Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
இலண்டனில், நெல்லியடி ம.ம.வி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல்
#1
யாழிலுள்ள பிரபல பாடசாலைகளில் ஒன்றான நெல்லியடி மத்திய மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் வரும் சனிக்கிழமை மாலை "Croydon" பகுதியிலுள்ள "Lanfrank School" மண்டபத்தில் நடைபெற உள்ளது.

ஒரு காலத்தில் யாழிலுள்ள பாடசாலைகளில் அழகிய கட்டடங்கள், பாரிய மண்டபங்கள், பாரிய விவசாய/கால்நடை பீடம், விளையாட்டு ஸ்ரேடியம் என்று எல்லாவாற்றையும் ஒருங்கே கொண்டிருந்த கல்லூரியாகும். பின் இலங்கைப்படைகளின் முகாமாக்கப்பட்டு சிதைவுற்ற இக்கல்லூரி, கப்ரன் மில்லரின் வரலாற்றுடன் மீட்டெடுக்கப்பட்டதும், இன்று அரச உதவிகள் பாரியளவில் இல்லாதிருந்தும் மீண்டும் எழ முற்படுகிறது.

வடமராட்சிப் பகுதியிலுள்ள ஏனைய பிரபல பாடசாலைகளான "காட்லிக் கல்லூரி, மெதடிஸ் பெண்கள் கல்லூரி, சிதம்பராக் கல்லூரி" போன்றன இராணுவ முகாங்களுக்குள் முடங்கிய நிலையில் இன்று, அப்பிரதேசத்தினது கல்வித்தாகத்தினை நெல்லியடி மத்திய மகா வித்தியாலயமே பூர்த்தி செய்வது இங்கு குறிப்பிடத்தக்கது.
"
"
Reply


Messages In This Thread
இலண்டனில், நெல்லியடி ம.ம.வி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் - by Nellaiyan - 01-30-2006, 12:36 PM
[No subject] - by Mathan - 01-30-2006, 01:00 PM
[No subject] - by cannon - 02-05-2006, 01:56 PM
[No subject] - by ப்ரியசகி - 02-20-2006, 07:05 PM
[No subject] - by Mathan - 02-20-2006, 07:21 PM
[No subject] - by Selvamuthu - 02-20-2006, 07:24 PM
[No subject] - by ப்ரியசகி - 02-21-2006, 07:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)