01-25-2004, 01:56 PM
<b>பாதுகாப்பு உடன்படிýக்கை குறித்து 'பனிப் போர்"</b>
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிýக்கை அடுத்த மாத (பெப்ரவரி) இறுதியில் கைச்சாத்திடப்படவிருப்பதாகத் தெரியவரும் நிலையில், இந்த உடன்படிýக்கை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகா குமாரதுங்க தரப்பிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கும் இடையே 'பனிப் போர்" (ஊழடன றுயச) ஒன்று முன்னெடுப்பதை அவதானிக்கக் கூýடிýயதாக இருக்கிறது.
கடந்த வருடம் அக்டோபரில் புதுடிýல்லிக்கு மேற்கொண்டிýருந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போதே பிரதமர் விக்கிரமசிங்க இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிýக்கை தொடர்பிலான யோசனைகளை முன்வைத்து பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகளையும் முடுக்கிவிட்டிýருந்தார். ஆனால், நவம்பரில் விக்கிரமசிங்க அமெரிக்காவில் இருந்தவேளை பாதுகாப்பு அமைச்சைத் தன் வசமாக்கிக் கொண்டு 'அதிரடிý அரசியல் நடவடிýக்கையில" இறங்கிய திருமதி குமாரதுங்க, இந்தியாவுடனான பாதுகாப்பு உடன்படிýக்கை குறித்து நடவடிýக்கைகளை தீவிரப்படுத்துவதில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சிறில் ஹேரத் தலைமையிலான குழுவினரை இரு வாரங்களுக்கு முன்னர் புதுடிýல்லிக்கு அனுப்பிய திருமதி குமாரதுங்க, உடன்படிýக்கை ஏற்பாடுகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளையும் தீவிரப்படுத்தியிருந்தார்.
தங்களால் முன்வைக்கப்பட்ட பாதுகாப்பு உடன்படிýக்கை யோசனைகளைச் சாத்தியமாக்கி, ஜனாதிபதி பெயரெடுத்துக் கொண்டு அனுகூýலம் அடையப் போகின்றார் என்பதே, ஆளும் ஐக்கிய தேசிய முன்னணி தரப்பினருக்கு விசனத்தை ஏற்படுத்தியிருப்பதாகக் கூýறப்படுகிறது.
இந்தியாவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிýக்கையை செய்து கொள்வதன் அரசியல் அனுகூýலத்தை ஜனாதிபதி தரப்பு அடைந்துவிடக்கூýடாது என்பதில் பிரதமர் தரப்பு வெகு அக்கறையாக இருக்கிறது என்பதைச் சில அண்மைக்கால செயற்பாடுகளும் உணர்த்தி நிற்கின்றன. சிறில் ஹேரத் தலைமையில் அண்மையில் புதுடிýல்லிக்கு அனுப்பப்பட்டிýருந்த குழுவில் சட்ட மா அதிபர் திணைக்கள, திறைசேரி அதிகாரிகளோ உள்ளடக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிýக்கை செய்துகொள்வதை தாமதிக்குமாறு (தற்போதைய கொழும்பு அரசியல் நெருக்கடிý நிலையைக் காரணமாகக் காட்டிý) கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் ஊடாக பிரதமர் விக்கிரமசிங்க தரப்பினர் விடுத்த வேண்டுகோள்கள் எதிர்பார்த்த பலனைத் தராததையடுத்து, அமைச்சரவையின் முக்கிய உறுப்பினரான பொருளாதார மறுசீரமைப்பு, விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சர் மிலிந்த மொரகொடவை பிரதமர் அவசரமாக புதுடிýல்லிக்கு அனுப்பி, வைத்திருக்கிறார் என்று நம்பகமாகத் தெரிய வருகிறது.
இதன் பிரகாரம் புதுடிýல்லியில் நேற்றுச் சனிக்கிழமை காலை இந்திய வெளிவிவகார அமைச்சர் யஸ்வந்த் சின்ஹாவுடன் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தியிருக்கும் மிலிந்த மொரகொட, பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிýக்கை மற்றும் பல்வேறு அரசியல் விடயங்கள் குறித்துக் கலந்துரையாடிýயிருக்கிறார். மேற்படிý சந்திப்பில் அதிகாரிகள் மட்டத்திலான எவரும் கலந்து கொள்ளாத அதேசமயம், இது சம்பந்தமான செய்திகளைச் சேகரிக்க செய்தியாளர்கள் எவரும் கூýட அனுமதிக்கப்படவில்லையெனத் தெரிய வருகிறது.
இந்த இழுபறி நிலைமை குறித்து நேற்றுத் 'தினக்குரல்"க்குக் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி திருமதி குமாரதுங்கவிற்கு நெருக்கமான ஒருவர், இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு, பெப்ரவரி மாத இறுதியில் கைச்சாத்திடப்படுமென்றும், ஜனாதிபதியிடம் இதற்கான இணக்கத்தை புதுடிýல்லி அறிவித்திருக்கிறதென்றும் கூýறினார்.
ஜனாதிபதி மேற்கொண்ட இந்த நடவடிýக்கைகளுக்கு எதிராக இந்திய அரசியல் தலைமைத்துவத்திற்கு பிரதமர் தரப்பு பல்வேறு வழிகளில் அழுத்தத்தினை வழங்கினாலும் அவற்றைப் புதுடிýல்லி நிராகரித்திருப்பதாகச் சொன்ன அவர், பாதுகாப்பமைச்சர் மற்றும் நாட்டிýன் தலைவி என்ற அடிýப்படையில் ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு (பாதுகாப்பு ஒப்பந்தம்) ஒத்துழைப்பு வழங்குவதென்ற புதுடிýல்லியின் தீர்மானம் கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்தினூடாக ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளதென்றும் கூýறினார்.
மாகாண சபை அல்லது பொதுத் தேர்தலொன்று வரும் சூýழ்நிலையில், இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு உடன்படிýக்கையினை ஜனாதிபதி மேற்கொண்டால், அது அவருக்கு தென்னிலங்கை மக்கள் மத்தியில் செல்வாக்கை உருவாக்கிவிடுமென ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் அச்சப்படுவதாக அரசியல் விமர்சகர் ஒருவர் கருத்து வெளியிட்டார்.
நன்றி: தினக்குரல்.