் மட்டும் சமாதானம் மீதான பற்றுறுதியை உறுதிப்படுத்த தொடர்ந்து விட்டுக்கொடுப்புக்களை மேற்கொண்டு பொறுமைகாக்க வேண்டுமென சர்வதேச சமூகம் நினைப்பதில் அர்தமுமிலலை. நியாயமுமில்லை.

நன்றி: தூரன் ஈழநாதம்
Reply


Messages In This Thread
oh our INDIA ??!! - by anpagam - 12-13-2003, 12:27 AM
[No subject] - by anpagam - 12-14-2003, 01:02 PM
[No subject] - by aathipan - 12-20-2003, 04:16 AM
[No subject] - by Kanakkayanaar - 12-20-2003, 09:05 AM
[No subject] - by anpagam - 12-20-2003, 03:40 PM
[No subject] - by anpagam - 12-26-2003, 01:11 PM
[No subject] - by anpagam - 12-26-2003, 01:17 PM
[No subject] - by anpagam - 12-28-2003, 12:24 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 12:28 AM
[No subject] - by pepsi - 12-28-2003, 01:19 AM
[No subject] - by anpagam - 12-28-2003, 02:08 PM
[No subject] - by aathipan - 12-28-2003, 06:32 PM
[No subject] - by anpagam - 01-02-2004, 02:00 PM
[No subject] - by anpagam - 01-04-2004, 12:58 AM
[No subject] - by aathipan - 01-04-2004, 05:02 PM
[No subject] - by anpagam - 01-05-2004, 12:01 AM
[No subject] - by anpagam - 01-05-2004, 12:34 AM
[No subject] - by anpagam - 01-05-2004, 01:00 AM
[No subject] - by anpagam - 01-06-2004, 11:40 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 12:13 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 12:21 PM
[No subject] - by anpagam - 01-12-2004, 01:45 PM
[No subject] - by anpagam - 01-13-2004, 12:40 PM
[No subject] - by anpagam - 01-13-2004, 12:45 PM
[No subject] - by anpagam - 01-19-2004, 02:52 PM
[No subject] - by anpagam - 01-21-2004, 12:16 AM
[No subject] - by anpagam - 01-21-2004, 12:27 AM
[No subject] - by anpagam - 01-25-2004, 01:56 PM
[No subject] - by anpagam - 01-25-2004, 02:03 PM
[No subject] - by anpagam - 01-27-2004, 12:46 PM
[No subject] - by anpagam - 01-27-2004, 12:56 PM
[No subject] - by Mathivathanan - 01-27-2004, 03:23 PM
[No subject] - by anpagam - 01-28-2004, 01:10 AM
[No subject] - by Mathan - 01-29-2004, 12:32 PM
[No subject] - by anpagam - 01-29-2004, 11:57 PM
[No subject] - by Mathivathanan - 01-30-2004, 12:39 AM
[No subject] - by Mathan - 01-30-2004, 01:23 AM
[No subject] - by anpagam - 02-04-2004, 02:47 PM
[No subject] - by anpagam - 02-04-2004, 02:49 PM
[No subject] - by anpagam - 04-27-2004, 11:13 PM
[No subject] - by anpagam - 04-27-2004, 11:27 PM
[No subject] - by Mathan - 04-28-2004, 12:04 AM
[No subject] - by anpagam - 04-28-2004, 12:11 AM
[No subject] - by anpagam - 01-04-2005, 03:15 PM
[No subject] - by anpagam - 01-07-2005, 01:05 AM
[No subject] - by anpagam - 01-15-2005, 03:06 PM
[No subject] - by anpagam - 01-15-2005, 04:58 PM
[No subject] - by anpagam - 01-20-2005, 04:17 PM
[No subject] - by anpagam - 01-21-2005, 03:36 AM
[No subject] - by kavithan - 01-21-2005, 03:58 AM
[No subject] - by anpagam - 01-21-2005, 05:02 PM
[No subject] - by kavithan - 01-21-2005, 11:12 PM
[No subject] - by anpagam - 01-26-2005, 06:27 PM
[No subject] - by shiyam - 01-26-2005, 07:05 PM
[No subject] - by anpagam - 01-28-2005, 04:58 PM
[No subject] - by anpagam - 02-01-2005, 01:38 AM
[No subject] - by paandiyan - 02-01-2005, 12:40 PM
[No subject] - by anpagam - 02-02-2005, 02:26 AM
[No subject] - by paandiyan - 02-02-2005, 04:40 AM
[No subject] - by anpagam - 02-02-2005, 01:50 PM
[No subject] - by anpagam - 02-07-2005, 03:01 PM
[No subject] - by anpagam - 02-07-2005, 11:45 PM
[No subject] - by anpagam - 02-08-2005, 11:57 PM
[No subject] - by anpagam - 02-10-2005, 07:23 PM
[No subject] - by anpagam - 02-16-2005, 01:15 PM
[No subject] - by anpagam - 02-28-2005, 03:28 PM
[No subject] - by anpagam - 03-03-2005, 11:29 PM
[No subject] - by anpagam - 03-12-2005, 02:28 PM
[No subject] - by thivakar - 03-13-2005, 01:06 PM
[No subject] - by anpagam - 03-14-2005, 12:02 PM
[No subject] - by anpagam - 03-15-2005, 02:06 PM
[No subject] - by anpagam - 03-28-2005, 01:51 PM
[No subject] - by shiyam - 03-29-2005, 03:16 AM
[No subject] - by anpagam - 04-01-2005, 12:55 AM
[No subject] - by anpagam - 04-16-2005, 01:20 PM
[No subject] - by anpagam - 04-16-2005, 01:27 PM
[No subject] - by anpagam - 04-22-2005, 11:35 AM
[No subject] - by anpagam - 05-22-2005, 08:19 PM
[No subject] - by Mathan - 05-23-2005, 01:14 AM
[No subject] - by Baarathi - 05-23-2005, 07:32 PM
[No subject] - by Magaathma - 05-23-2005, 07:50 PM
[No subject] - by Baarathi - 05-23-2005, 07:53 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)