01-25-2004, 02:03 PM
[b]தலைநகரில் தமிழ் அவதானிகளுடன் இந்தியதூதரக அதிகாரிகளின் சந்திப்புகளின் பின்னணி?
இலங்கை இன நெருக்கடிýக்குத் தீர்வைக் காண்பதற்கான சமாதான முயற்சிகளில் தன்னை நுழைப்பதை பல வருடங்களாக தவிர்த்து வந்ததன் விளைவாக இலங்கை விவகாரங்களில் ஏதோ ஒரு வகையில் 'முக்கிய அந்தஸ்தில்" இருந்து ஓரங்கட்டப்பட்டிýருந்த இந்தியா இப்போது, அந்த முயற்சிகளில் சம்பந்தப்படுவதற்கு தன்னாலான பிரயத்தனங்களைச் செய்து வருவதை அவதானிக்கக் கூýடிýயதாக இருக்கிறது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே முன்னர் நடைபெற்று வந்த சமாதானப் பேச்சுவார்த்தைகள், விடுதலைப் புலிகளுக்கு அரசியல் அரங்கில் முக்கியத்துவத்தைக் கொடுத்திருந்ததை இந்தியத் தரப்பினரால் சகித்துக் கொள்ள முடிýயாமல் இருந்தது இரகசியமான ஒரு விடயமேயல்ல.
இடைநிறுத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள், விடுதலைப் புலிகள் கடந்த அக்டோபர் மாத இறுதியில் முன்வைத்த இடைக்காலத் தன்னாட்சி அதிகாரசபை யோசனைகளைப் பரிசீலனை செய்வதற்கான கலந்தாலோசனைகள் என்ற வடிýவில் மீண்டும் ஆரம்பிக்கும் அறிகுறிகள் தென்பட்ட நிலையில், கடந்த நவம்பர் ஆரம்பத்தில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கொண்ட'அமைச்சுக்கள் பறிப்பு அதிரடிý நடவடிýக்கைகள" அந்த எதிர்பார்ப்புகளையும், நம்பிக்கையையும் தகர்த்து விட்டிýருந்தன.
இடைநிறுத்தப்பட்ட சமாதானப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்படாதிருப்பதை உறுதி செய்து கொள்ளும் ஒரு வியூகமாகவே, இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை யோசனைகளை விடுதலைப் புலிகள் சமர்ப்பித்த கையோடு திருமதி குமாரதுங்க 'அதிரடிý அரசியல் நடவடிýக்கைகளை" மேற்கொண்டார் என்றும் இது விடயத்தில் இந்தியாவின் 'ஆசீர்வாதம" அவருக்கு மிகவும் தாராளமாகவே கிடைத்திருந்தது என்றும் அப்போதே பேசப்பட்டது.
சமாதான முயற்சிகளை மீண்டும் முன்னெடுக்க ஆவல் கொண்டிýருப்பதாக ஜனாதிபதி தரப்பு என்னதான் கூýறிக் கொண்டிýருந்தாலும், அந்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதற்கு ஏதுவான சூýழ்நிலைகள் எதுவிதத்திலும் தோன்றுவதைத் தடுக்கும் வகையிலான முனைப்புடனேயே காரியங்கள் கொழும்பில் இடம்பெற்றுக் கொண்டிýருப்பதை அவதானிக்கக் கூýடிýயதாகவிருக்கிறது.
சமாதான முயற்சிகளை ஜனாதிபதியின் }லங்கா சுதந்திரக் கட்சியை விடக் கூýடுதலான அளவுக்கு கர்ணகடூýரமாக எதிர்த்த ஜனதா விமுக்திப் பெரமுனையை ஜனாதிபதியின் கட்சியுடன் 'முடிýச்சுப் போட வைத்த" பின்னணியிலும் சமாதானப் பேச்சுக்கள் மீண்டும் முன்னெடுக்கப்படக் கூýடாதென்பதில் உறுதியுடன் செயற்படும் தரப்பினரே இருக்கின்றனர் என்பது வெளிப்படையானது.
இந்த வியூகங்களின் பின்னணியில் இந்தியத் தரப்பின் நம்பிக்கையூட்டல்களும் கணிசமானளவுக்கு உதவியிருப்பதாக நம்பாமல் இருக்க நியாயம் இல்லை. இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைச் செய்து கொள்வதில் ஜனாதிபதி தரப்பு காட்டும் அதீத ஆர்வமும், அவசரமும் இந்தக் கருத்துக்கே வலுச் சேர்ப்பதாக இருப்பதை நிராகரிக்க எவராலும் முடிýயாது.
இந்நிலையில், கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரகத்தின் சிரேர்;ட அதிகாரிகள் இனநெருக்கடிýத் தீர்வில் அக்கறையுடன் கருத்துகளை வெளிப்படுத்திவரும் தலைநகரில் உள்ள சில தமிழ் அவதானிகளையும் முக்கியஸ்தர்களையும் சந்தித்து கலந்துரையாடிýயிருக்கிறார்கள்.
இச் சந்திப்புகளின் போது அலசப்பட்ட விடயங்களை அடிýப்படையாகக் கொண்டு நோக்குகையில், சமாதான முயற்சிகள் மீண்டும் முன்னெடுக்கப்படக் கூýடிýய சூýழ்நிலை உருவாகுமோ இல்லையோ, இலங்கை இனநெருக்கடிý விவகாரத்தில் இனிமேலும் விலகிநிற்கும் ஒரு தரப்பாக இருப்பதை இந்தியா விரும்பவில்லை என்பதை உணரக்கூýடிýயதாக இருப்பதாக சம்பந்தப்பட்டவர்கள் கூýறுகிறார்கள்.
அதேவேளை, விடுதலைப் புலிகளுடன் கூட ஏதோ ஒரு மட்டத்தில் தொடர்புகளை ஆரம்பிக்க இந்தியத் தரப்புக்கு ஆர்வம் இருப்பதை இந்த உயர்ஸ்தானிகரக அதிகாரிகளின் கருத்துகள் புலப்படுத்துவதாகவும் கூýறப்படுகிறது.
நன்றி: தினக்குரல்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> :wink: 8) :mrgreen: