02-01-2006, 08:07 AM
<b>எதிர்காலத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்திற்கு இடமளிக்கப்படும் - ஐனாதிபதி</b>
எதிர் காலத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள சமாதானப் பேச்சுவார்த்தைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்திற்கு இடமளிக்கப்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். கௌரவமான சமாதானம் ஒன்றையே எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள அவர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முஸ்லிம் மக்களுக்கு எவ்வித அநீதிகளும் இழைக்கப்படாதவாறு செயற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதேபோன்று எதிர்காலத்திலும் தொடர்ந்து செயலாற்றவுள்ளதாக நேற்றுக் காலை அலரிமாளிகையில் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதிகளை சந்தித்து உரையாடியபோது ஜனாதிபதி தெரிவித்துள்ளார். சிங்கள, தமிழ், முஸ்லிம், பேர்கர் ஆகிய அனைத்து சமூகங்களினது உரிமைகளை பாதுகாப்பதே மஹிந்த சிந்தனையில் முக்கிய குறிக்கோள் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி எந்தவொரு பிரஜைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தாம் செயற்படுவதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாண செயலாளர் அலுவலகத்தின் கிளை அலுவலகத்தை அம்பாறை மாவட்டத்தின் உரிய இடமொன்றில் செயற்படுத்த ஆரம்பக்கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்றைய சந்திப்பின்போது ஜனாதிபதி கூறினார் என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
<i><b>தகவல்- பதிவு.கொம்</b></i>

"
"
"