01-31-2006, 08:02 AM
<b>அரசியல் சந்தர்ப்பவாதத்தை
அமைதி முயற்சிகளில் காட்டாதீர்! </b>
""எமது ஆட்சிக் காலத்தில் நாம் புலிகளுடன் மேற்கொண்ட யுத்தநிறுத்த ஒப்பந்தத்தில் நிறையக் குறைபாடுகள் இருக்கின்றன எனவும், அதனாலேயே யுத்த நிறுத்த மீறல் நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன எனவும், அதை மீள் பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கூறி வந்தவர் அப்போதைய பிரதமரும் இப்போதைய ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ.
""இப்போது அந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் எவ்வித திருத்தமும் செய்யாமலேயே அதை முற்றும் முழுதாக நடைமுறைப்படுத்தும் நோக்கில் புலிகளுடன் பேச்சு நடத்த அவர் முன்வந்திருக்கின்றார். இது அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி என்பதை இந்த நாட்டு மக்களுக்கு நிரூபித்திருக்கின்றது'' இவ்வாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைக் காட்டமாக கூறியிருக்கின்றார் எதிர்க்கட்சித்தலைவரும், ஐ.தே. கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க.
ரணில் கூறுவது முற்றிலும் உண்மை. ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் மஹிந்த ராஜபக்ஷ அப்படித்தான் கூறிவந்தார். அவரோடு கூட்டுச் சேர்ந்திருந்த பௌத்த, சிங்கள மேலாண்மைவாத சக்திகள் அவரை அப்படித்தான் பேசவைத்தன. பேரினவாத நெருப்பை மூட்டி, அந்தச் சூட்டில் சிங்கள வாக்குகளை சுருட்டுவதற்காக மஹிந்த அப்படித்தான் (பௌத்த) சீலம் பேசினார்.
""பிரதமரான நான் கூட இந்த நாட்டின் ஒரு பகுதியான கிளிநொச்சிக்கு வன்னிக்கு போகமுடியாதுள்ளது. அப்படித் தடைவிதிக்கும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளமுடியுமா? நான் ஜனாதிபதியானதும் அந்த ஒப்பந்தத்தை மாற்றியமைப்பேன். அதில் பல குறைபாடுகள் உள்ளன. அவற்றைச் சீர்செய்வோம்.'' என்றெல்லாம் சூளுரைத்தார் அப்போதய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.
இப்போது அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி. முப்படைகளினதும் தளகர்த்தர். அரசின் தலைவர். அமைச்சரவையின் தலைவர். இவ்வளவு அதிகாரம் எல்லாம் இருந்தும் இப்போதும் கூட இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் அவரால் கிளிநொச்சிக்குச் செல்லத்தான் முடியவில்லை. "தலைவர் பிரபாகரனை நேரில் சென்று சந்திக்கவும் தயாராக இருக்கிறேன்' என்று தன்னைச் சந்திக்கும் பிரமுகர்களிடம் எல்லாம் அவரால் கூறத்தான் முடிகின்றதே தவிர, நேரில் அங்கு செல்லமுடியாது.
அப்படி அவர் தம் விருப்பப்படி அங்கு செல்வதை இப்போதும் தடைசெய்கின்ற அதே யுத்த நிறுத்த ஒப்பந்த ஏற்பாடுகளைத்தான் முழு அளவில் செம்மையாக நடைமுறைப்படுத்துவது குறித்து மட்டும் புலிகளுடன் பேசுவதற்காகத் தமது அரசுப் பிரதிநிதிகளை ஜெனிவாவுக்கு அனுப்ப வேண்டியவராக இருக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.
இதுதான் யதார்த்தம்.
தேர்தலில் வெல்லுவதற்காக யதார்த்தம் புரியாமல் அல்லது புரிந்தும் புரியாததுபோல பேசியதால் இப்போது " அரசியல் சந்தர்ப்பவாதி' என்று விமர்சிக்கப்படும் நிலைக்கு ஜனாதிபதி மஹிந்தர் தள்ளப்பட்டிருக்கிறார்.
ஒரு நான்கு மாத காலத்துக்குக்குள் தமது தவறான அரசியல் நிலைப்பாடு காரணமாக அவர் பெற்ற படிப்பினை இது.
அமைதிப் பேச்சுக்களை சமாதான முயற்சிகளை முன்நகர்த்துவதற்கு இந்தப்பட்டறிவு அவருக்கு நல்ல வழியைக் காட்டுவதாக இருக்கவேண்டும்.
தேர்தலில் வெல்வதற்காகப் போட்ட இரட்டை வேடம் அல்லது கைக்கொண்ட அரசியல் சந்தர்ப்பவாதம் அல்லது குள்ளத்தனமான அரசியல் சாணக்கியம் தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற போராட்ட அமைப்பைக் கையாள உதவமாட்டாது என்பதை ஜனாதிபதி மஹிந்தர் புரிந்துகொண்டிருப்பாரோ தெரியவில்லை.
முள்ளை முள்ளால் எடுக்கும் இராஜதந்திரமும், இராணுவத் தந்திரமும் மிக்கவர்கள் புலிகள். எனவே, நேரடியாகப் பேசி, இணக்கம் கண்டு, கண்ட இணக்கத்தைச் செயல்படுத்தி, தீர்வை நோக்கி நகர்வதற்கு ஜனாதிபதி மஹிந்தவும், அவரது அரசும் தயாராக இருக்கவேண்டும். அந்தத் திடசங்கற்பத்துடனும், பற்றுறுதியுடனும்தான் அமைதிப் பேச்சுகளுக்கு அரசுத் தரப்பு வரவேண்டும்.
அதை விடுத்து காலங்காலமாகத் தமிழ்த் தலைமைகளை ஏமாற்றிய முன்னைய சிங்களத் தலைவர்கள் போல சந்தர்ப்பவாத எண்ணத்தோடு பேச்சு மேசைக்குத் தமது பிரதிநிதிகளை ஜனாதிபதி மஹிந்தர் அனுப்பி வைப்பாரேயானால், தமக்குத் தாமே முகத்தில் கரி பூசும் நிலையை அவர் எதிர்கொள்ள வேண்டிநேரிடும்.
தேர்தல் வெற்றிக்காகத் தாம் பூசிய அரசியல் சந்தர்ப்பவாதத்தை பேச்சு மேசைக்கு வரும்போது அழித்துவிட்டு, உண்மை முகத்தோடும் நேர்மைத் திறத்தோடும் அவரது தரப்பு வருமானால் அந்த அமைதி முயற்சிகளினால் ஏதேனும் உருப்படியான பலன் கிட்ட வாய்ப்புண்டு.
<i><b>ஆசிரியர் தலையங்கம்-உதயன் (31/01/2006)</b></i>[/i]

"
"
"